பிரபல சீரியல் கில்லர் சோப்ராஜ் நேபாள சிறையில் இருந்து விடுதலை| பிரபல ‘சீரியல் கில்லர்’ சோப்ராஜ் நேபாள சிறையில் இருந்து விடுதலை

காத்மாண்டு:’சீரியல் கில்லர்’ எனப் படும், தொடர் கொலையாளி சார்லஸ் சோப்ராஜ், நேபாள நாட்டு சிறையில் இருந்து, நேற்று விடுதலை செய்யப்பட்டார். இந்தியாவை சேர்ந்த ஆணுக்கும், கிழக்காசிய நாடான வியட்நாமைச் சேர்ந்த பெண்ணுக்கும் 1944ல் பிறந்தவர் சார்லஸ் சோப்ராஜ். இவருடைய தந்தையும், தாயும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து, சோப்ராஜ் பிறந்த சில வருடங்களில் பிரிந்து விட்டனர். பின், சோப்ராஜின் தாய் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மற்றொருவரை திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் கட்டுப்பாடு இன்றி வளர்ந்த சோப்ராஜ், … Read more

துபாயில் ஓட்டுநராக பணிபுரியும் இந்திய இளைஞருக்கு ரூ.33 கோடி லாட்டரி!

துபாய்: வளைகுடா நாடுகளில் செழிப்பானதாக அறியப்படும் துபாயில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இந்திய இளைஞர் அஜய் ஓகுலாவுக்கு ரூ.33 கோடி லாட்டரி அடித்துள்ளது. எமிரேட்ஸ் ட்ரா என்ற லாட்டரியை வாங்கிய அவர் ஜாக்பாட் அடித்து மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயுள்ளார். இது தொடர்பாக அவர் கலீஜ் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில், “நான் இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவன். இங்கே துபாயில் கடந்த 4 வருடங்களாக பணி புரிகிறேன். தற்போது ஒரு நகைக் கடையில் ஓட்டுநராக உள்ளேன். மாதம் … Read more

அமெரிக்காவில் வீசி வரும் குளிர்கால பனிப்புயலால் பல்லாயிரக் கணக்கான அமெரிக்கர்களின் விடுமுறை பயணத்திட்டம் தடை

அமெரிக்காவில் வீசி வரும் குளிர்கால பனிப்புயலால், நாட்டின் எரிசக்தி விநியோகம் சீர்குலைந்ததுடன், பல்லாயிரக் கணக்கான அமெரிக்கர்களின் விடுமுறை பயணத்திட்டம் தடைப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில், பனி மற்றும் அதீத குளிர்ந்த காற்று வீசி வரும் நிலையில், பனிப்புயலால் ஒஹியோவில், 50 வாகனங்கள் அடுத்தத்து மோதி விபத்துகுள்ளாகின. மொண்டானா முதல் டெக்சாஸ் வரை பனிபுயல் தாக்கம் நீடித்து வரும் நிலையில், சுமார் 24 கோடி பேர் பனிப்புயல் எச்சரிக்கையின் கீழ் வருகின்றனர். அமெரிக்காவில் சுமார் ஐந்தாயிரத்து 200 விமானங்கள் … Read more

துபாயில் கார் ஓட்டும் இந்தியர்… லாட்டரியால் ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் – அவர் செய்யப்போகும் காரியம்!

துபாயில் ஓட்டுநராக பணிபுரியும் இந்தியரான அஜய் ஓகுலா, இந்திய மதிப்பில் ரூ. 33 கோடி மதிப்பிலான லாட்டரியில் பரிசாக கிடைத்துள்ளது. லாட்டரி பரிசை வென்ற பிறகு ஓகுலா, “எனக்கு ஜாக்பாட் அடித்ததை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை”  என்றார்.  தென்னிந்தியாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஓகுலா, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணிபுரிய வந்தார். தற்போது ஒரு நகைக்கடை நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். “இந்தத் தொகையில் எனது தொண்டு அறக்கட்டளையை … Read more

குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மனைவியுடன் சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது மனைவி ஜில் பைடனுடன், தேசிய குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார். வாஷிங்டனில் உள்ள அம்மருத்துவமனைக்கு இருவரும் முகக்கவசம் அணிந்து சென்றிருந்தனர். நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் பெற்றோரிடம் பேசிய ஜோ பைடன், வலிமையாக இருங்கள்… அனைத்து சரியாகிவிடும்” என நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசினார். தொடர்ந்து, ஜில் பைடன் குழந்தைகளுக்கு, “The Snowy Day” என்ற புத்தகத்தை வாசித்துக் காண்பித்தார். Source link

அமெரிக்காவின் தூதரக உயர் பதவிக்கு ரிச்சர்டு ஆர். வர்மா நியமனம்: அமெரிக்க அதிபர் அறிவிப்பு| US Consul General Richard R. Vermas appointment: US Presidents announcement

வாஷிங்டன்: அமெரிக்காவின் வெளியுறவு துறை துணை அமைச்சர் பதவிக்கு இந்திய-அமெரிக்கரான ரிச்சர்டு ஆர். வர்மாவை அதிபர் ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார். இது குறித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டு உள்ள செய்தியில், அமெரிக்காவின் வெளியுறவு துறை மேலாண்மை மற்றும் வளங்களுக்கான துணை அமைச்சராக இந்திய-அமெரிக்கரான ரிச்சர்டு ஆர். வர்மாவை அதிபர் பைடன் நியமனம் செய்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ரிச்சர்டு ஆர். வர்மா: இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதராவார். இவர் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் … Read more

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்து பிறப்பு பாடல்களை 44,000 பேர் ஒன்று கூடி பாடினர்..!

ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 44 ஆயிரம் பேர் ஒன்றாக இணைந்து கிறிஸ்துமஸ் பாடல்களை பாடினர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கொலோன் விளையாட்டு மைதானத்தில் இரவு ஒன்று கூடிய அவர்கள், மொபைல் போன்கள் வெளிச்சத்தில் கிறிஸ்து பிறப்பு பாடல்களை பாடி மகிழ்ந்தனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்தது. Source link

ஒரே நாளில் 3.7 கோடி பேருக்கு கொரோனா: சீனா கணிப்பு | 3.7 Crore People Infected In A Day In World’s Largest COVID-19 Outbreak In China

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெய்ஜிங்: சீனாவில், இந்த வாரத்தில் ஒரே நாளில் 3.7 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு சுகாதாரத்துறை கணித்துள்ளது. இந்தளவு பாதிப்பு உலகளவில் மிக அதிகமாகும். நம் அண்டை நாடான சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியது. அரசு கடுமையான ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததை எதிர்த்து மக்கள் போராட்டம் வெடித்தது. இதையடுத்து அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இதன் விளைவாக, கொரோனா பரவல் … Read more

அமெரிக்காவை உலுக்கிய பனிப்புயல்: 15 லட்சம் பேர் மின்சாரம் இன்றி தவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவை கடுமையாக தாக்கிய “பாம்ப் சூறாவளி” பனிப்புயலால் 15 லட்சம் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். கடும்பனி காரணமாக நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு, விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் பனிபுயல் காரணமாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. வழக்கமாக இயல்பான வெப்பநிலை நிலவும் தென்பகுதி உட்பட நாடுமுழுவதும் வீசிவரும் கடுங்குளிர் காரணமாக வெந்நீர் கூட விரைவில் பனிக்கட்டியாக விடும் சூழல் நிலவி வருகிறது. தேசிய வானிலை சேவை மையத்தின கருத்துபடி, … Read more