நித்தியானந்தாவின் கைலாசாவுடன் ஒப்பந்தம் போட்டதா அமெரிக்கா? ஒப்பந்தத்தால் என்ன பயன்?

நியூடெல்லி: கைலசா என்ற தனது தனி நாட்டை, அமெரிக்கா, இறையாண்மை கொண்ட நாடாக அமெரிக்கா அங்கீகரித்துவிட்டதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார். அமெரிக்கா தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரபூர்வமான தகவலும் வெளியாகாத சூழலில், நகர மேயர் ஒருவரோடு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் சமூக ஊடகங்களில் இந்த தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றன. The United States of America signs bilateral agreement with United States of KAILASA#Kailasa #Newark #NJ #Bilateral #USA #Nithyananda pic.twitter.com/PjGd4cemZb — … Read more

வரி மோசடி செய்த டொனால்ட் டிரம்பின் நிறுவனங்களுக்கு 1.6 மில்லியன் டாலர் அபராதம்

நியூயார்க்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் நிறுவனத்திற்கு $1.6 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது, நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தனிப்பட்ட வருமானத்தை திரித்துக் காட்டி வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, வரி மோசடி செய்ததற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் நிறுவனத்திற்கு 1.6 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி ஏய்ப்பு விவகாரம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று டிரம்ப் மறுத்துள்ளார். சதி மற்றும் பொய்யான வணிகப் பதிவுகள் உள்ளிட்ட 17 குற்றங்களுக்காக … Read more

7 ஆண்டுகளுக்குப் பின் ஈரான்- சவுதி அரேபியா இடையே பேச்சுவார்த்தை.. இரு நாடுகளும் மீண்டும் தூதரகங்களைத் திறக்க முடிவு!

7 ஆண்டுகளுக்குப் பின் ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையே மீண்டும் தூதரகங்களைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சர் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் இரு நாடுகளின் கருத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். கடந்த 2016ம் ஆண்டுக்குப் பின் இருநாடுகளிடையே ஏற்பட்ட உயர்மட்டத் தொடர்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. Source link

கொரோனா அறிகுறி இருந்தால் 10 நாட்கள் தனிமை: உலக சுகாதார அமைப்பு சிபாரிசு

ஜெனீவா, உலக சுகாதார அமைப்பு, கொரோனா தொடர்பானதிருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டால், 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளது. அறிகுறி இல்லாவிட்டால், 5 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. தனிமைப்படுத்தும் காலத்தை குறைக்க விரைவு ஆன்டிஜென் பரிசோதனை செய்யுமாறும் தெரிவித்துள்ளது. தினத்தந்தி Related Tags : Corona symptoms World Health Organization Recommendation

அமெரிக்காவில் மீண்டும் சம்பவம்: கைது நடவடிக்கையின்போது கருப்பின வாலிபர் சாவு

வாஷிங்டன், அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கைது நடவடிக்கையின்போது ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தை சேர்ந்தவரை போலீசார் தரையில் தள்ளி அவரது கழுத்தில் கால் முட்டியை வைத்து பலமாக அழுத்தியதில் அவர் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணத்துக்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் மாபெரும் போராட்டம் வெடித்தது. இனவறிக்கு எதிரான ‘பிளாஸ் லைவ்ஸ் மேட்டர்’ என்கிற தன்னார்வ அமைப்பு இந்த போராட்டங்களை முன்னெடுத்தது. இந்த நிலையில் ஜார்ஜ் … Read more

புயல் பாதிப்புகளால் வெள்ளக்காடாக மாறிய கலிபோர்னியா மாகாணம்..!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மிக நீளமான சலினாஸ் நதியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், வெள்ள பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியாவை அடுத்தடுத்து தாக்கி வரும் புயலால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. வெள்ள பாதிப்புக்கு இதுவரை 19 பேர் பலியாகியுள்ள நிலையில், இந்த வார இறுதியில் மீண்டும் 2 புயல்கள் தாக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், சலினாஸ் நதியில் இருந்து வெளியேறிய நீர் மான்டேரி பகுதியில் உள்ள சாலையை … Read more

கொரோனாவை தடுக்கும் 'ஸ்பிரே' கண்டுபிடிப்பு

வாஷிங்டன், அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள என்ஜினீயர்கள், மெல்லிய நூல் போன்ற மூலக்கூறு இழைகளை கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக, கொரோனாவை உண்டாக்கும் வைரஸ், நாம் சுவாசிக்கும்போது நுரையீரல் வழியாக உடலுக்குள் நுழைந்து தொற்றை உண்டாக்குகிறது. இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த மூலக்கூறுகள், சுவாசப்பாதையிலேயே வைரசை தடுத்து விடும். அதன்மூலம், அது நுரையீரலை அடைவது தடுக்கப்பட்டு, கொரோனா ஏற்படாமல் தடுக்கலாம். வெற்றிகரமாக சோதனை இவர்கள் கண்டுபிடித்த மூலக்கூறுகள், பஞ்சு போல் செயல்பட்டு, கொேரானா வைரசையும், இதர வைரஸ்களையும் உறிஞ்சி … Read more

 உச்சம் தொட்ட இந்தியா – சீனா வர்த்தகம்: வரலாற்று உயர்வில் வர்த்தக பற்றாக்குறை | India-China trade peaks: Trade deficit at historic high

பீஜிங்-இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வர்த்தகம், கடந்த 2022ல், இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. கிட்டத்தட்ட 11.15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக, சீன சுங்கத் துறை தெரிவித்துள்ளது. 8.4 சதவீதம் அதிகரிப்பு மேலும், சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையும், முதன் முறையாக, 100 பில்லியன் டாலரை அதாவது, 8.20 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சீன சுங்கத் துறை மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஆண்டில், இந்தியாவுடனான வர்த்தகம், அதற்கு முந்தைய 2021ம் … Read more

உக்ரைன் போரில் பங்கேற்க மறுத்த ரஷிய ராணுவ வீரருக்கு 5 ஆண்டு சிறை

மாஸ்கோ, உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போர் இன்னும் சில வாரங்களில் ஓர் ஆண்டை நெருங்கவுள்ளது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் உருக்குலைந்து போயின. அதேவேளையில் இந்த போரில் ரஷியாவும் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. போரில் ஆயிரக்கணக்கான ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் போரில் இருந்து பின்வாங்காத ரஷியா தொடர்ந்து வீரர்களை அணிதிரட்டி போர் முனைக்கு அனுப்பிவருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உக்ரைன் போரில் பங்கேற்ற சுமார் … Read more

பிலிப்பைன்சில் இறைச்சியைவிட வெங்காயத்தின் விலை மூன்று மடங்கு அதிகம்

பிலிப்பைன்ஸ், பிலிப்பைன்ஸ் நாட்டின் உணவுகளில் வெங்காயம் அத்தியாவசியமான இடத்தை பிடித்துள்ளது. பெரும்பாலான உணவுப் பொருட்களில் வெங்காயம், பூண்டு ஆகியவை பிரதானமாக சேர்க்கப்படுகிறது. பிலிப்பைன்ஸில் மட்டும் சராசரியாக மாதத்திற்கு சுமார் 17,000 மெட்ரிக் டன் காய்கறிகள் தேவைப்படுகிறது. இந்த நிலையில்தான் மக்களின் முக்கிய காய்கறிகளில் ஒன்றான வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கிலோவுக்கு 600 பிசோஸ் (இந்திய மதிப்பு ரூ.887) என்ற விலையில் விற்கப்படுகிறது. இது கோழி இறைச்சியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு விலை அதிகம் … Read more