வெளிநாடுவாழ் இந்தியர் விருதுக்கு இலங்கையின் சிவக்குமார் நடேசன் தேர்வு | Sivakumar Natesan of Sri Lanka selected for Overseas Indian Award

கொழும்பு : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் பிரவாசி பாரதீய சம்மான் விருதுக்கு, இலங்கையின் வீரகேசரி தமிழ் நாளிதழின் நிர்வாக ஆசிரியர் சிவக்குமார் நடேசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் இந்தியர்களைப் பாதுகாக்கும் வகையிலும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் பிரவாசி பாரதீய சம்மான் விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. நம் நாட்டின் உயரிய விருதான இதற்கு, இலங்கையைச் சேர்ந்த வீரகேசரி தமிழ் நாளிதழின் நிர்வாக ஆசிரியரான சிவக்குமார் நடேசன், தேர்வு … Read more

பாகிஸ்தானில், சிலிண்டர் தட்டுப்பாடு – பிளாஸ்டிக் பைகளில் எரிவாயு நிரப்பி செல்லும் மக்கள்..!

பாகிஸ்தானில், சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மக்கள் பிளாஸ்டிக் பைகளில் எரிவாயு நிரப்பி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால், அந்நாட்டு மக்கள் அன்றாட வாழ்வில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அங்கு வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தும் சிலிண்டர் உற்பத்தி போதிய அளவு இல்லாததால், சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கைபர் பக்துங்வா மாகாணத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறையால், மக்கள் … Read more

கடினமான பொருளாதார சூழல்: 18 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது அமேசான்!| Difficult economic environment: Amazon laid off 18 thousand employees!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: கடினமான பொருளாதார சூழலை காரணம் காட்டி, ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் மேலும் 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் உலகம் முழுவதும் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். கடந்த ஆண்டு நவ.,ல் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. செலவினங்களைக் குறைப்பதற்காக இந்த லே ஆஃப் நடவடிக்கையை செய்ததாக அமேசான் தெரிவித்தது. இந்நிலையில், இன்று காலை, அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி … Read more

'18 ஆயிரம் பேரை தூக்க போறோம்…' – ஓப்பனாக அறிவித்த பிரபல நிறுவனத்தின் சிஇஓ… என்னங்க சொல்றீங்க?

பொருளாதார மந்தநிலை, நிறுவனங்களின் நிதி பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பிரபல தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களை அதிரடியாக பணிநீக்கப் படலத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்குறைப்பு நடவடிக்கை ஒன்றும் தனியார் துறையில் புதிதில்லை என்றாலும், கரோனா பெருந்தொற்று காலத்தில் பொருளாதாரம் சற்று மீண்டெழும் நேரத்தில் மீண்டும் ஆட்குறைப்பு என்பது பலரின் வாழ்க்கையை புரட்டிப்போட வாய்ப்புள்ளது. தற்போது, இந்த பணிநீக்க டிரெண்டை ஆரம்பித்து வைத்தவர், எலான் மஸ்க்.  ட்விட்டரில் சுமார்  3 ஆயிரத்து 700 பேரை பணிநீக்க … Read more

பாலைவன நாட்டில் பெருக்கெடுக்கும் மழை வெள்ளம்.!

மழைப்பொழிவு குறைந்த, பாலைவன நாடாக அறியப்படும் சவுதிஅரேபியாவில் கனமழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  தலைநகர் ரியாத்தின் வடமேற்கில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உஷைகர் பகுதியில் பெய்த கனமழையினால், அங்குள்ள ஒரு பாலத்தின் அடியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளன. ஏற்கனவே, அந்நாட்டின் 2வது பெரிய நகரமான ஜெட்டாவில் நவம்பர் மாதம் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. Source link

Bomb Cyclone: கலிபோர்னியாவை தாக்கிய ‘பாம் புயல்’ எமர்ஜென்சி அறிவித்த கவர்னர்

அமெரிக்காவில் புத்தாண்டு சோகமாகவே தொடங்கியிருக்கிறது. கலிபோர்னியாவை தாக்கிய ‘பாம் புயல்’ எமர்ஜென்சி அறிவிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.  நிலைமையின் தீவிரத்தை அணுகி, கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம் ‘நிலைமையை கட்டுப்படுத்துவதற்காகவும் மீட்பு முயற்சிகளுக்காகவும்’  அவசர நிலையை அறிவித்தார். கலிபோர்னியா ‘மிருகத்தனமான’ வானிலை நிலையை எதிர்கொள்ளக்கூடும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்த ஒரு நாளுக்குப் பிறகு, புதன்கிழமை ஒரு பாம் சூறாவளி மேற்கு அமெரிக்க மாகணத்டைத் தாக்கியது. சூறாவளி புயல் அப்பகுதியை மூழ்கடிக்கும் அளவில் பெருமழையைக் கொண்டு வந்தது, ஏற்கனவே … Read more

உக்ரைன் அணு மின்நிலையம் மீதான தாக்குதலில் இந்தியா சமரச முயற்சியில் ஈடுபட்டது – அமைச்சர் ஜெய்சங்கர்

உக்ரைன் அணு மின் நிலையங்கள் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்திய போது பிரச்சினையைத் தணிக்க இந்தியா அமைதியாக சமரச முயற்சியில் ஈடுபட்டது என்றும், கோதுமை ஏற்றுமதியை அனுமதிக்க ரஷ்யா உக்ரைன் அரசுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட அவர் வியன்னாவில் ஜெர்மன் மொழியில் வெளியாகும் தினசரி நாளிதழுக்கு பேட்டியளித்த போது இதனைக் குறிப்பிட்டார். கோவிட்டுக்குப் பிறகான சூழல் மிகவும் பொருளாதாரப் பின்னடைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்றும் … Read more

சீனாவில் பரவும் கொரோனாவுக்கு 95 சதவீதம் காரணம் ஓமிக்ரான் உருமாற்றம்

சீனாவில் தற்போது கோவிட் பேரலையாகப் பரவி வருவதற்கு கொரோனாவின் மரபணு உருமாற்றமான ஒமிக்ரான் பி.ஏ.5 புள்ளி 2 மற்றும் பி.எப்.7 ஆகியவையே காரணம் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. சீனாவில் உள்ள நிலைமையை மிகவும் கவனமாக கண்காணித்து வருவதாகவும் இந்த நோய்த் தாக்கம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. சீனாவில் புதிய வகை உருமாற்றங்களையும் கண்டறிந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது Source link

அமெரிக்காவில் 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது – இந்திய வம்சாவளி குடும்பம் மீட்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் பசடேனா பகுதியில் வசிப்பர் தர்மேஷ் படேல். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், மனைவி, குழந்தைகளுடன் டெஸ்லா காரில், கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சேன் மாடியோ என்ற மலைப் பகுதிக்கு சென்றுள்ளார். இவர்கள் சென்ற கார் 300 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது. தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காரில் காயங்களுடன் இருந்த 4 வயது சிறுமி மற்றும் 9 வயது சிறுவனை … Read more

நாசாவின் புகழ்பெற்ற அப்பல்லோ 7 விண்வெளிப் பயணத்தின் கடைசி விண்வெளி வீரரும் உயிரிழப்பு

நாசாவின் அப்பல்லோ 7 விண்வெளிப் பயணத்தின் கடைசி விண்வெளி வீரர் வால்டர் கன்னிங்ஹாம் காலமானார். அவருக்கு வயது 90. 1968-ம் ஆண்டு ‘அப்பல்லோ 7’ விண்கலத்தில் சென்ற டான் எஃப் ஐசெல், வால்டர் எம். ஷிரா ஆகிய இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டனர். இந்நிலையில், வயதுமூப்பு மற்றும் உடல்நல பாதிப்பு காரணமாக வால்டர் கன்னிங்ஹாமும் காலமானார். Source link