“பாதுகாப்பு ஒத்துழைப்பில் இந்தியா – அமெரிக்கா உறவு முக்கியத்துவம் வாய்ந்தது” – பாட் ரைடர்

அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளுக்கு இணையாக, பாதுகாப்பு ஒத்துழைப்பில், இந்தியாவுடனான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய பென்டகன் செய்தி செயலாளர் பாட் ரைடர், அமெரிக்காவின் முக்கிய பாதுகாப்பு கூட்டாளிக்கான அந்தஸ்து இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், நெருங்கிய நட்பு நாடுகளுக்கு இணையாக இந்தியாவை, அமெரிக்கா கருதுவதாகவும் தெரிவித்தார். இதன்மூலம், நேட்டோ அமைப்பில் இல்லாத இந்தியாவுக்கு, மேம்பட்ட தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்வதற்கும், பாதுகாப்பு வர்த்தகத்தை எளிதாக மேற்கொள்ளவும், பலப்படுத்தவும் அமெரிக்கா உதவுவதாக அவர் குறிப்பிட்டார். Source link

உலகின் மிக குளிரான இடம்! -51 டிகிரியிலும் பள்ளி செல்லும் குழந்தைகள்!

உலகின் மிகவும் குளிரான இடம்: ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மலைப்பாங்கான பள்ளத்தாக்குகளைத் தவிர, வட இந்தியாவில் உள்ள மக்கள் குறைந்தபட்ச தட்பநிலை ஒன்று முதல் இரண்டு டிகிரி செல்சியஸை அடைந்து வரும் நிலையில் மிகவும் சிரமப்ப்டுகிறார்கள்.   உலகில் ஒரு நாட்டில் ஒரு கிராமத்தில் வெப்பநிலை -51 டிகிரியாக உள்ளது. இந்த நிலையில் உலகிலேயே மிகவும் குளிரான இடம் என்ற பெயரையும் பெற்றுள்ளது. -51 டிகிரி செல்சியஸில் சவால்கள் நிறைந்த வாழ்க்கை அண்டார்டிகாவுக்கு … Read more

Ukraine Invasion: 710 வீரர்களை பலி கொடுத்து சோலேடார் நகரத்தை கைப்பற்றியதாதா ரஷ்யா?

710 ரஷ்ய வீரர்கள் ஒரே நாளில் உயிரிழந்திருப்பதாக உக்ரேனிய அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், ரஷ்யத் துருப்புக்கள் சோலேடார் (Soledar) நகரத்தைக் கைப்பற்றியதாக ரஷ்யா கூறுகிறது. உப்புச் சுரங்கங்களுக்குப் புகழ்பெற்ற கிழக்கு உக்ரேனிய நகரத்தை குறிவைத்து நடைபெற்ற மோதலில் கடுமையான சண்டை நடைபெற்றது இதன் மூலம் தெரியவந்துள்ளது. யின் மையமாக இருந்தது. உக்ரைனில் உள்ள சோலேடார் நகரில் குடியிருப்புப் பகுதியில் உள்ள அடுக்குமாடி வீடுகளுக்கு மேலே கருப்பு மற்றும் வெள்ளை புகை நீண்ட தூரத்திற்கு தெரிவது அச்சங்களை அதிகரித்துள்ளன.  உக்ரைனின் … Read more

ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா அரசு தடை!

இலங்கையில் 1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஆயுத மோதல்களின் போது, மனி உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இலங்கை முன்னாள் அதிபர்கள் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட நான்கு இலங்கை அரசு அதிகாரிகளுக்கு எதிராக கனடா அரசு தடை விதித்துள்ளது. இந்த தகவலை அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இலங்கை இனப்பிரச்சினை காரணமாக, தமிழீழ விடுதலைப் புலிகள் உள்பட இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே இலங்கை உள்நாட்டு … Read more

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இணையும் – சர்வதேச கருத்துக் கணிப்பில் தகவல்

புதுடெல்லி: ஐ.நா. சபையின் அதிகாரமிக்க அமைப்பான பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் இந்த 5 நாடுகளும் வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்ய முடியும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 10 நாடுகள், நிரந்தரமற்ற உறுப்பினர்களாக உள்ளன. இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி அடிப்படையில் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த … Read more

ஆப்கானிஸ்தானில் பெண் நோயாளிகளை பரிசோதிக்க ஆண் டாக்டர்களுக்குத் தடை!

ஆப்கானிஸ்தானில் பெண் நோயாளியை ஆண் மருத்துவர் பரிசோதிக்கக் கூடாது என்று தாலிபன் அரசு தடை விதித்துள்ளது. சிகிச்சை கிடைக்காமல் போனால் தங்கள் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று ஆப்கான் பெண்கள் கவலைப்படுகின்றனர். பெண்களுக்கு கல்வி ,வேலைவாய்ப்பு போன்றவற்றில் தாலிபன்களால் விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளால் பெண் மருத்துவர்கள் சிலருக்கு மருத்துவமனையில் வேலை வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதனால் பெண்கள் விளிம்பு நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டிருப்பதாக குமுறுகின்றனர். Source link

பாகிஸ்தானில் உணவு பஞ்சம் – 3 வாரங்களில் திவாலாகும் என எச்சரிக்கை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. கோதுமை மாவு வாங்க ஏற்பட்ட கூட்டநெரிசலில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த 3 வாரங்களில் அந்த நாடு திவாலாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூனில் பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. அந்த நாட்டின் பயிர் சாகுபடி சுமார் 80 சதவீதம் வரை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த அக்டோபரில் கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு பற்றாக் குறை ஏற்பட்டது. வெளிநாடுகளில் இருந்து உணவு … Read more

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு கைது வாரண்ட்!

பாகிஸ்தானின் தேர்தல்ஆணையம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் பாகுபாடான கொள்கையை கொண்டிருப்பதாகவும், நடுநிலையாக இருக்கத் தவறி விட்டதாகவும் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இது தொடர்பான விசாரணையில் இருந்து விலக்கு கோரிய மனுக்களை நிராகரித்த தேர்தல் ஆணையம் இம்ரான்கான் உள்ளிட்டவர்களுக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய கைது உத்தரவைப் பிறப்பித்தது. Source link

நஷ்டத்தில் கின்னஸ் சாதனை –  ரூ.15 லட்சம் கோடி இழந்த எலான் மஸ்க்

கலிபோர்னியா: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் மட்டும் 182 பில்லியன் டாலர் (ரூ.15 லட்சம் கோடி) சரிந்துள்ளது. 2021 நவம்பரில் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 320 பில்லியன் டாலராக (ரூ.26 லட்சம் கோடி) இருந்தது. இது இம்மாதத்தில் 137 பில்லியன் டாலராக (ரூ.11 லட்சம் கோடி) சரிந்துள்ளது. உலக அளவில் மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய இழப்பை சந்தித்தவர்கள் எவருமில்லை. பெரும் நஷ்டத்தைச் சந்தித்த மனிதர் என்ற வகையில் எலான் மஸ்க் … Read more

ஒரே நாளில் 710 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அறிவிப்பு..!

தங்களுக்கு எதிரான போரில் ஒரே நாளில் 710 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி, பாக்முட் நகரின் வீதிகளில் ரஷ்ய வீரர்களின் உடல்கள் குவிந்து கிடப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் உக்ரைனின் உப்பு சுரங்க நகரம் எனக் கூறப்படும் சோலேடார் நகரில் இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 10 மாத கால யுத்தத்தில் ஒரே நாளில் 710 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் … Read more