உக்ரைன் படைகள் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதலில் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பு- ரஷ்யா ஒப்புதல்

கிழக்கு உக்ரைனில் உக்ரைன் படைகள் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது. டொனட்ஸ்க் பிராந்தியத்தில், ரஷ்ய கட்டுப்பாட்டிலுள்ள மகீவ்கா நகரில் தற்காலிக ராணுவ தளத்தில் 600 வீரர்கள் வரை தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. ராணுவ தளத்தின் மீது 6 ஹிமர்ஸ் ஏவுகணைகளை உக்ரைன் படைகள் வீசியதாகவும், அதில் 2 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், எஞ்சிய 4 ஏவுகணைகள் தாக்கியதில் கட்டடம் இடிந்து தரைமட்டமானதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. முன்னதாக, ஏவுகணை தாக்குதலில் … Read more

பாகிஸ்தானில் வேலையில்லா திண்டாட்டம் – 1,167 போலீஸ் பணிக்கு குவிந்த 32,000 இளைஞர்கள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் இளைஞர்களில் சுமார் 32 சதவீதம் பேருக்கு வேலை இல்லை.இந்த சூழலில் தலைநகர் இஸ்லாமாபாத் போலீஸ் துறையில் 1,167 காவலர் காலியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணிக்கு 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. ஆனால் இந்த கல்வி தகுதியை தாண்டி பட்டதாரிகள் பலர் காவலர் பணிக்கு விண்ணப்பித்தனர். அவர்களுக்கான எழுத்துத் தேர்வு இஸ்லாமாபாத்தில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் அண்மையில் நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் என சுமார் 32,000-க்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதினர். இதுதொடர்பான … Read more

பயங்கரவாத குற்றச்சாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொலிவியாவில் கலவரம் வெடித்தது..!

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் சாண்டா குரூஸ் மாகாணத்தின் ஆளுநர் லூயிஸ் பெர்னாண்டோ கமாச்சோ கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவரது ஆதரவாளர்கள் கார்களை எரித்து வன்முறையில் ஈடுபட்டனர். இரவு வேளையிலும் மாகாண தலைநகரின் சில பகுதிகளில் கார்கள் மற்றும் டயர்களை எரித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போலீசார் மீது பட்டாசுகளை கொளுத்தி எரிந்தனர்.கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர். கடந்த 2019-ல் பொலிவியாஅதிபராக பதவிவகித்த ஈவோ மோரல்ஸ்கு எதிராக சதியில் … Read more

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா விமான நிலையத்தில் மின்தடை.. ஆயிரக்கணக்கான விமான பயணிகள் அவதி..!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா விமான நிலையத்தில் மின்தடை காரணமாக சர்வர்கள் இயங்காததால் ஆயிரக்கணக்கான விமான பயணிகள் அவதியடைந்தனர். நினோய் அகினோ சர்வதேச விமான நிலையத்தில் புத்தாண்டு அன்று ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக விமானப் போக்குவரத்து முடங்கியது. 361 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய 65 ஆயிரம் பயணிகள் பாதிப்புக்கு உள்ளாகினர். மின்தடை காரணமாக மணிலா வழியாக செல்லக்கூடிய விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை என்றும், வெவ்வேறு நாடுகளுக்கு அந்த விமானங்கள் திருப்பி … Read more

ஜி20 தலைமை பொறுப்பில் பன்முகத்தன்மையை பறைசாற்றுவோம் – வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை

வியன்னா: ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவுக்கு அரசு முறை பயணமாக சென்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்குள்ள இந்திய வம்சாவளியினர் மத்தியில் நேற்று முன்தினம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: உக்ரைன் போர் தொடங்கிய போதே பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பலமுறை போர் நிறுத்தம் குறித்துபேசியுள்ளார். நானும் இருநாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன். இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கினால் தீர்வை எட்ட … Read more

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் முதல் பெண் கவர்னராக பதவியேற்ற கேத்தி ஹோச்சுல்..!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் முதல் பெண் கவர்னர் பதவியேற்றார். நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் நியூயார்க் மாகாணத்தின் 57-வது கவர்னராக கேத்தி ஹோச்சுல் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று பதவி ஏற்றுக் கொண்ட பின் பேசிய அவர், மாகாணத்தின் பொது பாதுகாப்பை அதிகரித்தல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என உறுதி அளித்தார். Source link

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் முதல் பெண் கவர்னர் பதவியேற்றார்

நியூயார்க். அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி அந்த நாட்டு நாடாளுமன்றத்துக்கும், மாகாண கவர்னர்களுக்கும் தேர்தல் நடந்தது. அந்த வகையில் நியூயார்க் மாகாண கவர்னர் பதவிக்கு ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் பெண் அரசியல் தலைவரான கேத்தி ஹோச்சுலும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளரான லீ செல்டினும் போட்டியிட்டனர். இதில் கேத்தி ஹோச்சுல், லீ செல்டினை தோற்கடித்து, நியூயார்க் மாகாணத்தின் 57-வது கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் நியூயார்க் மாகாணத்தின் … Read more

மெக்சிகோ சிறைச்சாலையில் தாக்குதல் 14 பேர் பலி; 13 பேர் படுகாயம்| Mexico prison attack leaves 14 dead; 13 people were injured

மெக்சிகோ சிட்டி, மெக்சிகோவின் எல்லைப்புறத்தில் உள்ள சிறைச்சாலையில், நடத்தப்பட்ட தாக்குதலில் 10 போலீசார் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர். வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் எல்லைப்புறத்தில், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை ஒட்டியுள்ளது சியுடாட் ஜுவாரஸ் சிறைச்சாலை. இங்கு நேற்று முன்தினம் துப்பாக்கியுடன் கவச வாகனங்களில் வந்த ஒரு கும்பல், சிறைச்சாலை மீது திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், 10 போலீசாரும், நான்கு சிறைக் கைதிகளும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; 13 பேர் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் சம்பவத்தைப் … Read more

மறைந்த முன்னாள் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

வாடிகன் சிட்டி, முன்னாள் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் உடல்நலக்குறைவால் கடந்த சனிக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது 95. இந்த நிலையில் 16-ம் பெனடிக்டின் உடல் வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 9 மணி முதல் மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அதிகாலையில் இருந்தே மக்கள் பேராலயத்துக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். முதல் நாளான நேற்று 10 மணி நேரம் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி … Read more

நடுவானில் ஹெலிகாப்டர்கள் மோதல் ஆஸ்திரேலியாவில் 4 பேர் பரிதாப பலி | 4 killed in mid-air helicopter collision in Australia

சிட்னி, ஆஸ்திரேலியாவில் சுற்றுலா தலம் ஒன்றில், நடுவானில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்டதில், நான்கு பேர் பலியாகினர்; மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். பசிபிக் கடல் தீவு நாடான ஆஸ்திரேலியாவில், கோல்ட் கோஸ்ட் கடற்கரை பகுதியில், ‘சீ வேர்ல்ட்’ என்ற பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இங்கு, புத்தாண்டு மற்றும் விடுமுறையை கொண்டாட, நேற்று ஏராளமானோர் குவிந்தனர். இவர்கள் பயணிக்க, பொழுதுபோக்கு பூங்கா சார்பில் ஹெலிகாப்டர் வசதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், சுற்றுலா பயணியருடன் வந்த ஹெலிகாப்டர் ஒன்று, கடற்கரை பகுதியில் … Read more