ரூ.4,400 கோடிக்கு ரொனால்டோவை ஒப்பந்தம் செய்த சவுதி கிளப் அணி| The Saudi club team that signed Ronaldo for Rs 4,400 crore

சவுதி: போர்ச்சுக்கலின் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ.4,400 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவை சேர்ந்த அல்-நசீர் கிளப் அணி 2025 ஜூன் வரை ரொனால்டோவை ஒப்பந்தம் செய்துள்ளது. போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கிளப் அரங்கில் கடைசியாக மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக பங்கேற்றார். உலக கோப்பை தொடருக்கு முன் இதில் இருந்து விலகினார். புதிய அணியில் இணைய பேச்சுவார்த்தை நடந்தது. தற்போது சவுதி அரேபியாவின் அல்-நாசர் அணிக்காக இரண்டரை ஆண்டு ஒப்பந்தத்தில் … Read more

டிவிட்டர் அலுவலக ஊழியர்கள் சொந்தமாக டாய்லெட் பேப்பர் கொண்டுவர உத்தரவு..!

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரிலுள்ள டிவிட்டர் தலைமையகத்தில் உள்ள கழிவறைகளில் வசதி குறைபாடுகள் காரணமாக, ஊழியர்கள் வீட்டிலிருந்து டாய்லட் பேப்பர்களை கொண்டுவரும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தூய்மைப்பணியாளர்கள் இல்லாமல் டிவிட்டர் அலுவலகம் அலங்கோலமாக காட்சியளிப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. கழிவறைகள் நாறுவதால் அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மீதமான உணவுகள் உடலின் துர்நாற்றம் போன்ற இதர பிரச்சினைகளும் எழுப்பப்பட்டுள்ளன. தூய்மைப் பணியாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பிரச்சினை அதிகரித்துள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர். Source link

தென்சீனக்கடல் பகுதியில் அமெரிக்க விமானத்தை மோதுவதுபோல் பறந்த சீன போர் விமானம்; அமெரிக்க ராணுவம் குற்றச்சாட்டு

தென்சீனக்கடல் பகுதியில் அமைந்துள்ள பல தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அதே வேளையில் வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகள் அந்த தீவுகள் தங்களுக்குரியவை என கூறுகின்றன. இந்த விவகாரத்தில் சீனாவை அமெரிக்கா கடுமையாக எதிர்த்து வருகிறது. அதோடு சர்ச்சைக்குரிய தென்சீன கடல் பகுதிக்கு அமெரிக்கா தனது போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அனுப்பி ரோந்து பணியை மேற்கொண்டு வருகிறது. இதனை கடுமையாக எதிர்க்கும் சீனா சில வேளைகளில் தனது போர் விமானங்களை கொண்டு … Read more

பாகிஸ்தானில் போலீசார் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 3 பேர் படுகாயம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்ட்டுங்க்வா மாகாணத்தில் குலாச்சி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இன்று போலீசார் மீது பயங்கரவாதிகள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களிடம் ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பயங்கரவாதிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் அந்த இடம் போர்க்களம் போல மாறியது. பின்னர் சிறிது நேரத்தில் பயங்கரவாதிகள் அந்த பகுதியில் இருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் 3 போலீசார் படுகாயமடைந்ததாகவும், இது தொடர்பாக விசாரணை … Read more

நியூயார்க்கில் வீசிய பனிப்புயலால் உறைந்து போன உணவகம்..!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் வீசிய பனிப்புயலால், உணவகம் ஒன்றின் மேற்கூரைகளின் பனி உறைந்து, பனியால் உருவாக்கப்பட்ட கோட்டை போன்று காட்சியளித்தது. கிறிஸ்துமஸ் அன்று வீசிய பனிப்புயலால், ஹாம்பர்க் நகரில் அமைந்துள்ள, 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த பழமையான உணவக கட்டிடம் முழுவதுமாக பனி சூழ்ந்தது. அங்கு தற்போது பனிப்பொழிவு குறைந்து, பனிக்கட்டிகள் உருகத் தொடங்கியுள்ளன. ஹாம்பர்க் நகரில் சாலைகளில் கொட்டிக் கிடக்கும் பனியை இயந்திரத்தின் மூலம் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. Source link

"ஆப்கானிஸ்தானுக்கு வழங்கும் உதவிகளை நிறுத்தப்போவதில்லை" – ஐ.நா. திட்டவட்டம்

காபுல், ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு பெண்களுக்கு கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு வருவதாக சர்வதேச நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனிடையே சமீபத்தில் பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்கவும், தனியார் தொண்டு நிறுவனங்களில் சேர்ந்து பணிபுரியவும் தலீபான் அரசு தடை விதித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து ஜி7 கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்ட நிலையில், தனியார் தொண்டு நிறுவனங்களில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு வழங்கி வரும் உதவிகளை நிறுத்தப் … Read more

மியான்மர் ஜனநாயக தலைவர் ஆங்சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

நைப்பிதாவ், மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல்வேறு போராட்டம் நடத்தியவர் ஆங்சான் சூகி (வயது77). இவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவர் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020-ம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. ஆனால் இந்த தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி ஆங்சான் சூகி ஆட்சியை கவிழ்த்து விட்டு ராணுவம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதையடுத்து ஆங்சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவர் மீது ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியது, … Read more

கிரேட்டாவின் ட்விட்டர் பதிவால் பாக்ஸர் கைது; ருமேனியா போலீசார் நன்றி.!

டீனேஜ் காலநிலை ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க்குடன் பகிர்ந்த டிவிட்டரால், முன்னால் பாக்சர் ஆண்ட்ரூ டேட் ரோமானியா போலீசாரல் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை, அவர் கிரேட்டா துன்பெர்க்கிற்கு ஒரு வீடியோவில் பதிலளித்தார், அதில் அவர் பட்டு அங்கியில் சுருட்டு புகைப்பதைப் பார்த்தார் மற்றும் டீனேஜ் காலநிலை ஆர்வலரின் பாலினம் குறித்து கேள்வி எழுப்பினார். ஆண்ட்ரூ டேட் கிரேட்டா துன்பெர்க்கை வெறுக்கத்தக்க கருத்துக்களால் அவமதித்தார் மற்றும் காலநிலை ஆர்வலர்களை கேலி செய்ய பீட்சா பெட்டிகளை மறுசுழற்சி செய்ய மறுத்ததைப் … Read more

மோடியின் தாயார் மறைவிற்கு ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்..!

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானதையடுத்து, ஜப்பான், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள், இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, பிரதமர் மோடியின் அன்புத்தாயின் மறைவுக்கு, தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தாயை இழப்பதை காட்டிலும் மிகப்பெரிய இழப்பு ஒன்று இல்லை என குறிப்பிட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப், பிரதமர் மோடிக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். அதேபோல், நேபாள பிரதமர் … Read more

ரஷியா-சீனா அதிபர்கள் காணொலி காட்சி வாயிலாக இன்று பேச்சுவார்த்தை

மாஸ்கோ, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங், இருவரும் காணொலி காட்சி வாயிலாக இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், பிராந்திய அளவிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் இரு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்தார். உக்ரைனுடனான போர் காரணமாக … Read more