கிம் ஜாங் இல்லின் நினைவு தினத்தையொட்டி பொதுமக்களும், வீரர்களும் அவரது சிலையின் கீழ் மலர் வைத்து அஞ்சலி..!

வடகொரியாவில் தற்போதைய அதிபர் கிங் ஜாங் உன்னின் தந்தையும், முன்னாள் அதிபருமான கிம் ஜாங் இல்லின் 11-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நினைவு தினத்தையொட்டி பியாங்யாங்கில் உள்ள கிம் ஜாங் இல் மற்றும் அவரது தந்தை கிம் இல் சுங்கின் வெண்கல சிலைகளின் கீழ் பொதுமக்களும், வீரர்களும் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினர். கிம் ஜாங் இல் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி உயிரிழந்தார்.   Source link

அமெரிக்கா: புதிதாக பிறந்த குழந்தையை கடலில் வீசிய இந்திய வம்சாவளி பெண் கைது

புளோரிடா, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வசித்து வருபவர் ஆரியா சிங் (வயது 29). இந்திய வம்சாவளி பெண்ணான இவர், ஆடவர் ஒருவருடன் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இதில், கடந்த 2018-ம் ஆண்டு மே 30-ந்தேதி ஆரியா சிங்குக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. அதனை துணியால் சுற்றி யாருக்கும் தெரியாமல் கடலின் முகப்பு பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளார். இதன்பின்பு பாய்ண்டன் பீச்சில் அடுத்த நாள், தீயணைப்பு வீரராக உள்ள ஒருவர் படகு பயணம் செய்ய சென்றபோது, … Read more

பெய்ஜிங்கில் கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் அதிகரிப்பு..!

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதையடுத்து, தகனக் கூடம் முன்பு சடலங்களுடன் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. உயிரிழப்புகள் அதிகரிப்பதால் சவப்பெட்டிகளின் தேவையும் அதிகரித்துள்ளது. தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஓட்டுனர்கள், இறுதிச் சடங்குகள் செய்யும் ஊழியர்கள் பணியை செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். கடந்த 7-ம் தேதி கொரோனா கட்டுப்பாடுகளை தளத்துவதற்கு முன்பு இருந்ததைவிட தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

குரோஷிய அணிக்கு மூன்றாவது இடம்: மொராக்கோவை வீழ்த்தியது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அல் ரய்யான்: உலக கோப்பை கால்பந்தில் மூன்றாவது இடம் பிடித்தது குரோஷியா. நேற்று நடந்த போட்டியில் மொராக்கோவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. உலக கோப்பை கால்பந்து தொடரின் 22வது சீசன் கத்தாரில் நடக்கிறது. இதன் அரையிறுதியில் தோல்வியடைந்த குரோஷியா, மொராக்கோ அணிகள், மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மோதின. அல் ரய்யானில் உள்ள காலிபா சர்வதேச மைதானத்தில் இப்போட்டி நடந்தது. இரு அணிகள் ஏற்கனவே மோதிய லீக் போட்டி … Read more

சீன பொருளாதார பாதையால் ஆயுத, போதை பொருள், மனித கடத்தல்கள் அதிகரிப்பு; அதிர்ச்சி தகவல்

பீஜிங், சீனாவில் இருந்து மியான்மர் மற்றும் தாய்லாந்து நாட்டை இணைக்க கூடிய 1,700 கிலோ மீட்டர் தொலைவிலான முத்தரப்பு பொருளாதார பாதையானது சாலைகள், ரெயில்வே நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு திட்ட பணிகளை உள்ளடக்கியது. இந்த பொருளாதார பாதையானது மோயி ஆற்றின் குறுக்கே அமைகிறது. சாலை திட்ட பணிகள் என்ற பெயரில் மெல்ல ஒவ்வொரு நாட்டிலும் தடம் பதிக்கும் சீனா, முதலில் உணவு விடுதிகள், கரோக்கே, சலூன் உள்ளிட்டவற்றை அமைக்கிறது. இப்படி தொடங்கும் அதன் பணியானது … Read more

சிறுகோளின் 10 லட்சம் கிலோ பாறைகள், தூசுகள் விண்ணில் வெளியேற்றம்: நாசா அமைப்பு

நியூயார்க், அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு, கலிபோர்னியாவில் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு நவம்பரில் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் உதவியுடன் டார்ட் என பெயரிடப்பட்ட விண்கலம் ஒன்றை விண்ணுக்கு அனுப்பியது. 10 மாதங்கள் கழித்து, கடந்த செப்டம்பர் 26-ந்தேதி சிறுகோள் ஒன்றை இந்த டார்ட் விண்கலம் மோதி, அதன் திசையை மாற்றியமைத்தது. இதனால், பூமி மீது விண்கல் ஒன்று மோதி, பேரழிவை ஏற்படுத்துவதில் இருந்து தடுத்து பாதுகாக்கும் மனிதகுலத்தின் திறனை பரிசோதிக்கும் வகையிலான இந்த வரலாற்று முயற்சிக்கு உரிய … Read more

7,000 கி.மீ தூரம் சென்று தாக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட அக்னி 5 ஏவுகணை

7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் வகையில், அக்னி 5 ஏவுகணையின் எடையை குறைத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அக்னி ஏவுகணையில் உள்ள எஃகு பகுதிகளை, கலப்பினப் பொருட்கள் கொண்டு டிஆர்டிஓ மாற்றியதன் மூலம், இருபது சதவீதம் எடை குறைப்பை மேற்கொள்ள முடிந்ததாகவும், ஏழாயிரம் கிலோமீட்டர் தாண்டியுள்ள இலக்கை தாக்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பெய்ஜிங் உள்பட சீனாவின் அநேக வடக்கு பகுதிகளை அக்னி 5 ஏவுகணையால் தாக்க முடியும் என பாதுகாப்புத்துறை … Read more

பருவநிலை மாற்றம் எதிரொலி: 30 நாடுகளில் காலரா பரவல்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனீவா, உலக அளவில் காலரா பரவலானது, இதற்கு முந்தின கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக 20-க்கும் குறைவான நாடுகளில் உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நடப்பு 2022-ம் ஆண்டில் காலரா வியாதியானது, 30 நாடுகளில் பரவியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் காலரா மற்றும் தொற்றியல் வியாதிகளுக்கான குழு தலைவர் பிலிப் பார்போசா ஜெனீவா நகரில் பேசும்போது, நடப்பு சூழ்நிலையானது முற்றிலும், முன்னெப்போதும் இல்லாத வகையில் வேறுபட்டு உள்ளது. கடந்த ஆண்டுகளில் … Read more

துனிசியாவில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில் தொடர்ந்து நடைபெற்ற வாக்குப்பதிவு

துனிசியாவில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார நெருக்கடியால் நாடு போராடிவருவதால், இன்றைய வாக்குப்பதிவில் மக்கள் போதிய அளவில் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. முக்கியக் கட்சிகள் தேர்தலை புறக்கணித்ததால் 161 இடங்களுக்கு மொத்தம் 1058 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் நின்றனர். அதிபர் கைஸ் சையத் தன் அதிகாரத்தை பலப்படுத்தும் நோக்கில் செயல்படுவதை கண்டித்து துனிசியாவில் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடைபெற்று வந்தது.   Source link

லஞ்சம் பெற்ற இந்திய வம்சாவளி டாக்டருக்கு 5 ஆண்டுகள் சிறை – அமெரிக்க கோர்ட் அதிரடி உத்தரவு

வாஷிங்டன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டியாகோ நகரைச் சேர்ந்தவர் 55 வயதான நரம்பியல் மருத்துவர் லோகேஷ் எஸ்.தண்ட்வாயா. இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 2010 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில், முதுகுத்தண்டுவட அறுவை சிகிச்சை செய்வதற்காக 3.3 மில்லியன் அமெரிக்க டாலர்(இந்திய மதிப்பில் சுமார் 27 கோடி ரூபாய்) லஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். மைக்கேல் ட்ரோபாட் என்ற நபருக்குச் சொந்தமான மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் செய்வதற்காக இந்த … Read more