உலக செய்திகள்
நீங்கள் செய்வது தானம் அல்ல முதலீடு: அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜெலன்ஸ்கி பேச்சு
வாஷிங்டன்: நீங்கள் செய்வது தானம் அல்ல முதலீடு என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு நிகழ்த்தி 300 நாட்கள் ஆகிவிட்டது. ரஷ்ய படையெடுப்புக்கு பிறகு உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை. 300 நாட்கள் கடந்த நிலையில் முதல்முறையாக அமெரிக்கா சென்றுள்ளார். வெள்ளை மாளிகையை அடைந்ததும் அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது மனைவியுடன் வெள்ளை மாளிகைக்கு வெளியே வந்து ஜெலென்ஸ்கிக்கு … Read more
அமெரிக்காவில் 2020 முதல் இதுவரை கரோனா பாதிப்பு 10 கோடியை தாண்டியது: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல்
வாஷிங்டன்: அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா தொற்று கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்டு உலகம் முழுவதும் பரவியது. அமெரிக்காவில் அந்த ஆண்டு முதல் நேற்று வரை கரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியே 3 ஆயிரத்து 814. இது உலகிலேயே மிக அதிகம். மொத்த உயிரிழப்பு 10,88,236. இதுவும் உலகிலேயே மிக அதிகம். அமெரிக்க மாகாணங்களில் அதிக அளவாக கலிபோர்னியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 16 … Read more
சீனா உட்பட பல நாடுகளில் அதிகரிக்கும் கரோனா தொற்றால் பயப்பட தேவையில்லை – மத்திய அரசின் நோய் தடுப்பு துறை தகவல்
புதுடெல்லி: ‘‘சீனா உட்பட பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதால், இந்தியாவில் பயப்பட தேவையில்லை. இங்கு இயற்கையான தொற்று மற்றும் தடுப்பூசி கலந்து நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது’’ என்று மத்திய அரசின் நோய் தடுப்புப் பிரிவு கூறியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியது. அதன்பின் படிப்படியாக பல நாடுகளில் குறைந்தது. ஆனால், சீனாவில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்தது. தற்போது சீனா, ஜப்பான், கொரியா உட்பட … Read more
தனக்குத்தானே கொரோனாவை வரவழைத்து கொண்ட பிரபல சீன பாடகி.. குவியும் கண்டங்கள்..!
சீனாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், பிரபல சீனப் பாடகி தனக்குதானே கொரோனா வைரஸ் பாதிப்பை வரவழைத்து கொண்டதாக அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்திள்ளது. 38 வயதான Jane Zhang Liangyin, சீனாவில் பல்வேறு மேடையில் பாடியுள்ளார். இவரது சமூக வலைத்தளத்தில் 43 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் அவர் தனது சமூக வலைப்பக்கத்தில் கொரோனாவிற்கு தயாராகி வருவதாகத் தெரிவித்திருந்தார். அதன்பின் மறுநாள் தனக்கு அனைத்து அறிகுறிகளும் மறைந்து விட்டதாக குறிப்பிட்டிருந்தார். இப்படியொரு பொறுப்பில்லாத … Read more
உக்ரைனுக்கு மேலும் 1.80 பில்லியன் டாலர் ராணுவ உதவி வழங்க அமெரிக்கா திட்டம்..!
உக்ரைன் ராணுவத்தை வலுப்படுத்த மேலும் 1.80 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ உதவியை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஒரு பில்லியன் டாலர் மதிப்பில் அதிநவீன ‘பேட்ரியாட்’ வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்களில் பொருத்தப்படும் அதிநவீன குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் – வெடிமருந்துகள் மற்றும் 800 மில்லியன் டாலர் நிதியுதவி இந்த தொகுப்பில் அடங்கும் என்று கூறப்படுகிறது. (உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் 11 மாதத்தை நெருங்கியுள்ள நிலையில், உக்ரைனின் பல நகரங்கள் மீது … Read more
விடுதலையாகும் உலகம் சுற்றிய சைக்கோ கொலையாளி… 20க்கும் மேலே கொலைகள் – யார் இந்த சோப்ராஜ்?
1970 காலகட்டங்களில் ஆசிய முழுவதும் பல்வேறு கொலைகளை செய்து தண்டனை பெற்ற பிரான்ஸ் சைக்கோ கொலையாளி, சார்லஸ் சோப்ராஜ், 19 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு இன்று விடுதலை செய்யப்படுகிறார். நேபாள் நாட்டு சிறையில் இருக்கும் அவரை உடல்நலக்குறைவு, வயது முதிர்வு, அதிக ஆண்டுகள் தண்டனை ஆகியவற்றின் அடிப்படையில் அவரை விடுதலை செய்து நேபாள உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இவரின் வாழ்வை அடிப்படையாக வைத்து, ‘The Serpent’என்ற வெப்சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் உள்ளது. 70களில் இருபதிற்கும் மேற்பட்ட … Read more
கொலம்பியாவில் எரிபொருள் சேமிப்பு தொட்டி வெடித்து விண்ணை முட்டும் கரும்புகை..!
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் எரிபொருள் சேமிப்பு தொட்டி வெடித்து விபத்துக்குள்ளானது. பாரன்குவிலாவில் உள்ள அந்த பிரம்மாண்ட எரிபொருள் சேமிப்பு தொட்டி புதன்கிழமை தீப்பற்றி வெடித்து சிதறியது. இதில், படுகாயமடைந்த தீயணைப்புவீரர் ஒருவர் உயிரிழந்த நிலையில், எண்ணெய் கிடங்கில் இருந்து விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை வெளியேறி வருகிறது. இதற்கிடையில், தீ விபத்தை கட்டுப்படுத்த தீயணைப்புவீரர்கள் போராடி வருகின்றனர். தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் வரை அந்நகர துறைமுக செயல்பாடுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். Source link
சீனாவில் 15 லட்சம் பேர் உயிரிழப்பர் கொரோனா குறித்த புதிய ஆய்வு தகவல்| Dinamalar
லண்டன், கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், சீனாவில் ௧௫ லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக, ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் அண்டை நாடான சீனாவில், ௨௦௧௯ இறுதியில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ், உலகெங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இங்கு, மக்கள் நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து, சீன அரசு பல கட்டுப்பாடுகளை விலக்கியது. இதையடுத்தே கொரோனா வைரஸ் பரவல் … Read more
300 நாட்களுக்கு பின் முதல் வெளிநாட்டு பயணம் – ஜோ பைடனை சந்தித்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி
வாஷிங்டன்: உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை வெள்ளை மாளிகைக்குச் சென்று சந்தித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு நிகழ்த்தி 300 நாட்கள் ஆகிவிட்டது. ரஷ்ய படையெடுப்புக்கு பிறகு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை. 300 நாட்கள் கடந்த நிலையில் முதல்முறையாக அமெரிக்கா சென்றுள்ளார். வெள்ளை மாளிகையை அடைந்ததும் அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது மனைவியுடன் வெள்ளை மாளிகைக்கு வெளியே வந்து ஜெலென்ஸ்கிக்கு … Read more