ஆன்லைன் காதலரை சந்திக்க ஆவலுடன் 5 ஆயிரம் கி.மீ. பயணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த கதி…

மெக்சிகோ சிட்டி, மெக்சிகோ போதை பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து காணப்படும் நாடு. இதற்காக மேயர் உள்ளிட்ட உயர்ந்த அரசியல் பதவியில் உள்ளவர்கள் கூட கொல்லப்படும் சூழல் காணப்படுகிறது. கடத்தல் கும்பலை ஒழிக்க முடியாமல் அரசு திணறி வருகிறது. இந்த நிலையில், மெக்சிகோ நாட்டில் இருந்து பிளாங்கா ஒலிவியா ஆரில்லேனோ கட்டிரெஸ் (வயது 51) என்ற பெண், ஆன்லைன் வழியே ஜூவான் பேப்லோ ஜீசஸ் வில்லாபுர்தே என்ற ஆடவரை தொடர்பு கொண்டுள்ளார். இந்த தொடர்பு நாளடைவில் காதலானது. … Read more

பிரேசிலில் ராணுவ உடையில் புகுந்து 2 பள்ளிகளில் தாக்குதல்: 3 பேர் பலி; அதிபர் இரங்கல்

பிரேசிலியா, பிரேசில் நாட்டின் எஸ்பிரிடோ சான்டோ மாகாணத்தில், தலைநகர் விடோரியாவில் இருந்து 50 மைல்கள் வடக்கே அராகுரூஸ் என்ற சிறிய நகரில் ராணுவ உடை மற்றும் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் இரண்டு பள்ளிகளில் திடீரென புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளார். இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை மாகாண கவர்னர் ரெனேட்டோ காசாகிராண்ட் உறுதிப்படுத்தி உள்ளார். அராகுரூசில் உள்ள 2 பள்ளி கூடங்களில் கோழைத்தன … Read more

Anoushka Sunak: குச்சிப்புடி நடனமாடிய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மகள்

பிரிட்டன் நாட்டில் நடந்த சர்வதேச குச்சிப்புடி நடன திருவிழாவில், பிரதமர் ரிஷி சுனக்கின் மகள் அனுஷ்கா சுனக், 9, குச்சிப்புடி நடனம் ஆடினார். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் 57வது பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் (42) சில மாதங்களுக்கு முன் பதவியேற்றுக் கொண்டார். அந்நாட்டில் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் முதல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்ற பெருமையுடன், கடந்த 200 ஆண்டுகளில் பிரதமராக பதவியேற்றவர்களில் மிக இளையவர் என்பதும் உள்ளது. வழக்கமாக பிரிட்டன் … Read more

ஓரியன் விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது… வீடியோ வெளியிட்ட நாசா

வாஷிங்டன், நாசாவின் ஓரியன் விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் வெள்ளிக்கிழமை நிலைநிறுத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். புளோரிடாவிலிருந்து சந்திரனை நோக்கி விண்கலம் புறப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, விஞ்ஞானிகள் விண்கலத்தை நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதற்காக அதனை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இயக்கினர். பின்னர் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக நாசா தனது அதிகாரப்பூர்வ வலைதளப்பக்கத்தில் தெரிவித்தது. இந்த விண்கலம் வரும் ஆண்டுகளில் நிலவுக்கு விண்வெளி வீரர்களை எடுத்துச் செல்ல உள்ளது. 1972 இல் கடந்த அப்பல்லோ பயணத்திற்குப் பிறகு அதன் மேற்பரப்பில் காலடி … Read more

கொரோனா ஊரடங்கால் கொல்லப்பட்ட மக்கள்; தேசியகீதம் பாடி போராட்டம்.!

அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்தத் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றுக்கு உலக நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்ததை அடுத்து இந்த ஆண்டு தொடக்கம் முதல் இயல்பு நிலை உலகமெங்கும் திரும்பியது. கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில், … Read more

சீனாவில் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம்| Dinamalar

பீஜிங்: சீனாவின் மேற்கு ஷிண்ஜியாங் மாகாணத்தில், கோவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பொது மக்கள் போராட்டம் நடத்தினர். சீனாவில் தொடர்ந்து கோவிட் பரவல் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 3வது நாளாக கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி வருகிறது. ‘ஜீரோ கோவிட் கொள்கை’ கடைபிடிக்கும் அரசு, அங்கு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அந்நாட்டின் மிகப்பெரிய மாகாணமான ஷின்ஜியாங் மாகாணத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 40 லட்சம் பேர் வசிக்கும் உரும்கி நகரில் வசிக்கும் மக்கள் கடந்த … Read more

வாலுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை…

மெக்ஸிகோவின் வடகிழக்கு பகுதியில் சமீபத்தில், வாலுடன் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. மிகவும் மிருதுவாக தோல் உடன் இந்த வாலில், துளிர் முடிகள் இருந்தன. 5.7 செ.மீட்டர் நீளத்திற்கு இருந்த அந்த வால், 3 மீ.மீட்டரில் இருந்து 5 மீ.மீட்டர் வரையும், வாலின் கடைசிபகுதியை கூர்முனையாகவும் இருந்துள்ளது.  அந்த குழந்தை நிறைமாதத்தில் பிறந்துள்ளது என்றும் கர்ப்பகாலத்தில் எவ்வித பிரச்சனைகளும் இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெற்றோருக்கு இது இரண்டு குழந்தை என்றும் முன்னதாக பிறந்த மகன் ஒருவன் … Read more

சீனாவில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம்

பெய்ஜிங்: சீனாவில் மீண்டும் கரோனா தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து அங்கு கரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ் பரவியது. சர்வதேச அளவில் இதுவரை 64.5 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 62.38 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 66.33 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்தியா … Read more

பிரிட்டனில் குச்சிப்புடி நடனமாடிய பிரதமர் சுனக் மகள்| Dinamalar

லண்டன்: பிரிட்டனில் நடந்த சர்வதேச குச்சிப்புடி நடன திருவிழாவில், பிரதமர் ரிஷி சுனக்கின் மகள் அனுஷா சுனக்கின்(9) குச்சிப்பிடி நடனம் அனைவரையும் கவர்ந்தது. பிரிட்டனின் 57 வது பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்(42) சில மாதங்களுக்கு முன் பதவியேற்று கொண்டார். அந்நாட்டில் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் முதல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்ற பெருமையுடன், கடந்த 200 ஆண்டுகளில் பிரதமராக பதவியேற்றவர்களில் மிக இளையவர் என்பதும் உள்ளது. அங்கு பிரதமர் பதவியில் அமர்ந்துள்ள … Read more

ஒரு திருட்டு, பல கொலைகளால் முறிந்த சவுதி – தாய்லாந்து உறவு – 30 ஆண்டுக்கு பிறகு மீண்டும் துளிர்த்தது

ரியாத்: ஒரு திருட்டு, பல கொலைகளால் முறிந்த சவுதி அரேபியா, தாய்லாந்து உறவு 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் துளிர்த்துள்ளது. கடந்த 1989-ம் ஆண்டில் சவுதி அரேபியாவின் இளைஞர் நலத்துறை தலைவராக இளவரசர் பைசல் பின் பாத் இருந்தார். அவர், அப்போதைய சவுதி மன்னர் பாத்தின் மூத்த மகன் ஆவார். அவரது அரண்மனையில் தாய்லாந்தை சேர்ந்த கிரியாங்ராய் டெங்காமாங் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நூற்றுக்கணக்கான வீரர்களின் பாதுகாப்பில் இருக்கும் அரண்மனை என்பதால் இளவரசர் பைசல் தனது … Read more