ஜப்பானின் கடலோர பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் நீகாட்டா மாகாணத்தில் 6,300 வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு..!

ஜப்பானின் கடலோர பகுதிகளில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவால், நீகாட்டா மாகாணத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் ஏற்பட்டு வரும் பனிப்பொழிவால் சில இடங்களில் சாலைகள் மூடப்பட்டு, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த டிச.17ம் தேதி முதல் இதுவரை 11 பேர் உயிரிழந்ததாகவும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. Source link

குவைத்தில் வேலைக்கு சென்ற இடத்தில் சித்ரவதை அனுபவிக்கிறேன்.. “என்னை காப்பாற்றுங்கள்” என பெண் கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ

வேலைக்கு சென்ற இடத்தில் தான் சித்திரவதை செய்யப்படுவதாகவும், தன்னை காப்பாற்ற கோரியும், குவைத்தில் சிக்கித்தவிக்கும் பெண் ஒருவர் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். புதுக்கோட்டையைச் சேர்ந்த லீலா என்ற அந்த பெண், ஏஜெண்ட் மூலமாக கடந்த ஜனவரி 8ம் தேதி குவைத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில், வேலைக்கு சென்ற வீடுகளில் முறையாக சம்பள பணத்தை கொடுக்காமல் அடித்து சித்ரவதை செய்வதாகவும், இங்கிருந்து தன்னை மீட்டு நாடு திரும்ப உதவும் படியும், லீலா கண்ணீரோடு கோரிக்கை விடுத்துள்ளார். Source link

இனிமேல் தான் பல வேலைகள் உள்ளது; விடுதலைக்கு பின் பிரெஞ்சு சீரியல் கில்லர்.!

1970களில் ஆசியா முழுவதும் நடந்த தொடர் கொலைகளுக்கு காரணமான, நெட்ஃபிக்ஸ் தொடரான “தி சர்ப்பன்” இல் சித்தரிக்கப்பட்ட பிரெஞ்சு சீரியல் கொலையாளி சார்லஸ் சோப்ராஜை விடுவிக்க நேபாள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இரண்டு வட அமெரிக்க சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற வழக்கில், 2003 ஆம் ஆண்டு முதல் இமயமலைக் குடியரசில் சிறையில் உள்ள சோப்ராஜ் (78) உடல்நலக் காரணங்களுக்காக விடுவிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. “அவரை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பது கைதியின் மனித உரிமைகளுக்கு … Read more

மேகன் மார்க்கல் குறித்து கீழ்த்தரமான கருத்து; மன்னிப்பு கோரியது இங்கிலாந்து ஊடகம்.!

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரும், ஹாலிவுட் நடிகையுமான மேகன் மார்க்கல்லை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் இங்கிலாந்து அரச குடும்பத்தில் சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர் திடீரென இங்கிலாந்து அரச குடும்பத்தின் இளவரசர், இளவரசி பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். அரச குடும்பத்தில் இருந்து விலகுவது குறித்து, அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொகுப்பாளர் ஓபரா வின்ப்ரேவுக்கு இருவரும் பேட்டி அளித்தனர். அப்போது மேகன் மார்க்கல் கூறும்போது, “நான் கர்ப்பமாக இருந்தபோது, பிறக்கப்போகும் குழந்தையின் நிறம் … Read more

கூண்டுக்குள் அடைபட்ட பறவையாக உணர்கிறோம்; ஆப்கன் பெண்கள் குமுறல்.!

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி, ஆட்சி மற்றும் அதிகாரத்தை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றினர். சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தாலிபான்கள் மீண்டும் கால் பதித்தனர். ஆப்கானிஸ்தானில் ஓராண்டுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் தாலிபான்கள் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக, அந்நாட்டின் பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் … Read more

ஒமிக்ரான் துணை வகையான XBB தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு..!

அமெரிக்காவில் ஒமிக்ரான் துணை வகையான XBB தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18 சதவீதமாக அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இது 7 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வடகிழக்கு பகுதியில் தொற்று பாதிப்பு அதிகரித்திருப்பதாகவும், லட்சக்கணக்கான மக்கள் கிறிஸ்துமஸ் விடுமுறை பயணத்தை தொடங்கியிருப்பதால் தொற்று வேகமாக பரவும் அபாயம் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. Source link

பிரபல சீரியல் கில்லர் சோப்ராஜ் நேபாள சிறையில் இருந்து விடுதலை| பிரபல ‘சீரியல் கில்லர்’ சோப்ராஜ் நேபாள சிறையில் இருந்து விடுதலை

காத்மாண்டு:’சீரியல் கில்லர்’ எனப் படும், தொடர் கொலையாளி சார்லஸ் சோப்ராஜ், நேபாள நாட்டு சிறையில் இருந்து, நேற்று விடுதலை செய்யப்பட்டார். இந்தியாவை சேர்ந்த ஆணுக்கும், கிழக்காசிய நாடான வியட்நாமைச் சேர்ந்த பெண்ணுக்கும் 1944ல் பிறந்தவர் சார்லஸ் சோப்ராஜ். இவருடைய தந்தையும், தாயும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து, சோப்ராஜ் பிறந்த சில வருடங்களில் பிரிந்து விட்டனர். பின், சோப்ராஜின் தாய் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மற்றொருவரை திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் கட்டுப்பாடு இன்றி வளர்ந்த சோப்ராஜ், … Read more

துபாயில் ஓட்டுநராக பணிபுரியும் இந்திய இளைஞருக்கு ரூ.33 கோடி லாட்டரி!

துபாய்: வளைகுடா நாடுகளில் செழிப்பானதாக அறியப்படும் துபாயில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இந்திய இளைஞர் அஜய் ஓகுலாவுக்கு ரூ.33 கோடி லாட்டரி அடித்துள்ளது. எமிரேட்ஸ் ட்ரா என்ற லாட்டரியை வாங்கிய அவர் ஜாக்பாட் அடித்து மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயுள்ளார். இது தொடர்பாக அவர் கலீஜ் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில், “நான் இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவன். இங்கே துபாயில் கடந்த 4 வருடங்களாக பணி புரிகிறேன். தற்போது ஒரு நகைக் கடையில் ஓட்டுநராக உள்ளேன். மாதம் … Read more

அமெரிக்காவில் வீசி வரும் குளிர்கால பனிப்புயலால் பல்லாயிரக் கணக்கான அமெரிக்கர்களின் விடுமுறை பயணத்திட்டம் தடை

அமெரிக்காவில் வீசி வரும் குளிர்கால பனிப்புயலால், நாட்டின் எரிசக்தி விநியோகம் சீர்குலைந்ததுடன், பல்லாயிரக் கணக்கான அமெரிக்கர்களின் விடுமுறை பயணத்திட்டம் தடைப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில், பனி மற்றும் அதீத குளிர்ந்த காற்று வீசி வரும் நிலையில், பனிப்புயலால் ஒஹியோவில், 50 வாகனங்கள் அடுத்தத்து மோதி விபத்துகுள்ளாகின. மொண்டானா முதல் டெக்சாஸ் வரை பனிபுயல் தாக்கம் நீடித்து வரும் நிலையில், சுமார் 24 கோடி பேர் பனிப்புயல் எச்சரிக்கையின் கீழ் வருகின்றனர். அமெரிக்காவில் சுமார் ஐந்தாயிரத்து 200 விமானங்கள் … Read more