புத்தாண்டு கொண்டாட்டங்களைத் தடுக்க உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் | Russia continues to attack Ukraine to prevent New Year celebrations

கீவ் : புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, உக்ரைனின் கீவ் நகரம் மீது, ரஷ்யா அடுத்தடுத்து ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா, கடந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. 11 மாதங்களாக நீடித்து வரும் சண்டையால், உக்ரைன் நாட்டின் பல நகரங்கள் உருக்குலைந்துள்ளன. உக்ரைன் நாட்டு வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மின் கட்டமைப்புகள், மின் நிலையங்களை குறி வைத்து, ரஷ்யா நடத்தும் வான்வழித் தாக்குதல்களால் … Read more

கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல் நாளை அடக்கம்..!

கால்பந்து ஜாம்பவான் பீலேவின் இறுதிச் சடங்கு  நடைபெறுவதற்கு  முன்னதாக  சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ மைதானத்தில் ரசிகர்கள் கூடி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து பீலேவின் இறுதி சடங்குகள்  நடைபெறுகிறது. பின்னர்  நாளை நடைபெறும் உடல் அடக்க நிகழ்ச்சியில் புதிய அதிபர் லுலா பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அவரது வருகை குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என பிரேசில் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Source link

புத்த மதத்தை அழிக்க சீன அரசு முயற்சிக்கிறது: தலாய் லாமா குற்றச்சாட்டு

புத்தகயா: புத்த மதத்தை அழிக்க சீன கம்யூனிஸ்ட் அரசு முயற்சிக்கிறது என்று திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 1949-ம் ஆண்டில் திபெத்தை சீன ராணுவம் ஆக்கிரமித்தது. இதன் பிறகு கடந்த 1959-ம் ஆண்டு திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவும் அவரது ஆதரவாளர்களும் சீன ராணுவத்தின் பிடியில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்தனர். அப்போது முதல் இந்தியாவின் இமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் தலாய் லாமா வாழ்ந்து வருகிறார். வருடாந்திர … Read more

புத்தாண்டு கொண்டாட்டங்களை தடுக்க உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் | Russia continues to attack Ukraine to prevent New Year celebrations

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கீவ்,–புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, உக்ரைனின் கீவ் நகரம் மீது, ரஷ்யா அடுத்தடுத்து ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. 11 மாதங்களாக நீடித்து வரும் சண்டையால், உக்ரைன் நாட்டின் பல நகரங்கள் உருக்குலைந்துள்ளன. உக்ரைன் நாட்டு வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மின் கட்டமைப்புகள், மின் நிலையங்களை குறி வைத்து, ரஷ்யா … Read more

இரு நாட்டு ஒப்பந்தப்படி இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுத விவரங்கள் பரிமாற்றம்

இஸ்லாமாபாத், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அணுசக்தி நிலைகள் மற்றும் வசதிகளுக்கு எதிரான தாக்குதல்களை தடை செய்யும் ஒப்பந்தம் கடந்த 1988-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் தங்கள் அணு ஆயுதங்கள் மற்றும் நிலைகள் குறித்த விவரங்களை ஆண்டுதோறும் பரிமாறிக்கொள்ள வேண்டும். அதன்படி கடந்த 1992 ஜனவரி 1-ந்தேதி முதல் ஆண்டுதோறும் இந்த பரிமாற்ற நடைமுறை அமலில் இருக்கிறது. அந்தவரிசையில் இந்த ஆண்டும் நேற்று இரு நாடுகளும் தங்கள் அணு ஆயுதங்கள் குறித்த விவரங்களை … Read more

மெக்சிகோவில் பஸ் விபத்து குழந்தைகள் உட்பட 15 பேர் பலி | 15 dead, including children, in bus accident in Mexico

மெக்சிகோ சிட்டி,-வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் சுற்றுலா பஸ் சாலையோரம் கவிழ்ந்ததில், குழந்தைகள் உட்பட 15 பேர் பலியாகினர்;47 பேர் படுகாயம் அடைந்தனர். மெக்சிகோவின் மேற்கு பகுதியில் உள்ள லியோன் நகரத்தைச் சேர்ந்த மக்கள், வார விடுமுறையைக் கொண்டாட சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் லியோன் நகரிலிருந்து சென்ற ஒரு சுற்றுலா பஸ், நயாரித் என்ற பகுதியில் விபத்தில் சிக்கியது. இதில் பஸ்சில் இருந்த நான்கு குழந்தைகள் உட்பட 15 பேர் பலியாகினர். … Read more

"ரஷியா-உக்ரைன் போர் இந்த ஆண்டு முடிவுக்கு வர வேண்டும்" – அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் விருப்பம்

வாஷிங்டன், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், புளோரிடா மாகாணத்தில் உள்ள பாம் பீச்சில் தனது மார் எலாகோ பண்ணை வீட்டில், அவரது மனைவி மெலனியா டிரம்ப்புடன் சேர்ந்து புத்தாண்டு தினத்தை கொண்டாடினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டு மக்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பின்னர் உக்ரைன் போர் குறித்து பேசிய அவர், ரஷியா-உக்ரைன் இடையிலான போர் இந்த ஆண்டு முடிவுக்கு வர வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார். அதே சமயம் … Read more

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தை புரட்டிப்போட்ட கனமழை

நியூயார்க், அமெரிக்காவில் கடந்த வாரம் கடுமையான பனிப்புயல் வீசியது. இதில் நியூயார்க் உள்ளிட்ட பல மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பனிப்புயலுக்கு 60-க்கும் அதிகமானோர் பலியாகினர். இந்த நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்றுமுன்தினம் இடைவிடாமல் மழை பெய்தது. இதில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டமும் களை இழந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் … Read more

"உக்ரைன் போரை பயன்படுத்தி ரஷியாவை துண்டாக்க முயற்சிக்கிறார்கள்" – ரஷிய அதிபர் புதின்

மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்த போர் தற்போது வரை தொடர்ந்து வரும் நிலையில், இருநாட்டுப் படைகளும் சளைக்காமல் போரிட்டு வருகின்றன. அதே சமயம் இந்த போரில் இருதரப்பிலும் பெரிய அளவில் உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சூழலில் புத்தாண்டு பிறந்துள்ளதை முன்னிட்டு, ரஷிய அதிபர் புதின் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அவர், உக்ரைன் … Read more