உலக செய்திகள்
2019 முதல் பிரதமர் மோடி 21 வெளிநாட்டுப் பயணம்
புதுடெல்லி: நாடாளுமன்ற மாநிலங் களவையில் வெளியுறவு இணை அமைச்சர் வி.முரளீதரன் எழுத்து மூலம் அளித்த பதில் வருமாறு.. பிரதமர் மோடி 2019 முதல் 21 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார், இந்தப் பயணங்களுக்காக ரூ.22 கோடியே 76 லட்சத்து 76,934 செலவிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் 8 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார், 2019-ம் ஆண்டு முதல் இந்தப் பயணங்களுக்காக ரூ.6 கோடியே 24 லட்சத்து 31,424 செலவிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் 8 பயணங்களில் 7 பயணங்களை ராம்நாத் கோவிந்த் மேற்கொண்டார், … Read more
இந்தியாவுக்கு அடுத்த ஆண்டு செல்ல திட்டமிட்டிருப்பதாக அறிவித்த போப் பிரான்சிஸ்..!
இந்தியாவுக்கு அடுத்த ஆண்டு சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டிருப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். 2017ம் ஆண்டு இந்தியாவுக்கு வரும் அவரின் திட்டம், கடைசி நேரத்தில் ரத்தானது. இந்நிலையில் தெற்கு சூடானில் இருந்து ரோம் நகருக்குச் செல்லும் வழியில் அவர் தனது அடுத்த பயணத் திட்டங்கள் குறித்து பேசினார். அப்போது, வரும் ஆகஸ்ட் மாதம் உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு போர்ச்சுக்கல் நாட்டின் லிஸ்பன் நகருக்குச் செல்லவிருப்பதாகக் குறிப்பிட்டார். அதன் பின்னர், மங்கோலியாவுக்கு முதன்முதலாக செல்ல இருப்பதாகக் குறிப்பிட்ட போப் … Read more
தமிழர்களுக்கான அதிகார பகிர்வு: இலங்கை அதிபரிடம் வலியுறுத்தல்| Power sharing for Tamils emphasized to the President of Sri Lanka
கொழும்பு-இலங்கையில், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் ௧௩வது சட்ட திருத்தம் குறித்து, அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கேயிடம் பேச்சு நடத்திய, நம் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளீதரன், அச்சட்டத்தை விரைவில் அமல்படுத்தும்படி வலியுறுத்தினார். நம் அண்டை நாடான இலங்கையில் நேற்று முன்தினம் ௭௫வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், நம் நாட்டின் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் பங்கேற்றார். அன்று மாலை, அமைச்சர் முரளீதரன், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேயை சந்தித்து பேசினார். … Read more
சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா: இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரிப்பு
வாஷிங்டன்: வானிலை ஆராய்ச்சி என்ற பெயரில் உலகின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான உளவு பலூன்களை சீனா பறக்க விட்டிருக்கிறது. கடந்த ஜனவரி 28-ம் தேதி சீன உளவு பலூன், அமெரிக்க வான் பரப்பில் நுழைந்தது. இந்த பலூன் கடந்த 3-ம் தேதி அமெரிக்காவின் மான்டனா மாகாண பகுதிக்கு மேலே பறந்தது. அப்பகுதியில் உள்ள மால்ஸ்ட்ரோம் விமானப் படைத் தளத்தில் அமெரிக்காவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த … Read more
உளவு பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா: விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனா எச்சரிக்கை| China warns that America will face consequences for shooting down the spy plane
வாஷிங்டன்,-அமெரிக்காவில் பறந்த சீன உளவு பலுானை, அமெரிக்க ராணுவ போர் விமானம் நேற்று சுட்டு வீழ்த்தியது. அட்லான்டிக் கடலில் வீழ்ந்த பலுானின் பாகங்கள் மற்றும் அதில் இருந்த கருவிகளை மீட்டெடுக்கும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. இந்த தாக்குதலை கண்டித்துள்ள சீன அரசு, ‘விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என, எச்சரித்து உள்ளது. அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனின் மோண்டானா என்ற அணுசக்தி ஏவுதளத்தின் மீது, வெள்ளை நிற பலுான் பறந்ததை, அமெரிக்க ராணுவம் கடந்த சில நாட்களாக கண்காணித்து … Read more
சிலியில் வேகமாக பரவும் காட்டுத் தீ பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு| Death toll from Chiles fast-spreading wildfires rises to 22
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சாண்டியாகோ-சிலியில், வரலாறு காணாத வெப்பத்தால் வனப்பகுதிகளில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதில் பலியானோர் எண்ணிக்கை, 22 ஆக அதிகரித்துள்ளது. தென் அமெரிக்க நாடான சிலியில் ஒரு வாரத்துக்கும் மேலாக வனப்பகுதிகளில் காட்டுத் தீ பயங்கரமாக எரிந்து வருகிறது. ௧௫௦ இடங்களில் காட்டுத் தீ எரிந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் நிலவரப்படி, ௨௫௧ இடங்களில் தீப்பிடித்து எரிந்து வருகிறது. இச்சம்பவத்தில் உயிர்ப்பலி நேற்று ௨௨ ஆக உயர்ந்தது. மேலும், … Read more