சட்டவிரோத மருந்து கடத்தல் இந்தியருக்கு 7 ஆண்டு சிறை| 7 years in jail for illegal drug smuggling Indian

வாஷிங்டன்,-அமெரிக்காவில், சட்டவிரோத மருந்துகளை, இந்தியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து கடத்திச் சென்று விற்றதாக, இந்திய இளைஞருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் பங்குதாரராக இருந்தவர் மணிஷ் குமார், ௩௪. இவர், பல்வேறு நிறுவனப் பெயர்களில் சட்டவிரோத மருந்துகளை தயாரித்து, இந்தியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து அமெரிக்காவுக்கு கப்பலில் ஏற்றுமதி செய்துள்ளார். இந்த மருந்துகள் அனைத்தும் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டவை. இவற்றை டாக்டர்களின் மருந்து … Read more

100 பயங்கரவாதிகள் பலி சோமாலியாவில் அதிரடி| Action in Somalia kills 100 terrorists

மொகாதிசு,-சோமாலியாவில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்க, அந்நாட்டு ராணுவத்தினர் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான சோமாலியாவில், ‘அல் – குவைதா’ பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ‘அல்- – ஷபாப்’ அமைப்பு, மத்திய மற்றும் தெற்கு சோமாலியா பகுதிகளை கைப்பற்றியுள்ளது. இது, பிற பகுதிகளையும் கைப்பற்ற பொதுமக்கள், ராணுவம் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த அமைப்புக்கு எதிராக, … Read more

அமெரிக்காவில் ஹிந்து கோவிலில் திருட்டு| Theft at a Hindu temple in America

ஹூஸ்டன்,-அமெரிக்காவில் கோவிலுக்குள் புகுந்து விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் உண்டியல் பணம் திருடப்பட்டதை அடுத்து, அங்குள்ள ஹிந்துக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்காவில், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிரசோசில் வசிக்கும் இந்திய சமூகத்தினர், அங்கு ஓம்கார்நாத் கோவிலை கட்டி வழிபட்டு வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஒரே கோவில் இது தான். இதற்குள், ௧௧ம் தேதி இரவு புகுந்த மர்ம நபர், அங்கிருந்த உண்டியல் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடி தப்பிச் சென்றது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகி … Read more

இந்தியா சீனா இடையே சண்டை மூட்டும் நேட்டோ; ரஷ்ய அமைச்சர் குற்றச்சாட்டு.!

நேட்டோ என்பது வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உள்பட 12 நாடுகள் சேர்ந்து 1949இல் இந்த ராணுவ கூட்டு அமைப்பை உருவாக்கின. இதில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாடு மீது ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஓரணியாக சேர இணங்க வேண்டும். ஐரோப்பாவில் பனிப்போர் காலத்துக்குப் பிந்தைய ரஷ்ய விரிவாக்க அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நோக்கத்தையே இந்த அமைப்பு குறிக்கோளாகக் கொண்டிருந்தது. 1955இல் நேட்டோ கூட்டுப்படைக்கு … Read more

நியூஸி. பிரதமர் ஜெசிந்தா ராஜினாமா முடிவு செய்திக்கு தரக்குறைவான தலைப்பு: மன்னிப்புக் கோரிய பிபிசி

லண்டன்: நியூஸிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக வியாழன் அன்று தெரிவித்தார். அதனை உலக செய்தி நிறுவனங்கள் செய்தியாக வெளியிட்டன. உலக அளவில் கவனம் பெற்ற செய்தி நிறுவனமான பிபிசியும் இது குறித்து செய்தி வெளியிட்டது. ஆனால், அது பாலியல் பாகுபாட்டுடன் கூடிய தரக் குறைவான தலைப்பை வைத்து சர்ச்சையில் சிக்கியது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் பிபிசி தரப்பு மன்னிப்பு கோரியுள்ளது. “Can women have it … Read more

போரில் பயன்படுத்த உக்ரைனுக்கு அதிநவீன கவச வாகனங்கள் கனடாவில் தயாரிப்பு..!

உக்ரைனுக்கு வழங்க கனடாவில் அதிநவீன கவச வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு நிதி உதவி மட்டுமல்லாமல் பல்வேறு விதமான ராணுவ உதவிகளையும் கனடா தொடர்ந்து வழங்கி வரும் நிலையில், உக்ரைனுக்கு வழங்க 200 கவச வாகனங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு உயர் பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டு வரும் இந்த கவச வாகனங்கள், கோடையில் உக்ரைனுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Source link

லடாக்கில் நிலை கொண்டுள்ள படையினரிடம் சீன அதிபர் ஆலோசனை.!

இந்தியா சீனா இடையே பல காலமாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக் ஆகிய பிராந்தியங்கள் தங்களது நாட்டிற்கு சொந்தமானது என இரு நாடுகளும் உரிமை கோரி வருகின்றன. ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலகட்டத்தில் கடந்த 1962ம் ஆண்டு சீன போர் வெடித்தது. இதில் இந்தியா படுதோல்வி அடைந்து. இந்த தோல்வி குறித்த சிந்தனையிலேயே பிரதமர் நேரு உடல் நோய்வாய்ப்பட்டு இறந்ததாக வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் கூறிவருகின்றனர். இந்தநிலையில் கடந்த … Read more

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு | இலங்கை 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த இந்தியா வலியுறுத்தல்

கொழும்பு: இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வளிக்கும் 13-வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டின் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ”அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இலங்கை வலுவாக இருப்பதை இந்தியா எப்போதுமே ஆதரித்து வருகிறது. அதிகாரப் பகிர்வு தொடர்பான கேள்விக்கு அதிபர் … Read more

உலகின் தலைசிறந்த சி.இ.ஓ க்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 2-ம் இடம்.. முதல் 10 இடங்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் 6 பேர் உள்ளனர்..!

பிராண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் வெளியிட்ட உலகின் தலைசிறந்த சி.இ.ஓ க்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 2-ம் இடத்தைப் பிடித்துள்ளார். என்விடியா சி.இ.ஓ ஜென்சன் ஹுவாங் முதலிடம் பிடித்துள்ளார். இப்பட்டியலில் மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை போன்றவர்களை முகேஷ் அம்பானி பின்னுக்குத் தள்ளியுள்ளார். சத்யா நாதெல்லா 3-ம் இடத்திலும், சாந்தனு நாராயணன் 4-ம் இடத்திலும், சுந்தர் பிச்சை 5-ம் இடத்திலும் உள்ளனர். முதல் 10 இடங்களில் 6 பேர் … Read more

சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணம்: மன்னிப்பு கேட்ட ரிஷி சுனக்| UK PM Rishi Sunak Apologises For Removing Car Seat Belt

லண்டன்: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், 100க்கும் மேற்பட்ட புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்துவதற்காக காரில் பயணித்தபடி வீடியோ மூலம் பேசினார். அந்த வீடியோவில் ரிஷி சுனக், காரில் ‛சீட் பெல்ட்’ அணியாமல் பயணித்தபடி பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது வைரலாக பரவியதுடன், பிரதமரே சீட் பெல்ட் அணியாமல் காரில் சென்றதற்கு பலரும் விமர்சித்திருந்தனர். இந்த நிலையில், சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்காக ரிஷி சுனக் மன்னிப்பு கேட்டுள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் … Read more