பாக்., முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் துபாயில் காலமானார்| Pakistans former military ruler Pervez Musharraf passed away in Dubai

இஸ்லாமாபாத்,-பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளரும், கார்கில் போருக்கு காரணகர்த்தாவுமான பர்வேஸ் முஷாரப், 79, துபாயில் நேற்று காலமானார். புதுடில்லியில், 1943 ஆக., 11ல் பிறந்தவர் பர்வேஸ் முஷாரப். இந்தியா – பாக்., பிரிவினைக்கு பின் அவரது குடும்பம் கராச்சிக்கு குடிபெயர்ந்தது. பாக்.,கின் குவெட்டாவில் உள்ள ராணுவ கல்லுாரியில் படித்து, 1964ல் அந்நாட்டு ராணுவத்தில் சேர்ந்தார். கடந்த 1965, 1971ல் நடந்த இந்தியா – பாக்., போரில் இவர் பங்கேற்றுள்ளார். படிப்படியாக உயர்ந்து பாக்., ராணுவ தளபதியானார். ஒப்பந்தம் … Read more

பாகிஸ்தானில் தொடரும் குண்டுவெடிப்பு..பலர் படுகாயம்..மக்கள் பீதி.!

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட டிடிபி கமாண்டர் உமர் காலித் குராசானிக்கு பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பாகிஸ்தானின் வடமேற்கு பெஷாவர் நகரில் உள்ள உயர் பாதுகாப்பு மண்டலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதிய பிரார்த்தனையின் போது வழிபாட்டாளர்கள் நிரம்பியிருந்த மசூதிக்குள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. மதியம் 1.40 மணியளவில் போலிஸ் லைன்ஸ் பகுதியில் உள்ள மசூதிக்குள் காவல்துறை, ராணுவம் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் படையினர் உட்பட 400க்கும் மேற்பட்ட காவல்துறையைச் சேர்ந்த வழிபாட்டாளர்கள் … Read more

ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம்: கைதானவர்களுக்கு ஈரான் தலைவர் அயத்துல்லா மன்னிப்பு!

தெஹ்ரான்: ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்கள் உட்பட 10,000 பேருக்கு மன்னிப்பு வழங்க இருப்பதாக ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார். இது தொடர்பான செய்தியை ஈரான் அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது. எனினும் இந்த மன்னிப்பை நிபந்தனைகளுடன் அயத்துல்லா வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. மன்னிப்பின் முழுவிவரம் இதுவரை வெளிவரவில்லை. மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. மூன்று … Read more

சீனாவில் இன அழிப்பு; உய்குர் முஸ்லீம்களை குடியேற்ற கனடா ஒப்புதல்.!

சீனாவின் வடமேற்கில் ஜின்ஜியாங் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உய்குர் இனத்தை சேர்ந்த சுமார் 1.2 கோடி முஸ்லிம்கள் வசிக்கின்றனர். கடந்த 20ஆம் நூற்றாண்டில் ஜின் ஜியாங் பகுதி சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 1949ஆம் ஆண்டில் சீன ராணுவம் ஜின்ஜியாங்கை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அப்போது முதலே சீன ராணுவத்தை எதிர்த்து உய்குர் முஸ்லிம்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களை ஓடுக்க சீன அரசு அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது. சுமார் 10 … Read more

சிலியில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் பயங்கர காட்டுத் தீ: 22 பேர் பலி

சான்டியாகோ: தென் அமெரிக்க நாடான சிலியில் காட்டுத் தீயினால் இதுவரை 22 பேர் வரை பலியாகியுள்ளனர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ தென் அமெரிக்க நாடான சிலியில், கடந்த சில நாட்களாக 100க்கும் அதிகமான காட்டுப் பகுதிகளில் தீ பிடித்தது. காட்டுத் தீ காரணமாக இதுவரை 22 பேர் பலியாகினர். காட்டுத் தீயை அணைக்க பல்வேறு நடவடிக்கைகளில் சிலி அரசு ஈடுபட்டு வருகிறது. விமானம் மூலம் தண்ணீர், ரசாயனம் ஆகியவை காட்டுத் தீ அதிகம் உள்ள இடங்களில் … Read more

உளவு பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா: பதிலடி கொடுக்கப்படும் என சீனா எச்சரிக்கை

பெய்ஜிங்: சீனாவின் உளவு பலூன் என்று அறியப்பட்டு வந்த பலூனை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளதோடு இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. முன்னதாக அமெரிக்காவின் மோண்டானாவில் உள்ள அணு ஆயுத ஏவுதளத்தின் மேலே சீனாவின் உளவு பலூன் ஒன்று பறப்பதாக அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்தது. அந்த பலூன் நிச்சயம் ரகசியமான தகவல்களை சேகரிப்பதற்காக வந்ததாக நம்புவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது. மேலும் மக்களின் … Read more

சீனா உளவு பலூன்களை சுட்டுத்தள்ளிய அமெரிக்கா; எதிர்வினை மோசமாக இருக்கும்.!

அமெரிக்காவைவிடவும் வலுவான பொருளாதாரமாக வளரும் சாத்தியங்களுடன் சீனா இருந்து வருகிறது. உலக நாடுகளின் சூப்பர் பவராக நினைத்துக்கொள்ளும் அமெரிக்கா அதற்குப் போட்டியாக வளரும் சீனாவின் வளர்ச்சியை விரும்பவில்லை. மேலும் சீனா – அமெரிக்கா இடையே சர்வதேச அரங்கில் வர்த்தக போட்டி வலுவாக மாறி உள்ளது. இதன் எதிரொலிதான் தொடர்ச்சியாக சீனாவுக்கு எதிரான நிலைப்பாடுகளை அமெரிக்கா அவ்வப்போது எடுத்து வருகிறது. இந்தநிலையில் சமீபத்தில் சீனாவை உளவு பார்க்கை அமெரிக்கா பலூன் வடிவில் நுண்ணறிவு கருவிகளை அனுப்பியது. அது குறித்து … Read more

இலங்கையில் சமையல் கியாஸ் விலை மீண்டும் கடும் உயர்வு..!

இலங்கையில் சமையல் கியாஸ் விலை மீண்டும் கடும் உயர்வை சந்தித்துள்ளது. சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் லிட்ரா கேஸ் என்ற பெயரில், இலங்கையின் 85 சதவீத கியாஸ் விநியோகத்தை தன்வசம் வைத்துள்ளது. இந்நிலையில் பனிரெண்டரை கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை இலங்கையின் பணத்தில் மேலும் 334 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 743க்கு விற்பனை செய்கிறது. இதேபோன்று, 5 கிலோ எடை கொண்ட கியாஸ் விலையை ஆயிரத்து 904 ரூபாயாகவும், இரண்டு கிலோ … Read more

காட்டு தீயை அணைக்க சர்வதேச நாடுகள் உதவி கரம் நீட்டக் சிலி நாடு கோரிக்கை..!

சிலி நாட்டில் பற்றி எரியும் காட்டுத் தீயில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிலியின் தென்மேற்குப் பகுதியில் வெப்ப அலை காரணமாக அங்குள்ள காடுகளில் தீப்பற்றி கொளுந்து விட்டு எரிந்த வண்ணம் உள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் உள்ள மரங்கள் தாவரங்கள் தீயில் எரிந்து அழிந்து வருகின்றன. இதற்கிடையில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் சிலி அரசு தவித்து வருகிறது. இதனை அடுத்து காட்டுத் தீயை அணைப்பதற்கு சர்வதேச நாடுகள் … Read more

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: அந்தமான் முன்னாள் தலைமை செயலாளர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்| Gang rape of teenage girl: Chargesheet filed against former chief secretary of Andaman

போர்ட் பிளேயர்: இளம்பெண் பாலியல் வன்கொடுமை தொடர்பாக, அந்தமான் முன்னாள் தலைமை செயலாளர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யபட்டது. அந்தமானில், 12 வயது இளம்பெண் ஒருவர், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, முன்னாள் தலைமைச் செயலர் ஜிதேந்திர நரைன் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு, ஜிதேந்திர நரைன் உட்பட உயரதிகாரிகள் சிலர் சேர்ந்து, அப்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு சம்பந்தமாக, அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு, ஜிதேந்திர நரைனிடம் மூன்று … Read more