ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இங்கிலாந்து அரசு தடை.!

இந்தியாவைத் தொடர்ந்து இங்கிலாந்தும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 14ம் தேதி முதல் தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் மக்குவதற்கு 200 ஆண்டுகள் வரையில் ஆகுவதாகவும், அதுவரையில் சுற்றுச்சூழலை பாதிப்பதாகவும், இங்கிலாந்தின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரசா கபி தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் ஓர் ஆண்டில் மட்டுமே சுமார் 5 பில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு, தூக்கி எறியப்படுவதாகவும், அதில், 10 சதவீதம் மட்டுமே மறுபயன்பாட்டிற்கு வருவதாகவும் தெரசா கபி தெரிவித்தார். Source link

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் 90 சதவீத பேர் கொரோனா நோயால் பாதிப்பு – சுகாதாரத்துறை அதிகாரி பேட்டி!

சீனாவின் 3-வது அதிக மக்கள்தொகை கொண்ட ஹெனான் மாகாணத்தில் 90 சதவீதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் வைத்திருக்க போராடி வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஹெனான் மாகாணத்தில் மொத்த மக்கள்தொகையான 99.4 மில்லியனில் சுமார் 88.5 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 3 வாரங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். Source link

ஆடையிலேயே சிறுநீர் கழித்த அதிபர் – வீடியோ வெளியிட்ட 6 பத்திரிகையாளர்கள் கைது!

தெற்கு சூடானில் அரசு நிகழ்ச்சியில் ஆடையிலேயே சிறுநீர் கழித்த அதிபர் வீடியோவை வெளியிட்ட பத்திரிகையாளர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடான், கடந்த 2011 ஆம் ஆண்டு சூடானிடம் இருந்து விடுதலை பெற்றது. அப்போது முதல் அந்த நாட்டின் அதிபராக இருந்து வருபவர் சல்வா கீர். இவர் கடந்த மாதம் தலைநகர் ஜூபாவில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியில் அந்த நாட்டின் தேசிய கீதம் பாடப்பட்டது. அதிபர் … Read more

உக்ரைனுக்கு சேலஞ்சர் 2 வகை டேங்குகளை வழங்க இங்கிலாந்து பரிசீலனை!

ரஷ்ய படைகளுக்கு எதிராக சண்டையிட உக்ரைனுக்கு சேலஞ்சர் 2 வகை டேங்குகளை வழங்க பிரிட்டன் பரிசீலித்து வருகிறது. ரஸ்ய தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இதன் ஒருகட்டமாக, 4 புள்ளி 2 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான சேலஞ்சர் 2 டேங்குகள் வழங்குவது குறித்து பிரிட்டன் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே ரஸ்ய படைகளுக்கு எதிராக சண்டையிட  லெப்பர்டு 2 வகை டேங்குகளை வழங்க வேண்டும் … Read more

ஈரானில் மேலும் மூவருக்கு தூக்கு தண்டனை: ஹிஜாப் எதிர்ப்பு போராட்டாக்காரர்களுக்கு தொடரும் அவலம்

தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு தூக்கு தண்டனைகளை நிறைவேற்றி வரும் ஈரான் அரசு நேற்று மேலும் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது. பெருகும் சர்வதேச கண்டனங்களை பொருட்படுத்தாது ஈரான் நீதிமன்றம் நேற்று இந்த தண்டனையை பிறப்பித்துள்ளது. ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் கடவுளுக்கு எதிராக போர் தொடுத்துள்ளதாக ஈரான் அரசு தூக்கு தண்டனை விதிப்பிற்குக் காரணம் கூறியுள்ளது. கடந்த 8 ஆம் தேதி ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற முகமத் கராமி, சையத் முகத் ஆகிய … Read more

பெருவில் அரசுக்கெதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறையில் 12 பேர் உயிரிழப்பு..!

தென் அமெரிக்க நாடான பெருவில் அரசுக்கெதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறையில் 12 பேர் பலியாகினர். அதிபராக இருந்த காஸ்டிலோ பதவி நீக்கப்பட்டு, கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காஸ்டிலோ-வை விடுவிக்கக் கோரியும், தற்போதைய அதிபர் டினா பொலுவார்ட் பதவி விலக வலியுறுத்தியும் நடைபெற்ற போராட்டத்தில் நாடு முழுவதும் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூலியாக்கா நகரில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் துப்பாக்கிச்சூடு நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் … Read more

52 மாத ஊதியம் போனஸ் – தைவான் நிறுவனம் அறிவிப்பு

தைபே: தைவானை சேர்ந்த கப்பல் போக்குவரத்து நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 52 மாத ஊதியத்தை போனஸாக வழங்கியுள்ளது. தைவானின் டாயூவான் நகரை தலைமையிடமாகக் கொண்டு எவர்கிரீன் மரைன் கார்ப்பரேஷன் என்ற கப்பல் போக்குவரத்து நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்திடம் 150-க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் உள்ளன. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். எவர்கிரீன் மரைன் கார்ப்பரேஷன் நிறுவனம் ஆண்டு இறுதியில் தனது லாபத்தில் ஊழியர்களுக்கு போனஸ் வழங்குகிறது. அதன்படி கடந்த 2021-ம் ஆண்டில் அந்த நிறுவனம் ஊழியர்களுக்கு … Read more

பாகிஸ்தானில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு.. கிலோ ரூ.1500 வரை விற்பனை!

பாகிஸ்தானில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கிலோ 1500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கோதுமை மாவுக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடால் பாகிஸ்தான் தற்போது நெருக்கடியை சந்தித்து வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு அரசாங்கம் குறைந்த விலையில் கோதுமை மாவு வழங்கி வரும் நிலையில், அதனை வாங்க முயன்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உள்பட 4 பேர் இதுவரை உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு … Read more

மாஸ்கோ-கோவா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் காரணமாக குஜராத்துக்கு திருப்பி விடப்பட்டு அவசரமாக தரையிறக்கம்..!

ரஸ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து கோவா வந்த தனியார் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, குஜராத் மாநிலத்துக்கு அந்த விமானம் திருப்பி விடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. மாஸ்கோவில் இருந்து கோவா நோக்கி தனியார்  விமானம் 236 பயணிகளுடன் வந்தது. இந்நிலையில்  கோவா விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்துக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய நபர்,  விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த விமானம் உடனடியாக குஜராத்தின் ஜாம்நகர் விமான நிலையத்தில் … Read more