பல்கலையில் பெண்கள் படிக்க இடைக்கால தடை: தலிபான்கள் உத்தரவால் சர்ச்சை

காபூல்: ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை விதித்து தலிபான்கள் அரசு உத்தரவிட்டுள்ளது. இது பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. அங்கு பெண்களுக்கு, எதிராக கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்து வருகிறது. தலிபான்களின் ஓராண்டு ஆட்சியில், பெண்கள் உரிமைகள் முழுமையாக பறிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புர்கா அணியாமல் வெளியே செல்லும் பெண்களின் தலை துண்டிக்கப்படுகிறது. நெயில் பாலிஷ் செய்தால் விரல்கள் வெட்டப்படுகின்றன. … Read more

விவாகரத்து வழக்கு: 1 மில்லியன் தரேன்… வழக்கை முடித்து கொள்வதாக நடிகர் ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் அறிவிப்பு

நியூயார்க், ஹாலிவுட்டின் பிரபல ‘பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்” திரைப்பட தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜானி டெப். இவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவரது முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு ஜானி டெப் எதிர்ப்பு தெரிவித்து, தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கவே தன் மனைவி இப்படி வழக்குப் பதிவு செய்ததாக பதில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, ஜானி டெப் நிரபராதி என்றும் அவரது … Read more

மக்கள் சிரித்தால் மரண தண்டனை?; அதிபர் திடீர் உத்தரவு!

உலகில் ஒரு மர்ம தேசம் இருக்கிறது என்றால் அது ‘வடகொரியா’ என்பது தான் பலரது பதிலாக இருக்கும். ஆம். வடகொரியா எனும் இந்த மர்ம தேசத்தில் நாம் நினைத்து கூட, பார்க்க முடியாத விஷயங்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டு இருக்கும். இந்த நாட்டின் அதிபரான ‘கிங் ஜாங் உன்’ சற்று அல்லது ரொம்பவே வித்தியாசமான பேர் வழி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட, ‘நாட்டில் உணவு பஞ்சம். மக்கள் அளவோடு உணவு உண்ண … Read more

முதன்முறையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க பயணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கீவ்: உக்ரைன் போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த, பிப்., 25ல் போர் தொடுத்தது. கடந்த ஒன்பது மாதங்களாக போர் நீடித்து வருகிறது. ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் கடும் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் … Read more

பிஎப்.7 ரக கொரோனா பரவல்: சீன விமான தடையை வலியுறுத்தும் 10-ல் 7 இந்தியர்கள்

புதுடெல்லி, சீனாவில் உகான் நகரில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, 2019 டிசம்பரில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. எனினும், அதற்கு முன்பே ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிற நாடுகளின் கழிவு நீரில் கொரோனா மாதிரிகள் இருப்பது பரிசோதனை முடிவில் தெரிய வந்தது. சீனாவில் முதலில் தொற்று அறியப்பட்டாலும், கடுமையான கட்டுப்பாடுகளால் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது உலக நாடுகளை அச்சரியத்தில் தள்ளியது. இரண்டரை ஆண்டுகளாக உலக நாடுகள் கொரோனா பெருந்தொற்றுகளால் பாதிக்கப்பட்டு … Read more

ஆயுதம் வாங்க அமெரிக்கா சென்ற உக்ரைன் அதிபர்.!

உக்ரைன் நேட்டோவில் இணைய அதிபர் ஜெலன்ஸ்கி நடவடிக்கைகள் மேற்கொண்டதால், ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது. அதன்படி உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. தாக்குதலை தொடுத்த ரஷ்யா, இரண்டே நாளில் உக்ரைன் தலைநகர் கீவ் வரை முன்னேறியது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா ஆயுதங்களை தாராளமாக உக்ரைனுக்கு வழங்க ஆரம்பித்தது. அதேபோல் பல்வேறு நேட்டோ உறுப்பு நாடுகளும் தாராளமாக ஆயுதங்களை வழங்கின. இதனால் கடந்த 10 மாதங்களாக போர் முடிவுக்கு வராமல் நீண்டு … Read more

சிரித்தால், அழுதால் அவ்வளவு தான் உயிர் போச்சு – வடகொரியா அதிபர் போட்ட அதிரடி உத்தரவு

சியோல், வடகொரியா இந்த உலகத்தை தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைப்பதில் முன்னணி நாடாக திகழ்கிறது. அந்த விதத்தில் அங்கு சாதாரணமாக வெளிநாட்டினர் நுழைய முடியாது. கடும் கட்டுப்பாடுகள் கொண்ட நாடாக விளங்குகிறது. அங்குள்ள மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. விசித்திரமான சர்வாதிகார சட்டங்கள் அமலில் உள்ளன. வடகொரியாவின் தற்போதைய அதிபராக கிம் ஜாங்-வுன் உள்ளார். அவரது கண் அசைவை மீறி அங்கு ஒரு எறும்பு கூட சுதந்திரமாக செயல்பட முடியாது. அந்த அளவிற்கு கடுமையான விதிகளும் … Read more

ஆசியாவை ஆட்டிபடைத்த ஃப்ரெஞ்ச் சீரியல் கில்லர் விடுதலை.!

1970களில் ஆசியா முழுவதும் நடந்த தொடர் கொலைகளுக்கு காரணமான, நெட்ஃபிக்ஸ் தொடரான “தி சர்ப்பன்” இல் சித்தரிக்கப்பட்ட பிரெஞ்சு சீரியல் கொலையாளி சார்லஸ் சோப்ராஜை விடுவிக்க நேபாள உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இரண்டு வட அமெரிக்க சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற வழக்கில், 2003 ஆம் ஆண்டு முதல் இமயமலைக் குடியரசில் சிறையில் உள்ள சோப்ராஜ் (78) உடல்நலக் காரணங்களுக்காக விடுவிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. “அவரை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பது கைதியின் மனித … Read more

கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டத்தால் கைவிடப்பட்ட வீரர்கள் ஊர்வலம்.. ரசிகர்கள், போலீசார் இடையே மோதல்!

உலகக்கோப்பையுடன் நாடு திரும்பிய அர்ஜென்டினா வீரர்களை வரவேற்க, அதிகளவில் ரசிகர்கள் குவிந்ததால், பேருந்து ஊர்வலத்தை கைவிட்ட வீரர்கள், ஹெலிகாப்டரில் வலம் வந்தனர். பியூனஸ் அயர்சில், சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிற்கு திறந்த பேருந்தில் கோப்பையுடன் வீரர்கள் ஊர்வலம் செல்ல திட்டமிட்ட நிலையில், அதிகாலை முதலே அவர்களை காண லட்சக்கணக்கில் ரசிகர்கள் அணிவகுத்து நின்றனர். ரசிகர்களின் கூட்டத்தில் பேருந்து ஊர்ந்து சென்ற நிலையில், கட்டுக்கடங்காத கூட்டத்தால் பேருந்து ஊர்வலம் கைவிடப்பட்டது. பின்னர், அணிவகுப்பு நடத்த திட்டமிட்ட பாதையில் ஹெலிகாப்டரில் … Read more

அமெரிக்கா: கொரோனா பரவல் அச்சமுள்ள சூழலில் காய்ச்சல் தடுப்பு மருந்துகளுக்கு கடும் கட்டுப்பாடு

வாஷிங்டன், அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் இரண்டரை ஆண்டுகளாக கடுமையாக பாதித்திருந்த நிலையில், சமீப காலங்களாக அதில் இருந்து ஓரளவு விடுபட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். பெருந்தொற்றுக்கு பின்னான முதல் குளிர்கால சூழலை மக்கள் எதிர்கொண்டுள்ளனர். எனினும், கொரோனா பாதிப்புகள் சமூக மட்டங்களில் அதிகரித்தே காணப்படுகிறது. இந்த சமூக பரவலான பகுதிகளில் அந்நாட்டவர் 14 சதவீதத்தினர் வசிக்கின்றனர். இதனை முன்னிட்டு அதிபர் பைடன், கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. … Read more