அமெரிக்காவில் கடும் பனிப்புயல்! 2200 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

அமெரிக்காவில் சூறாவளியாக வீசும் பனிபொழிவு: வானிலை காரணமாக அமெரிக்காவில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. பல மாநிலங்களில், வெப்பநிலை மைனஸ் 10 டிகிரி செல்சியஸுக்கு கீழே உள்ளது. அதே சமயம் தொடர் பனிப்பொழிவும் மக்களுக்கு பேரிடியாக மாறியுள்ளது. இதற்கிடையில், இந்த சீசனில் முதல் முறையாக மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு, கடுமையான பனிப்பொழிவு மற்றும் உறைபனி வெப்பநிலை காரணமாக 2,300 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஸ்தப்பித்து போன இயல்பு வாழ்க்கை தொடர் பனிப்பொழிவு, இடைவிடாத மழை மற்றும் … Read more

ரஷ்யா எதிரி..சீனா போட்டியாளர்..அமெரிக்கா உறுதி.!

சுதந்திரமான மற்றும் திறந்த சர்வதேச அமைப்புக்கு ரஷ்யா உடனடி அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சர்வதேச ஒழுங்கை மறுவடிவமைக்கும் நோக்கத்துடன் சீனாவை அமெரிக்காவின் “ஒரே போட்டியாளராக” அவர் ஒப்புக்கொண்டார். மேலும், உக்ரேனில் ரஷ்ய மோதலை திட்டவட்டமாக முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரே வழி இராஜதந்திரம் என்றும் அடிக்கோடிட்டுக் காட்டினார். இது குறித்து அவர் கூறும்போது “ரஷ்யா சுதந்திரமான மற்றும் திறந்த சர்வதேச அமைப்புக்கு உடனடி அச்சுறுத்தலாக இருக்கும்போது, சர்வதேச ஒழுங்கை … Read more

சீனாவில் பரவிவரும் உருமாறிய கொரோனா தொற்று..! பிணவறைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள சடலங்கள்

சீனாவில் உருமாறிய கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், சோங்கிங் மாகாணத்தில் உள்ள பிணவறையில் ஏராளமான சடலங்கள் வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 30 சடலங்கள், பாலித்தீன் கவர்களின் சுற்றப்பட்ட நிலையில், எரியூட்டுவதற்காக மேசைகள் மீது வைக்கப்பட்டுள்ள காட்சி, அதில் இடம்பெற்றுள்ளது. சீனாவில் கொரோனா பரவலால் அதிகளவில் மரணங்கள் நிகழுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என சீன அரசு தெரிவித்து வருகிறது. Source link

பல்கலையில் பெண்கள் படிக்க தடை ஏன்? – தாலிபான் அமைச்சர் விளக்கம்!

ஹிஜாப் விதிகளை முறையாக பின்பற்றாத பெண்கள், பல்கலைக்கழகத்திற்கு செல்லும் போது திருமணத்திற்கு செல்வது போல் உடை அணிவதாக, ஆப்கானிஸ்தான் உயர் கல்வித் துறை அமைச்சர் நேதா முகமது நதீம் தெரிவித்து உள்ளார். தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி, ஆட்சி மற்றும் அதிகாரத்தை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றினர். சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தாலிபான்கள் மீண்டும் கால் பதித்தனர். … Read more

இம்ரான்கானின் முன்னாள் மனைவிக்கு 3வது திருமணம்.. தன்னை விட 13 வயது இளையவரை மணந்தார்..!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் முன்னாள் மனைவி ரெஹாம், தன்னை விட 13 வயது இளையவரை,3-வதாக திருமணம் செய்துகொண்டுள்ளார். தற்போது 49 வயதாகும் ரெஹாம், மாடலும், நடிகருமான 36 வயதான மிர்சா பிலால் பைக்கை, அமெரிக்காவில் திருமணம் செய்து கொண்டதாக, ட்விட்டரில் அறிவித்துள்ளார். மிர்சா பிலால் பெற்றோரின் ஆசீர்வாதத்துடனும், தனது மகனின் ஒப்புதலுடனும் இந்த திருமணம் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான்-பிரிட்டன் தொலைக்காட்சி செய்தியாளரான ரெஹாம் மற்றும் இம்ரான்கான் இடையே கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் … Read more

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்ட புதிய புகைப்படம்

வாஷிங்டன்: ஒளிரும் நட்சத்திரத்தின் ஆறு புள்ளிகளைக் கொண்ட புகைப்படத்தை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்டுள்ளது. இந்த பரந்த அண்டத்தில் ‘NGC 7469’ விண்மீன் திரளில் மைய பகுதியில், அதாவது அதன் இதயப் பகுதியில் உள்ள நட்சத்திரத்தின் ஒளிரும் புகைப்படத்தைதான் தற்போது ஜேம்ஸ் வெப் பதிவு செய்து அனுப்புயுள்ளது. இப்படம் குறித்து ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வெளியிட்ட குறிப்பில், “விண்மீன் செயல்பாட்டில் உள்ள விண்மீன் கருவை கொண்டுள்ளது. இது மிகவும் பிரகாசமான மத்திய பகுதி. இது மையத்தில் விழும்போது … Read more

உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும்; ரஷ்ய அதிபர் நம்பிக்கை.!

உக்ரைன் நேட்டோவில் இணைய அதிபர் ஜெலன்ஸ்கி நடவடிக்கைகள் மேற்கொண்டதால், ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது. அதன்படி உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. தாக்குதலை தொடுத்த ரஷ்யா, இரண்டே நாளில் உக்ரைன் தலைநகர் கீவ் வரை முன்னேறியது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா ஆயுதங்களை தாராளமாக உக்ரைனுக்கு வழங்க ஆரம்பித்தது. அதேபோல் பல்வேறு நேட்டோ உறுப்பு நாடுகளும் தாராளமாக ஆயுதங்களை வழங்கின. இதனால் கடந்த 10 மாதங்களாக போர் முடிவுக்கு வராமல் நீண்டு … Read more

சிறிய ரக விமானம் கடற்கரையில் விழுந்து விபத்து..!

அமெரிக்காவில், சிறிய ரக பயணிகள் விமானமொன்று கலிபோர்னியா கடற்கரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. மலிபு நகரம் நோக்கி சென்ற அந்த விமானத்தில் திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டதால், விமானி கடற்கரையில் விமானத்தை தரையிறக்க முயன்றார். அப்போது தலைக்குப்புற விழுந்த விமானத்தில் சிக்கிக்கொண்ட இருவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். Source link

'சீரியல் கில்லர்' சார்லஸ் சோப்ராஜ் 19 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை

காத்மாண்டு: சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ் 19 ஆண்டுகளுக்குப் பிறகு நேபாள சிறையில் இருந்து விடுதலையாகியுள்ளார். அவர் விடுதலையாகியுள்ள நிலையில், அவருடைய பாஸ்போர்ட், விசா ஆகியனவற்றை அவரிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சார்லஸ் சோப்ராஜிடம் பல்வேறு நாடுகளின் பாஸ்போர்ட் உள்ளது. அவருடைய உண்மையான பாஸ்போர்ட் எதுவென்பது தெரிந்த பின்னர் அவரை பிரான்ஸுக்கு நாடுகடத்த முடியும். முன்னதாக, சார்லஸ் சோப்ராஜ் தன் முதுமையைக் காரணம் காட்டி விடுதலை கோரியிருந்தார். இந்நிலையில், நேபாள் உச்ச நீதிமன்றம் அவரை விடுவித்ததோடு … Read more

அமெரிக்காவில் வீசிவரும் கடும் பனிப்புயல்… ஆயிரக்கணக்கான விமான சேவைகள் ரத்து.. நெடுஞ்சாலைகளும் மூடல்!

அமெரிக்காவில் வீசிவரும் பனிப்புயலால் ஆயிரக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் தாமதமாக வந்ததுடன், 5 ஆயிரத்து 500 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பனி கொட்டிக்கிடப்பதால் பல இடங்களில் வாகனப் போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. விமான சேவைகள் ரத்து, சாலை போக்குவரத்து தடை உள்ளிட்டவைகளால் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக திட்டமிடப்பட்டிருந்த பயணங்களும் தடைபட்டுள்ளன. Source link