ஆஸ்திரேலியாவில் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் சீசியம் 137 மாயம்.. அதிகாரிகள் அச்சம்

ஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமான முறையில் உயிரிழப்பை ஏற்படுத்தும் கதிரியக்கப் பொருள் காணாமல் போனதால் அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர். சீசியம் 137 எனப்படும் இந்த கதிரியக்க பொருள், கடந்த 10ஆம் தேதிக்கும் 16ஆம் தேதிக்கும் இடையே நியூமன் நகரத்திற்கும் பெர்த் நகரத்திற்கும் இடையே காணாமல் போனது. சுரங்கத்தில் இருந்து லாரியில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்ட போது இந்த சிறிய கதிரியக்கக் குடுவை மாயமானதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சுமார் ஆயிரத்து 600 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேடுதல் வேட்டையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். … Read more

பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுத மாணவிகளுக்கு தடை: தலிபான்கள் அதிரடி உத்தரவு| Ban on female university entrance exams: Taliban orders action

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காபூல்: தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை, தலிபான் அரசு ஆட்சி செய்து வருகிறது. இங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெண்களை நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்கக் கூடாது என்று பல்கலைக்கழகங்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டத்திற்கான நுழைவுத் தேர்வில் பெண்கள் பங்கேற்க முடியாது. எந்தவொரு பல்கலைக்கழகமும் ஆணையை … Read more

பல்கலை. நுழைவுத் தேர்வில் பங்கேற்க மாணவிகளுக்குத் தடை… தனியார் பல்கலைக்கழகங்களுக்கு தாலிபான்கள் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெற உள்ள பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் மாணவிகளை பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என தாலிபான் அரசு மிரட்டல் விடுத்துள்ளது. இது தொடர்பாக வடக்கு மாகாணங்களில் உள்ள தனியார் பல்கலைக்கழங்களுக்கு, அந்நாட்டு உயர் கல்வி அமைச்சகம் விடுத்துள்ள சுற்றறிக்கையில், மாணவிகளை தேர்வு எழுத அனுமதிக்கும் பல்கலைக்கழங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தாலிபான்களின் இந்த அறிவிப்புக்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்துள்ளது. Source link

ஜெப ஆலய பயங்கரவாத தாக்குதல்: எங்களின் பதிலடி வலுவாகவும், வேகமாகவும் இருக்கும் – இஸ்ரேல் பிரதமர்

ஜெருசலேம், இஸ்ரேல்-பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையில் மிக நீண்டகாலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. 1967-ல் நடந்த மத்திய கிழக்கு போரின் போது பாலஸ்தீனத்தின் ஜெருசலேம் மற்றும் மேற்குகரை பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்து கொண்டது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் கடும் மோதல் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜெருசலேம் மற்றும் மேற்குகரை பகுதிகளில் பாலஸ்தீனத்தை சேர்ந்த போராளிகள் இஸ்ரேலில் அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இவர்களை ஒடுக்க இஸ்ரேல் அங்கு தீவிர ராணுவ … Read more

மலைப்பாதையில் சென்ற சுற்றுலா பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து.. 25 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு..!

தென் அமெரிக்க நாடான பெருவில் சுற்றுலா சென்ற பேருந்து மலைப்பாதையில் விழுந்து நொறுங்கியதில் 25 பேர் உயிரிழந்தனர். வடமேற்கு பெருவில் உள்ள பியூரா என்ற இடத்தில் இருந்து 60 பயணிகளுடன் சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டினை இழந்த பேருந்து மலைப் பாதையில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  Source link

ஈரானில் அஜர்பைஜான் தூதரகத்தில் துப்பாக்கிச்சூட்டில் ஊழியர் சாவு; ஐ.நா. கண்டனம்

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அஜர்பைஜான் நாட்டின் தூதரகம் உள்ளது. நேற்று முன்தினம் இந்த தூதரகத்துக்கு காரில் வந்த மர்ம நபர் ஒருவர் தூதரகம் முன் நிறுத்தப்பட்டிருந்த ஊழியரின் கார் மீது மோதினார். தொடர்ந்து காரில் இருந்து துப்பாக்கியுடன் இறங்கிய அந்த மர்ம நபர் அதிரடியாக தூதரகத்துக்குள் நுழைந்தார். அப்போது தூதரகத்தின் தலைமை பாதுகாவலர் மற்றும் பிற பாதுகாவலர்கள் அவரை தடுத்து நிறுத்த முற்பட்டனர். அவர்களை அந்த மர்ம நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் தலைமை பாதுகாவலர் … Read more

ஈரானில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு – 2 பேர் பலி

தெஹ்ரான், ஈரானில் உள்ள கோய் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் (USGS) தெரிவித்துள்ளது. அந்நாட்டு நேரப்படி நேற்று இரவு 23.44 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு தேசிய நிலநடுக்க நெட்வொர்க் தளத்தில் இதன் அளவு 5.9 ரிக்டர் அளவாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் விளைவாக இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 70 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானிய செய்தி நிறுவனமான IRNA தகவல் … Read more

பெற்றோருக்கு வெளியுலகை காட்டுங்கள் – சிங்கப்பூரில் பணியாற்றும் இளைஞர் வேண்டுகோள்

சிங்கப்பூர்: வெளிநாடுகளுக்கு செல்வோர், பெற்றோருக்கும் வெளியுலகை காட்ட வேண்டும் என சிங்கப்பூரில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இணையத்தில் சுவாரஸ்ய கதைகள் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்றன. சிங்கப்பூரில் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றும் தத்தாத்ரே என்ற இளைஞர் தனது தாயுடன் சிங்கப்பூரில் இருக்கும் படத்தை வெளியிட்டு கூறியிருப்பதாவது: எனது தாய் தனது வாழ்க்கை முழுவதும் அவர் சொந்த கிராமத்திலேயே கழித்தார். விமானத்தை அவர் அருகில் இருந்து பார்த்தது கூட இல்லை. எனது தாயை, நான் … Read more

மியான்மரில் கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

யாங்கூன், மியான்மர் நாட்டின் மோன் மாகாணத்தில் உள்ள யே டவுன்ஷிப் நகரில் சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இறந்தவர்களில் இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை அடங்குவதாகவும், அவர்கள் தனிந்தாய் பிராந்தியத்தின் யெபியூ டவுன்ஷிப்பிற்குத் திரும்பும் போது விபத்தில் சிக்கியதாகவும் மீட்புப் பணியாளர் ஒருவர் … Read more