பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 72ஆக உயர்வு..!
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. பாதுகாப்பு மிகுந்த காவலர் குடியிருப்பு அருகே உள்ள மசூதியில் மதியத் தொழுகையின்போது பயங்கரவாதி, தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் மசூதியின் 2 மாடிகள் இடிந்து தரைமட்டமாகின. தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் பலர் நிலை கவலையளிக்கும் வகையில் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு ‘தெரீக்-இ-தாலிபன்’ அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. Source link