கால்பந்து போட்டியில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தோற்றத்தில் காணப்பட்ட நகைச்சுவை நடிகர் ஹோவர்ட் எக்ஸ்

கத்தாரில் நடைபெற்ற குரோஷியா-மொராக்கோ அணிகளுக்கிடையேயான கால்பந்து போட்டியின்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த நகைச்சுவை நடிகர் ஹோவர்ட் எக்ஸ், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் தோற்றத்துடன் காணப்பட்டார். போட்டி நடந்த கலீஃபா சர்வதேச மைதானத்திற்கு வெளியே கிம் ஜாங் உன்னை போலவே உடை அணிந்து, செய்கைகளை செய்த அவரைப் பார்த்து ரசித்த கால்பந்து ரசிகர்கள் சிலர், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாண ஆளுநர் தேர்தலில் டேனியல் ஆண்ட்ரூஸை எதிர்த்து ஹோவர்ட் எக்ஸ் போட்டியிட்டார். Source … Read more

ஈரானில் பிரபல நடிகை கைது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கெய்ரோ:ஈரானில், ‘ஹிஜாப்’ எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவாக செயல்பட்ட ஆஸ்கார் விருது வென்ற படத்தின் நாயகி தாரனே அலிதுாஸ்தி, 38, அந்த நாட்டுப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேற்காசிய நாடான ஈரானில், பெண்களுக்கு கடுமையான உடைக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. ‘ஹிஜாப்’ எனப்படும் முகம் மற்றும் தலையை மறைக்கும் துணியை அணியாத பெண்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் ஹிஜாப் அணியாததற்காக கைது செய்யப்பட்ட மாஸா அமினி, 22, … Read more

பாகிஸ்தானில் புதிதாக கட்டப்பட்ட காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்..!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் புதிதாக கட்டப்பட்ட காவல்நிலையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 4 போலீசார் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். லக்கி மார்வாட் பகுதியில் உள்ள பர்காய் காவல்நிலையத்தின் மீது, கையெறி குண்டுகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதும் தீவிரவாதிகள் தப்பியோடிய நிலையில், அப்பகுதியை சுற்றிவளைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.  Source link

அடுத்த மாதம் முதல் காங்கேசன் துறைமுகம் – புதுச்சேரி இடையே கப்பல் சேவை?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள காங்கேசன் துறைமுகத்தில் இருந்து இந்தியாவின் புதுச்சேரி இடையே அடுத்த மாதம் முதல் கப்பல் போக்குவரத்து துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் துறைமுகம், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் ஸ்ரீபாலா டி சில்வா கூறியதாக அந்நாட்டு நாளிதழில் வெளியான செய்தியில், அடுத்த மாதம் (2023 ஜன., மத்தியில்) முதல் காங்கேசன் துறைமுகம் முதல் புதுச்சேரி … Read more

அஜர்பைஜானிலிருந்து, ருமேனியா வரை, ஆயிரம் மெகாவாட் மின் பகிர்மான கேபிள் அமைக்க திட்டம்..!

அஜர்பைஜானிலிருந்து, ருமேனியா வரை, உலகில் முதல்முறையாக, ஆயிரத்து 100 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆயிரம் மெகாவாட் மின் பகிர்மான கேபிள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடுகள், மின் தேவைகளுக்காக ரஷ்யாவை சார்ந்திருப்பதை குறைக்க, அஜர்பைஜானிடம் மின்சாரம் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளன. இதற்காக, ஆயிரத்து 100 கிலோமீட்டருக்கு மின் பகிர்மான கேபிள் அமைக்கும் திட்டத்தில் Azerbaijan, Georgia, Romania, Hungary ஆகிய நாடுகளின் தலைவர்கள் கையெழுத்திட்டனர். கருங்கடலுக்கு அடியில் செல்லக்கூடிய இந்த ஆயிரம் மெகாவாட் கேபிளுக்கு ஐரோப்பிய ஆணையம் … Read more

டோக்கியோவில் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக வாகனப்பேரணி..!

குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், சாண்டா கிளாஸ் வேடத்தில் இருசக்கர வாகனப்பேரணி நடைபெற்றது. மத்திய டோக்கியோவின் வீதிகளில் (ஹார்லி-டேவிட்சன் பைக்கில்) நடைபெற்ற இந்தப் பேரணியில், குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.  பேரணியின்போது 4 குழந்தைகள் இல்லங்களுக்குச்சென்று, சுமார் 350 குழந்தைகளுக்கு பொம்மை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், துஷ்பிரயோகம் அதிகரித்திருப்பதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.   Source link

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சாட்டோகிராம்: வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சாட்டோகிராமில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 404, வங்கதேசம் 150 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 258/2 (‘டிக்ளேர்’) ரன் எடுத்தது. பின், 513 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் … Read more

இந்தியாவுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாக்., அமைச்சர் பல்டி| Dinamalar

இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு அணுஆயுத மிரட்டல் விடுத்து பாகிஸ்தான் பெண் அமைச்சர் பேட்டி கொடுத்தார். இது குறித்து இந்திய மீடியாக்களில் செய்தி வெளியான நிலையில், அவர் தனது கருத்தில் இருந்து மாறி, பாகிஸ்தான் பொறுப்பான அணுசக்தி நாடு என அறிக்கை வெளியிட்டுள்ளார். பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில் பேசுகையில், குஜராத் கலவரம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இந்த கருத்துக்கு மத்திய … Read more

Pope Francis: ராஜினாமா ரகசியங்களை வெளியிட்டு அதிர்ச்சியளிக்கும் போப் பிரான்சிஸ்

Vatican Pope Francis: கத்தோலிக்க திருச்சபையின் 266ம் திருத்தந்தை போப்பாண்டவர் நேற்று தனது 86வது பிறந்தநாளைக கொண்டாடினார். ஹோர்கே மாரியோ பெர்கோலியோ என்ற இயற்பெயரைக் கொண்ட போப்பாண்டவரின் பிறந்தநாளுக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த நிலையில், அவர் தனது ராஜினாமா கடிதம் தொடர்பாக வெளியிட்ட தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், போப்பாண்டவரோ, திருச்சபைக்கு சங்கடங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கவே தான் ராஜினாமா கடிதத்தைத் தந்ததாக தெரிவித்தார். இதன் பின்னணியையும் அவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். மேலும் … Read more

அர்ஜெண்டினா-பிரான்ஸ் இடையே இன்று உலககோப்பை கால்பந்து இறுதிப் போட்டி.. கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அர்ஜெண்டினா ரசிகர்கள்..!

கத்தாரில் அர்ஜெண்டினா-பிரான்ஸ் இடையே உலககோப்பை கால்பந்து இறுதிப் போட்டி இன்று நடைபெறுவதையொட்டி தோஹாவில் அர்ஜெண்டினா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தோஹாவின் சூக் சந்தையில் நிரம்பி வழிந்த அர்ஜெண்டினா கால்பந்து ரசிகர்கள், அர்ஜெண்டினாவை ஆதரித்து கொடிகள் மற்றும் பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டும் இசைக்கருவிகள் இசைத்துக்கொண்டும் ஆடி மகிழ்ந்தனர். பந்தேராசோ எனப்படும் இந்நிகழ்ச்சி அர்ஜெண்டினா அணி போட்டிகளுக்கு தயாராகும் முன்பு ரசிகர்களால் நடைபெறும் பாராம்பரிய நிகழ்ச்சியாகும். Source link