இஸ்ரேல் துறைமுக கட்டுமான டெண்டரை பெற்றது அதானி குழுமம்| Adani Group wins Israel port construction tender

புதுடில்லி: அமெரிக்க முதலீட்டு நிறுவனம் அதானி குழுமத்தின் மீது குற்றச்சாட்டை வைத்துள்ள நிலையில், இஸ்ரேலின் முக்கிய துறைமுக கட்டுமான திட்டத்திற்கான டெண்டரை அதானி குழுமத்திற்கு அந்நாட்டு அரசு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான ஹிண்டன்பரக் ரிசர்ச், என்ற நிறுவனம் தொழிலதிபர் அதானி குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை கடந்த 24-ம் தேதி அறிக்கையாக வெளியிட்டது. இந்நிலையில் இஸ்ரேலில் ”ஹைபா” துறைமுக கட்டுமான மேம்பாட்டினை மேற்கொள்வதற்கான டெண்டரை அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதானி குழுமத்திற்கு … Read more

”கூகுளின் பணி நீக்கத்தில் இது ஒரு ரகம்..” ஒருமாத பெண் குழந்தைக்கு புட்டி பால் புகட்டிக் கொண்டிருந்த போது பணிநீக்கம்..!

தனது ஒருமாத பெண் குழந்தைக்கு புட்டி பால் புகட்டிக் கொண்டிருந்த போது தான் கூகுள் நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான இ-மெயில் செய்தியை தெரிந்துக் கொண்டேன் என்று சமூகவலைத்தளத்தில் கூகுள் ஊழியர் பகிர்ந்துள்ளார். பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு உள்ளானவர்கள், தங்களது பணிநீக்க அறிவிப்பை எவ்வாறு பெற்றார்கள் என்பதை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த நிக்கோலஸ் டுஃபாவ் என்ற கூகுள் சட்டப்பணியாளர், அதிகாலை 2 மணிக்கு பணிநீக்க செய்தியை அறிந்ததாக … Read more

அமெரிக்காவில் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்த போல்சனாரோ – பின்னணி என்ன?

நியூயார்க்:பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஆறு மாத கால அமெரிக்க சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேசிலில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் போல்சனரோ தோல்வியடைந்தார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரேசிலின் புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால், வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்ததால் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், … Read more

பாகிஸ்தான் மசூதிக்குள் தற்கொலைப்படை தாக்குதல்; 93பேர் உயிரிழப்பு.!

பாகிஸ்தானின் அமைதியான வடமேற்கு பெஷாவர் நகரில் உள்ள உயர் பாதுகாப்பு மண்டலத்தில் நேற்று மதிய பிரார்த்தனையின் போது வழிபாட்டாளர்கள் நிரம்பியிருந்த மசூதிக்குள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. தன்னைத்தானே வெடிக்கச் செய்ததாக சந்தேகிக்கப்படும் தற்கொலை குண்டுதாரியின் துண்டிக்கப்பட்ட தலையை மீட்பு அதிகாரிகள் இன்று மீட்டனர். தற்கொலைப்படை தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்தது, மேலும் 221 பேர் பலத்த காயம் அடைந்தனர். இடிபாடுகளில் இருந்து மீதமுள்ள உடல்களை மீட்க மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தாலும், போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். … Read more

பாகிஸ்தான் மசூதி குண்டுவெடிப்பு: இந்தியா கடும் கண்டனம்

புதுடெல்லி: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பெஷாவர் நகரில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று நடைபெற்ற மதிய நேர தொழுகையின்போது நிகழ்ந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 93 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் காவல்துறை மற்றும் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. பாதுகாப்புப் படையினர் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள மசூதி என்பதால், … Read more

உக்ரைனுக்கு 60 பிராட்லி கவச வாகனங்களை அனுப்பியது அமெரிக்கா

ரஷ்ய படைகளை எதிர்த்து போரிட ராணுவ உதவிகளை வழங்கும் ஒரு பகுதியாக, அமெரிக்கா உக்ரைனுக்கு 60 பிராட்லி ரக கவச வாகனங்களை அனுப்பியுள்ளது. உக்ரைனுக்கு தற்போது அதிக திறன் கொண்ட ஆயுதங்கள் தேவைப்படுவதால், ஹிமார்ஸ் ராக்கெட் லாஞ்சர்கள், மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட அதி நவீன ஆயுதங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டன. இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தில் 1980ம் ஆண்டு முதல் வீரர்களை போர்க்களங்களுக்கு அழைத்துச் செல்ல பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வரும், சக்திவாய்ந்த துப்பாக்கி பொருத்தப்பட்ட பிராட்லி கவச … Read more

பாக்.,ல் பலி 61 ஆக உயர்வு| Death toll rises to 61 in Pakistan

பெஷாவர் : பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையொட்டிய பெஷாவர் நகரிலுள்ள மசூதியில் நேற்று நடந்த தொழுகையின் போனது மனிதவெடிகுண்டு தாக்குல் நடந்தது. இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்தது. காயமுற்றோர் எண்ணிக்கை 150 ஆனது. (முன் வந்த செய்தி மற்றொரு பக்கத்தில்) பெஷாவர் : பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையொட்டிய பெஷாவர் நகரிலுள்ள மசூதியில் நேற்று நடந்த தொழுகையின் போனது மனிதவெடிகுண்டு தாக்குல் நடந்தது.இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe … Read more

கொரோனா அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா முடிவு

அமெரிக்காவில் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வர, அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு அந்நாட்டில் கொரோனா பரவல் தொடங்கியபோது அப்போதைய அதிபர் டிரம்ப், தேசிய அவசர நிலை மற்றும் பொது சுகாதார அவசர நிலையை அறிவித்தார். பின்னர், 2021ம் ஆண்டு அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதில் இருந்து, அவசர நிலை நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்திருப்பதால், மே 11ம் … Read more

பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து-3 சிறுவர்கள் உள்பட 4 பேர் பலி

பிரேசிலில், பேருந்து பாலத்திலிருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஜூனியர் கால்பந்து அணியை சேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். அலெம் பரைபா (Alem Paraiba) நகரில் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்திலிருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 28 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். Vila Maria Helena கால்பந்து கிளப்பை சேர்ந்த அணிகள், கோபா தேசிய போட்டியில் கோப்பையை வென்று திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. Source … Read more