ராஜினாமாவை அறிவித்தார் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்

வெலிங்டன்: நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பிப்ரவரி 7ஆம் தேதிக்கு முன்னர் தொழிலாளர் கட்சித் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்வதாகவும் அறிவித்துள்ளார். அதன் பின்னர் அந்தப் பதவிக்கு புதிய நபர் தேர்வாவார். வரும் அக்டோபர் 14ஆம் தேதி நியூசிலாந்தில் பிரதமர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பதவியை முன்கூட்டியே ராஜினாமா செய்துள்ளார். அடுத்துவரும் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் அறிவித்தார். 42 வயதான ஜெசிந்தா … Read more

நியூசிலாந்து பிரதமர் பொறுப்பில் இருந்து விலகுகிறார் ஜெசிந்தா ஆர்டெர்ன்

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், பதவியில் இருந்து விலக இருப்பதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிப்ரவரி 7-ம் தேதி பிரதமர் பதவியில் தனது இறுதி நாளாக இருக்கும் என்றும், இந்த ஆண்டு அக்டோபரில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அறிவித்தார். ஜெசிந்தா ஆர்டெர்ன் 2017-ம் ஆண்டு தனது 37 வயதில் உலகின் இளம் பிரதமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  Source link

ராஜினாமாவை அறிவித்தார் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்

வெலிங்டன்: நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பிப்ரவரி 7ஆம் தேதிக்கு முன்னர் தொழிலாளர் கட்சித் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்வதாகவும் அறிவித்துள்ளார். அதன் பின்னர் அந்தப் பதவிக்கு புதிய நபர் தேர்வாவார். வரும் அக்டோபர் 14ஆம் தேதி நியூசிலாந்தில் பிரதமர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பதவியை முன்கூட்டியே ராஜினாமா செய்துள்ளார். அடுத்துவரும் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் அறிவித்தார். 42 வயதான ஜெசிந்தா … Read more

நிதி நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு உலக வங்கி கடன் தர மறுப்பு

நிதிநெருக்கடியில் தள்ளாடும் பாகிஸ்தானுக்கு  உலக வங்கி கடனுதவி வழங்குவதை ஒத்தி வைத்துள்ளது. சுமார் ஒருபில்லியன் டாலர் கடன்தொகையை வழங்க முன்வந்த உலக வங்கி பாகிஸ்தானின் தீவிரவாத செயல்பாடுகளால் நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே தனது பொருளாதார நிலையில் இருந்து மீள்வதற்காக இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவுகளை மேம்படுத்த பாகிஸ்தான் அழைப்புவிடுத்துள்ளது. ஆனால் தீவிரவாதத்தை முற்றிலும் கைவிடும் வரை பாகிஸ்தானுடன் எந்தவித உறவையும் தொடங்க முடியாது என்று வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. Source link

ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்து கோயில் சூறை – காலிஸ்தான் ஆதரவாளர்களால் பதற்றம்

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு இந்து கோயிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சூறையாடிய சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாபைப் பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்பது காலிஸ்தான் ஆதரவாளர்களின் நீண்ட கால கோரிக்கையாகும். இந்தஅமைப்பினர் இந்தியா உள்ளிட்டசில நாடுகளில் ஒடுக்கப்பட்டு விட்டாலும் கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். சிவா – விஷ்ணு கோயில் இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் அமைந்துள்ள  சிவா- விஷ்ணு கோயிலுக்குள் நேற்று முன்தினம் காலிஸ்தான் ஆதரவாளர்கள் புகுந்தனர். … Read more

ஆப்கானிஸ்தானில் திருடிய குற்றத்திற்காக 4 பேரின் கைகளை துண்டித்த தலிபான்கள்..!

ஆப்கானிஸ்தானில், திருட்டில் ஈடுபட்டதாக கூறி 4 பேரின் கைகளை வெட்டி தலிபான்கள் தண்டனை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. காந்தஹாரில் உள்ள அகமது சாஹி கால்பந்து மைதானத்தில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரின் கைகளை வெட்டி தலிபான்கள் தண்டனை நிறைவேற்றியுள்ளனர். மேலும், பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 9 குற்றவாளிகளுக்கு 39 கசையடிகள் வழங்கப்பட்டன.  இதற்கிடையே, முறையான விசாரணை ஏதுமின்றி மக்களுக்கு கொடூர தண்டனைகளை தலிபான்கள் கட்டவிழ்த்து விடுவதாக இங்கிலாந்து முன்னாள் அமைச்சரின் … Read more

பாகிஸ்தானுடன் தொடர்புடைய 150 தீவிரவாத அமைப்புகள் ஐ.நா. கறுப்பு பட்டியலில் சேர்ப்பு

நியூயார்க்: பாகிஸ்தானுடன் தொடர்புடைய சுமார் 150 தீவிரவாத அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் ஐ.நா.கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் துணைத் தலைவர் அப்துல் ரகுமான் மக்கி, கடந்த திங்கட்கிழமை ஐ.நா.வின் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அல்-காய்தா தடைகள் குழுவின் கீழ் அப்துல் ரகுமான் மக்கி, சர்வதேச பயங்கரவாதியாக பட்டியலிடப்பட்டார். அவருக்கு எதிராக சொத்துகள் முடக்கம், பயணத் தடை உள்ளிட்ட நடவடிக் கைகளை உலக நாடுகள் எடுக்க இத்தடை வகை செய்கிறது. ஐ.நா.வால் … Read more

கால்பந்து போட்டியின் நேரலையில் திடீர் என ஒலித்த அநாகரிக சப்தங்கள்.. தவறுகளுக்காக மன்னிப்பு கோரிய பிபிசி நிறுவனம்!

இங்கிலாந்தில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றின் நேரலையின்போது திடீர் என அநாகரிக சப்தங்கள் ஒலித்ததற்காக பிபிசி நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது. லண்டனில் உள்ள மொலினக்ஸ்  மைதானத்தில் வால்வர்ஹாம்ப்டன் மற்றும் லிவர்பூல் இடையேயான போட்டி நேரலை ஒளிபரப்பின் போது அருவருப்பான சத்தங்கள் ஒலித்துள்ளன. அப்போது போட்டியை சக நண்பர்களுடன் பார்த்துக் கொண்டிருந்த, போட்டி வர்ணனையாளரும் முன்னாள் கால்பந்து வீரருமான லினேகர் சிரிப்பில் ஆழ்ந்தார், இதற்கிடையில், ஜார்வோ என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் யூடியூப் குறும்புக்காரரான டேனியல் ஜார்விஸ், தாம் … Read more

சீன புத்தாண்டு விடுமுறையில் தினசரி கரோனா உயிரிழப்பு 36 ஆயிரத்தை தாண்டும்

பெய்ஜிங்: கடந்த 2020-ம் ஆண்டுக்கு பிறகு கரோனா ஊரடங்குக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. இதன் காரணமாக கரோனா பரவல் அங்கு மீண்டும் தீவிரமடையத் தொடங்கியது. தினசரி உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சீனப் புத்தாண்டு ஜனவரி 22-ம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு சீனாவில் 7 நாட்களுக்கு பொதுவிடுமுறை வழங்கப்பட உள்ளது. தற்போது சீனாவில் கரோனா தொற்று மிக அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் புத்தாண்டு விடுமுறை நாட்களில் அங்கு நாளொன்றுக்கு 36,000 பேர் கரோனா தொற்றால் உயிரிழக்கக் கூடும் … Read more

ஆப்கானிஸ்தானில் கடும் குளிர் பனி காரணமாக 70 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் 70 பேர் கடும் பனியில் உறைந்து உயிரிழந்தனர். குழந்தைகள், பெண்கள் உட்பட 140 பேர் கார்பன் மோனாக்சைடு பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஒரு வாரமாகவே காபூல் உள்ளிட்ட இதர மாகாணங்களில் வெப்ப நிலை சரிந்து, கோர் பகுதியில் குறைந்தபட்ச வெப்ப நிலை மைனஸ் 33 டிகிரியாக சரிந்தது. இந்த குளிர்காலம் சமீப காலங்களில் மிகவும் குளிர்ச்சியானது என்று ஆப்கான் வானிலை மையம் தெரிவித்தது. இந்த குளிர் அலை மேலும் ஒருவாரம் … Read more