உகாண்டாவில் முடிவுக்கு வந்தது எபோலா வைரஸ் பரவல் – உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

உகாண்டாவில் எபோலா பரவல் முடிவுக்கு வந்ததாக, உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உகண்டாவில் கடந்த ஆண்டு இறுதியில் பரவிய எபோலா வைரஸிற்கு 55 பேர் உயிரிழந்தனர். கடந்த 42 நாட்களாக புதிதாக எபோலா வைரஸ் பாதிப்பு பதிவாகாததால் முடிவுக்கு வந்ததாக, உகண்டாவின் சுகாதார அமைச்சர் ரூத் அசெங் அறிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின்படி, ஒரு நாடு எபோலா வைரஸ் இல்லாத நாடாக அறிவிக்கப்பட வேண்டுமானால், 42 நாட்கள் புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்படாமல் இருக்க வேண்டும். Source … Read more

காத்திருங்கள்… 50,000 ஆண்டுகளுக்குப் பிறகு பூமியின் அருகில் வரும் பச்சை நிற வால் நட்சத்திரம்!

நியூயார்க்: 50,000 ஆண்டுகளுக்குப் பிறகு நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியிலிருந்து வால் நட்சத்திரம் ஒன்று பூமிக்கும், சூரியனுக்கு அருகில் வரவுள்ளது. ‘C/2022 E3’ என்ற பெயரில் அறியப்படுகிறது இந்த வால் நட்சத்திரம். பூமிக்கும் சூரியனுக்கும் அருகில் வரும் இந்த வால் நட்சத்திரத்தை ஜனவரி மாதம் இறுதியில் – பிப்ரவரி மாத தொடக்கத்திலிருந்து தொலைநோக்கிகள் மூலமும், பைனாகுலர் மூலமும் பார்க்கலாம். இந்த வால் நட்சத்திரத்தை இரவில் வானத்தில் பார்ப்பது கடினமானது. ஆனால், நமது சூரிய குடும்பத்தின் வழியாக நகரும்போது … Read more

‘இந்தியாவுடன் இணைய வேண்டும்’ – பாகிஸ்தானின் கில்ஜித் பல்திஸ்தானில் மாபெரும் மக்கள் போராட்டம்

ஸ்கார்டு(கில்ஜித் பல்திஸ்தான்): பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்ஜித் பல்திஸ்தான் மக்கள், தாங்கள் இந்தியாவுடன் இணைய விரும்புவதாகக் கூறி நடத்திய போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். پورے مُلک میں احتجاج ہو رہے ہیں اور ایک ایک احتجاج کو میڈیا سے بلیک آؤٹ کیا جا رہا ہے گلگت کے حالات ہیں یہ pic.twitter.com/pUihoZH9Mf — Abuzar Furqan (@AbuzarFurqan) January 7, 2023 ஜம்மு காஷ்மீரின் அங்கமாக … Read more

பாகிஸ்தானில் அதிகரிக்கும் உணவுப் பஞ்சம்: ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் அவலம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் உணவுக்காக மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் அவலச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.150, ஒரு கிலோ அரிசி ரூ.165, ஒரு கிலோ மைதா ரூ.135, ஒரு கிலோ பருப்பு ரூ.180, ஒரு கிலோ டீ தூள் ரூ.1100, ஒரு கிலோ சக்கரை ரூ.86, ஒரு லிட்டர் பால் ரூ.140, ஒரு லிட்டர் தயிர் ரூ.115, ஒரு கிலோ சமையல் … Read more

ஈஸ்டர் குண்டுவெடிப்பு..முன்னாள் ஜனாதிபதி 100 மில்லியன் இழப்பீடு வழங்க உத்தரவு.!

கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் உள்ள தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடந்தப்பட்டது. இலங்கையில் மொத்தம் 9 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 290க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது. இலங்கையில் இதுபோன்ற தாக்குதல் நடக்கவுள்ளதாக ஏப்ரல் 4ஆம் தேதி இந்திய உளவுத்துறை இலங்கையை எச்சரித்திருந்தது. அப்படி இருந்தும் … Read more

உக்ரைனில் போரிட மறுத்த வீரருக்கு சிறை; ரஷ்ய ராணுவ நீதிமன்றம் உத்தரவு.!

வரலாற்று ரீதியாக ரஷ்யாவின் ஒரு பகுதி உக்ரைன் என ரஷ்யா கூறிவருகிறது. ஆனால் தாங்கள் தனித்துவமானவர்கள் என உக்ரேனியர்கள் கூறிவருகின்றனர். இந்தநிலையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தனது நாட்டுப் படைகளுக்கு உத்தரவிட்டார். இதை அடுத்து கடந்த … Read more

பிலிப்பைன்ஸ்: இறைச்சியை விட வெங்காயம் விலை மூன்று மடங்கு அதிகம்

மணிலா: பிலிப்பைன்ஸில் இறைச்சியை விட வெங்காயம் மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவது அந்நாட்டு மக்களை கவலையடையச் செய்துள்ளது. பிலிப்பைன்ஸில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து உள்நாட்டு உற்பத்தி, விநியோகம் குறைந்து வருவதாலும், அதிகரித்து வரும் செலவுகளைக் கட்டுப்படுத்தவும் மார்ச் மாதத்திலிருந்து சுமார் 22,000 டன் காய்கறிகளை பிலிப்பைன்ஸில் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்று விவசாய நல அமைப்புகள் கூட்டாக தெரிவித்துள்ளன. தென்கிழக்கு ஆசிய நாட்டின் உள்ளூர் உணவுகளில் வெங்காயம் பிரதானமாக உள்ளது. … Read more

கொரோனா பலி எண்ணிக்கையை சொல்லாத சீனாவின் திட்டம் என்ன? WHO கவலை

நியூடெல்லி: சீனாவில் உற்பத்தியான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் களியாட்டம் போட்டு, இன்னும் அடங்காமல் வெவ்வேறு அவதாரங்களை எடுத்து உலகையே அச்சத்தில் ஆழ்த்தி வரும் நிலையில், சீனாவில் மட்டும் இன்னும் வைரஸின் தாக்குதல் கட்டுக்குள் அடங்காமல் தலைவிரித்தாடுகிறது. ஆனால், கோவிட் மூலம் நாட்டில் ஏற்படும் மரணத்தை வரையறுக்க சீனா பயன்படுத்தும் அளவுரு தொடர்பாக உலக சுகாதார அமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.   புதன்கிழமையன்று சீனாவின் கொரோனா பாதிப்பு மற்றும் கோவிட் இறப்புகள் பற்றி கவலை உலக சுகாதார அமைப்பு … Read more

ஆண் மருத்துவர்களை அணுகக் கூடாது – பெண்களுக்கு தாலிபான் உத்தரவு!

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆண் மருத்துவர்கள் பெண்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடாது என்று தாலிபான்கள் அரசு உத்தரவிட்டு உள்ளது. தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி, ஆட்சி மற்றும் அதிகாரத்தை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றினர். சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தாலிபான்கள் மீண்டும் கால் பதித்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் ஓராண்டுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் தாலிபான்கள் அந்நாட்டு மக்களுக்கு … Read more

“சல்மான் ருஷ்டியின் விதியைப் பாருங்கள்…” – சார்லி ஹெப்டோவுக்கு ஈரான் மிரட்டல்

தெஹ்ரான்: ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் கார்ட்டூன் வெளியிட்ட சார்லி ஹெப்டோவிற்கு ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பாரிஸில் செயல்படும் சார்லி ஹெப்டோ வார இதழ் சில நாட்களுக்கு முன்னர் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியை சித்தரித்து கார்ட்டூன் வெளியிட்டிருந்தது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் கார்ட்டூன் வெளியிட்டிருக்கிறது சார்லி … Read more