எங்களிடம் அணு ஆயுதம் இருப்பதை மறந்துவிட வேண்டாம்; பாகிஸ்தான் எச்சரிக்கை.!

ஒசாமா பின்லேடன் தற்போது கொல்லப்பட்டுவிட்டார். ஆனால் அவரை விட அதிகமாக குஜராத் கலவரத்தில் கொன்று குவித்தவர் தற்போது பிரதமராக இருக்கிறார் என இந்திய பிரதமர் மோடி குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ அவதூறு கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோவின் உருவ பொம்மைகளை எரித்தனர். இந்தநிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஆதரவாக கருத்து … Read more

EctoLife: வருகிறது செயற்கை கருப்பை… அறிவியலின் புதிய படைப்பு!

இயந்திரங்கள் மற்றும் கேஜெட்களின் முக்கியத்துவம் மனித வாழ்க்கையில் நீண்ட காலத்திற்கு முன்பே ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டது. எதிர்காலத்தில் இயந்திரங்கள் மூலம் என்ன என்ன நடக்கும் என்று கணிப்பது கடினம்.  அந்த வகையில் இப்போது செயற்கை கருப்பை மூலம் குழந்தைகளை பிறக்க வைக்க முடியும் என்று எக்டோ லைப் (EctoLife) என்ற தனியார் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தான் உலகில் செயற்கையாக உருவாக்கப்பட்ட முதல் கருவறை நிறுவனம் என்றும் கூறப்படுகிறது. எக்டோலைப் (Ecto Life) நிறுவனம் … Read more

இலங்கை பொருளாதார நெருக்கடி: ஐ.நா., ரூ.11 கோடி நிதியுதவி!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரம் குடும்பங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு சார்பில் 11 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது. அண்டை நாடான இலங்கையில் பல மாதங்களாக நீடித்து வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக நாடுகளும், பல்வேறு சர்வதேச அமைப்புகளும் உதவி வருகின்றன. குறிப்பாக கடுமையான விலைவாசி உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிக்கும் ஏழை குடும்பங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புகள் நேரடியாகவே உதவிகளை … Read more

நாட்டில் 5 ஜி சேவை வழங்க 20,980 செல்போன் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன – அமைச்சர் தேவுசிங் சவுகான்

நாட்டின் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 5 ஜி சேவை வழங்குவதற்காக, இதுவரை இருபதாயிரத்து 980 செல்போன் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளதாக, மத்திய தகவல் தொடர்பு இணை-அமைச்சர் தேவுசிங் சவுகான் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில்,  நவம்பர் 26-ஆம் தேதி வரை, 20 ஆயிரத்து 980,  5 ஜி செல்போன் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், ஒரு வாரத்திற்கு சராசரியாக இரண்டாயிரத்து 500 கோபுரங்கள் நிறுவப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் ஐந்தாயிரத்து 829 கோபுரங்களும், மகாராஷ்டிராவில் நான்காயிரத்து … Read more

உலகக் கோப்பை தோல்வி எதிரொலி: பிரான்சில் வெடித்த கலவரம்!

நடப்பாண்டு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நேற்று கத்தாரில் நடைபெற்றது. அர்ஜெண்ட்டினா – பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே இறுதி போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் கூடுதல் நேரங்கள் கொடுக்கப்பட்டும் இறுதியாக 3-3 என்ற கோல் கணக்கில் ட்ரா ஆனது. இதையடுத்து, பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கணக்கில் அர்ஜெண்டினா வெற்றி பெற்றது. அர்ஜெண்டினா அணியில் கேப்டன் மெஸ்ஸி இரண்டு கோல்களும், டி-மரியா ஒரு கோலும் போட்டனர். பிரான்ஸ் அணியில் … Read more

முடிவுக்கு வந்தது ஹாலிவுட் பிரபலங்கள் ஜானிடெப்-ஆம்பர்ஹெர்ட் வழக்கு.. ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தின் ஹீரோவான ஹாலிவுட் நடிகர் ஜானிடெப் உடனான அனைத்து வழக்குகளையும், 1 மில்லியன் அமெரிக்க டாலரை நஷ்ட ஈடாக வழங்கி முடித்துக்கொள்வதாக, நடிகையும், அவரது முன்னாள் மனைவியுமான ஆம்பர்ஹெர்ட் அறிவித்துள்ளார். ஹாலிவுட் பிரபலங்கள் இருவரும் 2015ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்ட நிலையில், 2016ம் ஆண்டிலேயே ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டியதோடு, பரஸ்பரம் மான நஷ்ட வழக்கும் தொடுத்தனர். தனித்தனியாக நடைபெற்ற வழக்கில், இருவருமே ஒருவருக்கொருவர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், … Read more

சீனாவில் அதிகரிக்கும் உயிரிழப்பு: மீண்டும் பொது முடக்கம் அமலாகுமா?

சீனாவில் 2019 இறுதியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய போது உலகத்தின் அத்தனை மூலைகளிலும் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்று யாரும் நினைக்கவில்லை. 2020, 2021 ஆகிய இரு ஆண்டுகள் முழுவதும் கொரோனா உலகையே தலைகீழாக புரட்டிப் போட்டது. 2022ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் மூன்றாவது அலையின் பாதிப்பு இருந்தது. உடல் நலம் பாதிக்கப்படுதல், உயிரிழப்புகள், ஒரு பக்கம் என்றால் பொருளாதார பாதிப்பு மிக அதிகளவில் இருந்தது. கொரோனாவாலும் அதன் காரணமாக போடப்பட்ட பொது முடக்கத்தாலும் … Read more

ஃபிஃபா உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய அர்ஜெண்டினா வீரர்களுக்கு கோலாகல வரவேற்பு

பியூனஸ் அயர்ஸ்: 2022 ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய அர்ஜெண்டினா அணிக்கு வழி நெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஃபிஃபா 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 36 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் அர்ஜென்டினா வாகை சூடியுள்ளது. அந்த அணி உலகக் கோப்பையை வெல்வது இது … Read more

பதவி விலகுகிறாரா எலான் மஸ்க்: ட்விட்டரில் தனக்கு தானே வாக்கெடுப்பு!

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கி தன் வசப்படுத்தியுள்ளார். ட்விட்டர் தன் வசமானதும் அதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரப்போவதாகவும் எலான் மஸ்க் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அந்த வகையில், பல்வேறு மாற்றங்கள் ட்விட்டர் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ட்விட்டர் ஊழியர்கள் பாதிக்கும் மேல் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். அதிகாரப்பூர்வ கணக்கான ப்ளூ டிக்கை பயன்படுத்த மாதம் 8 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படும் … Read more

கொரோனா நோயாளிகளும் பணி செய்யலாம்; சீனாவில் விநோதம்.!

கொரோனா தொற்றின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவில், கடந்த ஏப்ரல் மாதம் முதலே, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. சீனாவில் இது நாள் வரை ஜீரோ கோவிட் பாலிசி கடைபிடிக்கப்பட்டு வந்தது. அதனால் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அந்தவகையில் கொரோனா பரவல் காரணமாக சீனாவின் மேற்கு பகுதியான ஷின்ஜியாங் பிராந்தியத்தில் சுமார் 130 நாட்களாக ஊரடங்கு அமலில் … Read more