ஒரே நாளில் 3.7 கோடி பேருக்கு கொரோனா: சீனா கணிப்பு | 3.7 Crore People Infected In A Day In World’s Largest COVID-19 Outbreak In China

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெய்ஜிங்: சீனாவில், இந்த வாரத்தில் ஒரே நாளில் 3.7 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு சுகாதாரத்துறை கணித்துள்ளது. இந்தளவு பாதிப்பு உலகளவில் மிக அதிகமாகும். நம் அண்டை நாடான சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியது. அரசு கடுமையான ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததை எதிர்த்து மக்கள் போராட்டம் வெடித்தது. இதையடுத்து அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இதன் விளைவாக, கொரோனா பரவல் … Read more

அமெரிக்காவை உலுக்கிய பனிப்புயல்: 15 லட்சம் பேர் மின்சாரம் இன்றி தவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவை கடுமையாக தாக்கிய “பாம்ப் சூறாவளி” பனிப்புயலால் 15 லட்சம் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். கடும்பனி காரணமாக நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு, விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் பனிபுயல் காரணமாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. வழக்கமாக இயல்பான வெப்பநிலை நிலவும் தென்பகுதி உட்பட நாடுமுழுவதும் வீசிவரும் கடுங்குளிர் காரணமாக வெந்நீர் கூட விரைவில் பனிக்கட்டியாக விடும் சூழல் நிலவி வருகிறது. தேசிய வானிலை சேவை மையத்தின கருத்துபடி, … Read more

கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய மெக்கா நகரம்..!

சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் பெய்த கனமழையால் நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. ஜெட்டா நகரில் வரலாறு காணாத மழை பெய்து ஒரு மாதத்திற்குப் பிறகு, இஸ்லாமியர்களின் புனித யாத்திரை ஸ்தலமான மெக்கா நகரில் கனமழை பெய்தது. இரவு பெய்த கனமழையால் மெக்காவின் தெருக்களில் மழை நீர் பெருக்கடுத்து ஓடியதால் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அடுத்து வரும் நாட்களில் மெக்கா, மதீனா மற்றும் தபூக் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தேசிய வானிலை … Read more

கொரோனாவுக்கு நடுவே சீனாவில் உதட்டு முத்த ட்ரெண்டிங்..! இதெல்லாம் தேவையா பாஸ்?

Mouth Buddies Kissing Trend : ஒரு வினோதமான நவீன டேட்டிங் நடைமுறை தற்போது சீனாவில் திடீரென தோன்றியுள்ளது. இதில், அறிமுக இல்லாத இருவர் தங்களுக்குள் ‘முத்தம்’ கொடுக்கிறார்கள். இந்த டிரெண்டை ஆங்கிலத்தில் ‘Mouth Buddies’ என்று அழைக்கின்றனர். அதாவது ‘Mouth Buddies’ என்றால் இரு நபர்கள் சேர்ந்து முத்தம் மட்டும் கொடுத்துக்கொள்ளலாம், ஆனால் காதலில் விழக்கூடாது. அதுமட்டுமில்லாமல், யார் என்றே தெரியாத அந்த நபரை ஒருமுறை மட்டுமே சந்திக்க வேண்டும் என்றும் இரண்டாம் முறை டேட்டிங் செல்லக்கூடாது. … Read more

உலகளவில் மிக அதிகளவிலான தொற்று பரவல் | சீனாவில் தினசரி கரோனா பாதிப்பு 3.7 கோடி:  இந்த மாதத்தில் மட்டும் 24.8 கோடி பேருக்கு தொற்று

பெய்ஜிங்: சீனாவில் கரோனா தினசரி பாதிப்பு 3.7 கோடியாகவும், இந்த மாதத்தில் மட்டும் 24 கோடியே 80 லட்சம் பேருக்கு, அதாவது சீன மக்கள் தொகையில் 18 சதவீதம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும் சீனாவின் தேசிய சுகாதார ஆணைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் தேசிய சுகாதார ஆணைய கூட்டம் பெய்ஜிங்கில் கடந்த புதன்கிழமை நடந்தது. இதில் சீனாவின் கரோனா பரவல் நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது இந்த வாரத்தில் சீனாவின் தினசரி … Read more

சிறையில் விடுதலை செய்யப்பட்ட சீரியல் கொலையாளி சார்லஸ் சோப்ராஜ் இரவோடு இரவாக பிரான்சுக்கு நாடு கடத்தப்பட்டான்..!

நேபாள சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சீரியல் கொலையாளி சார்லஸ் சோப்ராஜ் பிரான்சுக்கு நாடு கடத்தப்பட்டான். 30க்கும் மேற்பட்ட கொலைகளை செய்ததாக கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 19 ஆண்டுகள் காட்மண்ட் சிறையில் கழித்த சோப்ராஜ் வயதுமூப்பு காரணமாக முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டான். சிறையில் இருந்து வெளிவந்த சோப்ராஜ், நீதிமன்ற உத்தரவுப்படி இரவோடு இரவாக பிரான்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.   Source link

சீன வண்ண ஒளித் திருவிழா.. ஒளியின் மாயாஜாலத்தைக் கண்டுரசித்த பார்வையாளர்கள்..!

சிலி தலைநகர் சாண்டியாகோவில் சீன வண்ண ஒளித் திருவிழா தொடங்கியது. சீனாவிற்கும் – சிலிக்கும் இடையிலான 52 ஆண்டுகால உறவை நினைவுபடுத்தும் விதமாக பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வண்ண ஒளித்திருவிழாவில் சீன கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் அந்நாட்டு கைவினைக் கலைஞர்களின் கைவண்ணங்களில் பல வடிவங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விதவிதமான கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. கண்ணைப்பறிக்கும் வண்ண ஒளியில் மின்னிய பொம்மைகள், அலங்காரங்களைக் கண்டு பார்வையாளர்கள் வியந்தனர்.  Source link

அமெரிக்கா மறைமுக போர் நடத்துகிறது – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குற்றச்சாட்டு

மாஸ்கோ: ‘‘உக்ரைன் மீதான போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறோம். ஆனால், ரஷ்யா மீது அமெரிக்கா மறைமுக போர் நடத்தி வருகிறது’’ என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குற்றம் சாட்டி உள்ளார். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இணைய உக்ரைன் முடிவெடுத்தது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளுடன் உக்ரைன் நெருக்கம் காட்டியது. இந்த நடவடிக்கைகளால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. தொடர்ந்து உக்ரைன் – ரஷ்யா போர் … Read more

COVID Horror: விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா அலை! புத்தாண்டை பதம் பார்க்கும் கோவிட்

நியூடெல்லி: சீனாவில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் கோவிட் பரவலானது, முன்னெப்போதையும் விட மிகவும் அதிகமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீன அரசு வெளியிடும் அதிகாரபூர்வமான தரவுகளுக்கு மாறாக, ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை 5,000 க்கும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணிப்பை, பிரிட்டனைச் சேர்ந்த Airfinity என்ற சுகாதார தரவு நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த புதிய கோவிட் அலையினால், சீனாவில் 1.3 முதல் 2.1 மில்லியன் மக்கள் இறக்கக்கூடும் என்றும் இந்த பகுப்பாய்வு அதிர்ச்சியளிக்கிறது. … Read more

‘ட்ரம்ப் சுவர்’ ஏறிய குஜராத் வாலிபர் உயிரிழப்பு

மெக்சிகோ: மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைபவர்களை தடுக்க, முன்னாள் அதிபர் டிரம்ப் ஆட்சி காலத்தில் எல்லையில் பிரம்மாண்ட தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. இதை ‘ட்ரம்ப் சுவர்’ என்றே அழைக்கின்றனர். குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டம் போரிசனா கிரா மத்தைச் சேர்ந்த பிரிஜ்குமார் யாதவ் (32), சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய மனைவி, கைக் குழுந்தையுடன் மெக்சிகோ வந்தார். அங்கு ட்ரம்ப் தடுப்புச் சுவரில் ஏறிய பிரிஜ்குமார் கீழே விழுந்து இறந்தார். அவது குழந்தை, மனைவி … Read more