அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தை பந்தாடிய பனிப்புயல்: 16 பேர் பலி

லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவில் கடந்த மாதம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு வெடிகுண்டு புயல் என்று அழைக்கப்படும் சக்தி வாய்ந்த பனிப்புயல் தாக்கியது. இதில் நியூயார்க், கலிபோர்னியா உள்பட 10-க்கும் மேற்பட்ட மாகாணங்கள் கடுமையாக பாதிக்கபட்டன. பனிப்புயல் தொடர்பான சம்பவங்களில் 70-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மற்ற மாகாணங்களில் பனிப்புயலின் தாக்கம் குறைந்தபோதிலும், கலிபோர்னியா மாகாணத்தில் தொடர்ந்து பனிப்புயல்கள் தாக்கி வருகின்றன. மேலும் அங்கு வரலாறு காணாத அளவுக்கு கனமழையும் பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாகி … Read more

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் விமான சேவை முடங்கியது

வாஷிங்டன்: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் விமான சேவை நேற்று முடங்கியது. உலகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட விமான நிலையத்தின் எல்லையில், விமானத்தை இயக்கும் விமானி அதன் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பில் இருப்பார். அந்தந்தப் பகுதிகளில் நடைபெறும் விமானக் கண்காட்சிகள், பாராசூட் சாகசம், பட்டம் திருவிழா, லேசர் நிகழ்ச்சி, ராக்கெட் சோதனை, போர் பயிற்சி, உயரமான கட்டிடங்களில் விளக்குகள் எரியாமல் இருப்பது, எரிமலை வெடிப்பு, பறவைகள் நடமாட்டம் … Read more

ஆப்கானிஸ்தானில் ஆண் டாக்டர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடை

காபூல், ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலீபான்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். கல்வி கற்க தடை, உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் கேளிக்கை பூங்காக்களுக்கு செல்ல தடை, ஆண்கள் துணையின்றி பயணிக்க தடை, வேலைக்கு செல்ல தடை என பல்வேறு கட்டுப்பாடுகளால் பெண்கள் நசுக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு சர்வதேச … Read more

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் – 5 பேர் பலி

காபூல், ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். தலிபான்களின் போட்டி அமைப்பான கொராசன் மாகாண ஐ.எஸ். அமைப்பானது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளியுறவு அமைச்சக அலுவலக வளாகத்தில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த தாக்குதலில் 5 பேர் பலியாகியிருக்கலாம். பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தற்கொலை படை தாக்குதலாக இருக்கலாம் எனவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த தாக்குதலுக்கு இதுவரை … Read more

ஆப்கானிஸ்தானுடனான உறவு மோசமடைந்தால் பயங்கரவாதத்திற்கு எதிரான முடிவில்லாத போருக்கு வழிவகுக்கும் – இம்ரான் கான் எச்சரிக்கை

இஸ்லாமாபாத், தலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு பொறுப்பற்ற முறையில் அறிக்கைகளை வெளியிட்டு வருவதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார். தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பிற்கு எதிராக அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை இம்ரான் கான் கடுமையாக விமர்சித்துள்ளார். பயங்கரவாதம் குறித்த கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய இம்ரான் கான், அமெரிக்காவின் உதவியை பாகிஸ்தான் நாடக்கூடாது என்றும், ஆப்கானிஸ்தானுடனான உறவுகள் மோசமடைந்தால் பயங்கரவாதத்திற்கு எதிரான மற்றொரு முடிவில்லாத போர் பாகிஸ்தானுக்கு சாபமாக அமையும் என்றும் எச்சரித்துள்ளார். … Read more

உக்ரைனுக்கு நிதி திரட்ட டென்னிஸ் விளையாடிய நட்சத்திர வீரர்கள்..!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க சென்றுள்ள ரஃபேல் நடால், ஆண்டி முர்ரே உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் உக்ரைனுக்கு நிதி திரட்ட, ஒன்றாக இணைந்து டென்னிஸ் விளையாடினர். ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கு முன்னதாக மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில், ஃபிரான்சிஸ் டியாஃபோ, கோகோ காஃப், மரியா சக்காரி உள்ளிட்ட நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். இதில் கிடைக்கும் வருமானம் அனைத்தும், உக்ரைனில் மனிதாபிமான உதவிகளுக்கு ஆதரவளிக்கும் யுனிசெஃப் ஆஸ்திரேலியா மற்றும் குளோபல் கிவிங்கிற்கு நன்கொடையாக அளிக்கப்படுகிறது. Source link