பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது கைது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சரும் அவாமி முஸ்லிம் லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ரஷீத் அகமது கைது செய்யப்பட்டுள்ளார். ஷேக் ரஷீத் அகமது கைது: பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சரும் அவாமி முஸ்லிம் லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ரஷீத் அகமது இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாகவும், அவரது வாகனத்தில் இருந்து மது பாட்டிலும், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், ஷேக் ரஷீத் அகமது போதையில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கைதுக்கான … Read more

ஆஸ்திரேலியாவில் காணாமல் போன ஆபத்தான கதிர்வீச்சு கேப்சூல் ஒருவாரத்துக்குப் பின்னர் மீட்பு..!

ஆஸ்திரேலியாவில் மாயமான கதிர்வீச்சு அபாயமுள்ள கேப்சூலை அந்நாடு ஒருவாரம் கழித்து மீட்டது. கதிரியக்க பாதிப்பு ஏற்பட்டால் தோல் சேதம் மற்றும் கதிர்வீச்சு நோயை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. கடந்த வாரம் காப்ஸ்யூல் காணாமல் போனதாக தகவல் வெளியானதும் உடனடியாக தேடுதல் பணி தொடங்கப்பட்டது. இறுதியில் சிறப்பு டிடெக்டர்கள் பொருத்தப்பட்ட வாகனம் மூலம் காப்ஸ்யூல் கண்டுபிடிக்கப்பட்டது. Source link

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64.77 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.63 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,763,229 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் … Read more

பார்வையற்றோருக்கு உதவும் ‘ரோபோ நாய்’ அறிமுகம்.. ஸ்பெயின் ஆய்வாளர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு..!

கண்பார்வை அற்றோருக்காக செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ”ரோபோ நாய் நாயை” ஸ்பெயின் ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளனர். “டெஃபி” என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோ நாய், எதிரே வரும் வாகனங்கள், மனிதர்களை தனித்தனியாக அடையாளம் காண்கிறது. இதில் உள்ள கேமிராக்கள் சாலைகளில் உள்ள சிக்னல்களை புரிந்துக் கொண்டு கூகுள் மேப் உதவியுடன் சரியாக வழிகாட்டும். அலுவலகம், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் செல்வதற்கும் இது பேருதவியாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். Source link

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளி நிக்கி ஹாலே போட்டி..?

வாஷிங்டன், அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024) நவம்பர் 5-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. ஆனால் இப்போதில் இருந்தே அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் ஜனநாயக காட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல் கடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். அவர் தேர்தலில் போட்டியிடுவதை முறைப்படி அறிவித்து, தேர்தலுக்கான பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார். இந்த நிலையில் 2024 ஜனாதிபதி தேர்தலில் … Read more

பாகிஸ்தானில் கடந்த 48 ஆண்டுகளில் இல்லாத வகையில் பணவீக்கம் 27.55 சதவீதம் அதிகரிப்பு..!

கடந்த 48 ஆண்டுகளில் இல்லாத அளவாக பாகிஸ்தானின் பணவீக்கம் 27 புள்ளி 55 சதவீதமாக ஆக உயர்ந்துள்ளது. நெருக்கடியான நேரத்தில் கடன் தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க IMF பிரதிநிதிகள் பாகிஸ்தானுக்கு வந்துள்ளனர். நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து, வெளிநாட்டுக் கடன்கள் அதிகரித்துள்ளன. செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை காரணமாக துறைமுகங்களில் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை நீடித்து வருகிறது. பாகிஸ்தானின் நாணய மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளதால், பெட்ரோல் மற்றும் எண்ணெய் விலையை … Read more

ஜெர்மனி: தன்னை போலவே உருவம் கொண்ட பெண்ணை தேடிப்பிடித்து கொலை செய்த மாடல் அழகி: காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்

பெர்லின், ஜெர்மனியை சேர்ந்த 23 வயதான மாடல் அழகி ஷஹ்ரபான் கே. ஈராக் வம்சாவளியான இவர் இன்ஸ்டாகிராமில் அழகு குறிப்புகளை வழங்கி பிரபலமாக விளங்கி வந்தார். திருமாணமாகி விவாகரத்து பெற்ற இவர் ஷேகிர் கே (வயது24) என்ற இளைஞரை காதலித்து வந்தார். இந்த சூழலில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஷஹ்ரபான் தனது பெற்றோரிடம் தான் தனது முன்னாள் கணவரை சந்திக்கப்போவதாக கூறி விட்டு வீட்டில் இருந்து சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. … Read more

பிரதமர் மோடி ஜூன் – ஜூலை மாதத்தில் அமெரிக்கா பயணம்.. அதிபர் பைடன் வெள்ளை மாளிகையில் அளிக்கும் விருந்தில் பங்கேற்பு..!

வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பிரதமர் மோடி அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ளார். அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அரசுமுறைப் பயணமாகச் செல்லும் பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் ஜோ பைடனும் இருதரப்பு உறவுகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்துவார். 2009 இல் அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு விருந்தளித்தார். ஜோபைடன் அதிபரான பின் பிரான்ஸ் அதிபர் மேக்ரன் மட்டுமே அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இதுவரை அமெரிக்க அதிபர்களை … Read more

பெஷாவர் மசூதி தற்கொலை படை தாக்குதல் சம்பவம்: 17 பேர் கைது| Peshawar Mosque Suicide Squad Attack: 17 Arrested

பெஷாவர் : பாகிஸ்தான் மசூதியில் தொழுகையின்போது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 101 பேர் பலியாகினர். இச்சம்பவத்தில், சந்தேகத்துக்கு உரிய ௧௭ பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் போலீஸ் குடியிருப்புப் பகுதியில் உள்ள மசூதியில் ஜன., ௩௦ம் தேதி நடைபெற்ற மதிய வேளை தொழுகையின் போது, தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், மசூதியின் கூரை பெயர்ந்து விழுந்து பலத்த சேதமடைந்தது. இத்தாக்குதலில், 97 போலீஸ் … Read more

பிரேசிலில் சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: பச்சிளம் குழந்தை உள்பட 7 பேர் பலி

சாவ் பாலோ, பிரேசில் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சாண்டா கேடரினா மாகாணத்தின் தலைநகர் புளோரியானோபோலிசிஸ் நகரில் இருந்து, போஸ் டூ இகுவாகு நகருக்கு சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 54 இருந்தனர். இந்த பஸ் அங்கு பரானா என்ற நகரில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பஸ் சாலையில் தறிக்கெட்டு ஓடியது. பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் மரண ஓலமிட்டனர். டிரைவர் பஸ்சை … Read more