புதிய ஆண்டை அமைதியாக தொடங்க.. பெரு நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் சண்டை திருவிழா..!

பெரு நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் சண்டை திருவிழாவில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். மக்களிடம் மோதல்களைத் தடுத்து உறவை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. புதிய ஆண்டை அமைதியாக தொடங்குவதை நோக்கமாகக் கொண்டு நடைபெறுவதாக கூறும்  இந்நிகழ்ச்சியில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். Source link

அதிபர் விளாடிமிர் புதினை தொடர்ந்து விமர்சித்த ரஷ்ய முன்னாள் எம்.பி.ஒடிசாவில் தவறி விழுந்து உயிரிழப்பு

புவனேஸ்வர்: அதிபர் விளாடிமிர் புதினை தொடர்ந்து விமர்சித்து வந்த ரஷ்யாவின் முன்னாள் எம்.பி. பாவெல் அன்டோவ் ஒடிசாவில் தவறி விழுந்து உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் எம்.பி.யாக இருந்தவர் பாவெல் அன்டோவ். தொழிலதிபரான இவர் ரஷ்யாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர் ஆவார். உக்ரைனுடனான போரைத் தொடர்ந்து இவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அடிக்கடி கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் அண்மையில் பாவெல் அன்டோவ் சுற்றுலாவுக் காக இந்தியா வந்திருந்தார். இவர்உள்பட மொத்தம் 4 பேர் … Read more

சீனாவை எதிர்கொள்ள ஓராண்டு கட்டாய ராணுவ சேவை: தைவான் அரசு புதிய முடிவு| One-year compulsory military service is the new decision of the Taiwanese government

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் தைபே: தைவான் நாட்டில் இளைஞர்களுக்கான கட்டாய ராணுவ சேவையை ஓராண்டாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கிழக்காசிய நாடான தைவானை, நம் அண்டை நாடான சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவானுக்கு வெளிநாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள் வந்து சென்றால், உடனே அந்நாட்டை நோக்கி போர் விமானங்களை அனுப்பி சீனா மிரட்டி வருகிறது. நேற்று முன்தினம், 24 மணி நேரத்துக்குள் 71 போர் விமானங்கள், ஏழு போர்க்கப்பல்களை தைவானுக்கு அனுப்பி அச்சுறுத்தியது. இதையடுத்து, … Read more

பெண்கள் மீதான கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.. தலிபான்களுக்கு ஐ.நா. சபை வலியுறுத்தல்..!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென தலிபான்களை ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வரும் தலிபான்கள், அண்மையில் பெண்கள் கல்வி நிலையங்கள் செல்ல தடை விதித்தனர். இதற்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க், பெண்கள் மற்றும் சிறுமிகள் குறித்தான தங்களது கொள்கைகளை உடனடியாக தலிபான்கள் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பெண்கள் மீதான தலிபான்களின் கட்டுப்பாடுகள் அனைத்து ஆப்கானிஸ்தான் … Read more

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உட்பட ட்விட்டர் பயன்படுத்தும் 40 கோடி பேரின் தகவல்கள் கசிவு..!

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உட்பட ட்விட்டர் பயன்படுத்தும் 40 கோடி பேரின் தகவல்கள் கசிந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.  இஸ்ரேலிய சைபர் உளவுத்துறை நிறுவனமான ஹட்சன் ராக் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஹேக்கர் ஒருவர் 40 கோடி ட்விட்டர் பயனாளர்களின் தகவல்களை திருடி,  டார்க் வெப்பில் விற்பனைக்கு வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    40 கோடி ட்விட்டர் பயனாளர்களின் மின்னஞ்சல் விவரங்கள், பயனர் பெயர், பின்தொடர்பவர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் ஆகியவையும் டார்க் வெப்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.  … Read more

வெளிநாட்டவர் தனிமைப்படுத்துதல் ரத்து செய்தது சீன அரசு | The Chinese government has lifted quarantine for foreigners

பீஜிங், சீனாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், வெளிநாட்டு பயணியருக்கான கட்டாய தனிமைப்படுத்துதல் உத்தரவை ஜன., 8 முதல் ரத்து செய்வதாக அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. நம் அண்டை நாடான சீனாவின் வூஹான் நகரில் 2019 டிச., மாதம் பரவத் துவங்கிய கொரோனா தொற்று, கடந்த இரண்டரை ஆண்டுகளாக உலகையே ஸ்தம்பிக்க செய்தது. பின் உலகம் முழுதும் தொற்று பரவல் படிப்படியாக குறைந்துவிட்ட நிலையில், சீனாவில் கடந்த சில மாதங்களாக தொற்று பரவல் தீவிரமடைந்தது. இதை … Read more

இம்ரான் மீதான தாக்குதல் திட்டமிட்ட சதி கூட்டுக் குழு விசாரணையில் அம்பலம்| The conspiracy to attack Imran was revealed in the joint investigation

லாகூர், ‘பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட தாக்குதல், திட்டமிட்ட சதி’ என, கூட்டு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 70, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக, அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து, தலைநகர் இஸ்லாமாபாத் வரை, கடந்த நவம்பரில் பேரணி நடத்த திட்டமிட்டார். இதில் பங்கேற்க, இம்ரான் கான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ரன்வாலா என்ற இடத்துக்கு வந்தார். அங்கு திரண்டிருந்த … Read more

ஆப்பிரிக்க நாட்டில் கண்ணிவெடியில் சிக்கி பஸ் வெடித்து 10 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் பல பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பயங்கரவாத தாக்குதல்களில் அங்கு ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். இந்த சூழலில் கடந்த ஜனவரி மாதம் அங்கு ஆட்சியை கைப்பற்றிய ராணுவம் பயங்கரவாதத்தை ஒழிப்பதாக சூளுரைத்தது. எனினும் அங்கு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில் புர்கினோ பாசோவின் கிழக்கு பகுதியில் நைஜர் நாட்டின் எல்லையொட்டி அமைந்துள்ள படா கவுமா பிராந்தியம் … Read more

துவம்சம் செய்யும் பனி சூறாவளி காரில் இளம்பெண் உடல் மீட்பு| துவம்சம் செய்யும் பனி சூறாவளி காரில் இளம்பெண் உடல் மீட்பு

நியூயார்க் அமெரிக்காவை நான்கு நாட்களாக துவம்சம் செய்து வரும் பனி சூறாவளிக்கு இதுவரை 50 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த நான்கு நாட்களாக பனி சூறாவளி வீசுகிறது. நாடு முழுதும் வெப்பநிலை மைனஸ் டிகிரியை தொட்டிருக்கும் நிலையில், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடும் பனிப்பொழிவால் வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் பனியில் உறைந்துள்ளன. பனி சூறாவளியில் சிக்கி, நேற்று வரை 50 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பப்பல்லோ நகரில் வசித்த ஆண்டெல் டெய்லர், 22, என்ற பெண், சமீபத்தில் … Read more

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட தென்கொரிய முன்னாள் அதிபருக்கு பொது மன்னிப்பு

தென்கொரியாவில் கடந்த 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்தவர் லீ மியூங் பாக் (வயது 81). இவர் தனது பதவி காலத்தின்போது பல்வேறு ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் அதுதொடர்பான வழக்கு விசாரணையில் அவர் ஊழல் செய்தது நிரூபணமானது. இதனை தொடர்ந்து அவருக்கு கடந்த 2020-ல் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்த நாட்டின் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் அவரது உடல்நிலை மோசமானதால் கடந்த ஜூன் … Read more