சுதந்திர காற்றை சுவாசிக்க விரும்பும் சீனர்கள்: பரவுது போராட்டம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஷாங்காய்: கோவிட் கட்டுப்பாடுகளை நீக்கிட வேண்டும் என்றும் ஜனநாயகம் , சுதந்திரம் வேண்டும் என்றும் சீன மக்கள் முக்கிய நகரங்களில் போராட்டத்தில் 3 வது நாளாக தொடர்ந்து வருகின்றனர். அதிபர் மற்றும் கம்யூ., தலைவர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். பல இடங்களில் போலீசார் போராட்டக்காரர்களை அகற்றினர். சீனாவில் நாள்தோறும் கோவிட் பாதிப்பு தொற்று 40 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இதனால் சில பகுதிகளில் கோவிட் ஊரடங்கை அமல் செய்து … Read more

அல்-ஷபாப் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட மொகடிஷு ஹோட்டல் சுற்றிவளைப்பு: 4 பேர் பலி

நியூடெல்லி: சோமாலியாவின் தலைநகர் மொகடிஷுவில் உள்ள ஒரு முக்கிய ஹோட்டலை ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்கியதில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 27, 2022) மாலை சோமாலியாவின் தலைநகர் மொகடிஷுவில் உள்ள ஒரு முக்கிய ஹோட்டலை அல்-ஷபாப் தீவிரவாதிகள் தாக்கியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய மொகடிஷுவில் அமைந்துள்ள அதிபர் மாளிகையிலிருந்து சிறிது தூரத்தில் இந்த ஹோட்டல் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதல் செய்தியை, பாதுகாப்பு ஏஜென்சி அதிகாரியை மேற்கோள்காட்டி AFP செய்தி … Read more

ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்ணுக்கு வங்கிச் சேவை: மேலாளர் நீக்கம்

தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் அணியாத பெண் ஒருவருக்கு வங்கி சேவை வழங்கிய வங்கி மேலாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தலைநகர் தெஹ்ரான் அருகே உள்ள குவோம் மாகாணத்தில் உள்ள வங்கி ஒன்றின் மேலாளர் ,ஹிஜாப் அணியாமல் வந்த பெண்ணுக்கு வங்கிச் சேவை வழங்கி இருக்கிறார். இதனால் அவ்வங்கியின் மேலாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை அம்மாகாணத்தின் ஆளுநர் வழங்கியுள்ளார். இந்த நிகழ்வு ஈரான் சமூக வலைதளங்களில் கடும் எதிர்வினையை உருவாக்கியுள்ளது. ஈரானை பொறுத்தவரை அங்கு பெரும்பாலான … Read more

நேபாள பார்லி., தேர்தல் ஆளுங்கட்சி அபாரம்| Dinamalar

காத்மாண்டு : நம் அண்டை நாடான நேபாளத்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் ஆளுங்கட்சியான நேபாள காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. நேபாளத்தில் 275 எம்.பி.,க்களைக் கொண்ட பார்லிமென்ட் மற்றும் 550 உறுப்பினர்களைக் கொண்ட மாகாண சட்டசபை தேர்தல் கடந்த வாரம் நடந்தது. இதில் பார்லி.,க்கு165 எம்.பி.,க்கள் நேரடி தேர்தல் வாயிலாகவும், 110 பேர் விகிதாசார அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுன்றனர். தேர்தலில் பதிவான ஓட்டுகள் ஒரு வாரமாக எண்ணப்பட்டு, அவ்வப்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு … Read more

கனடாவில் விபத்து: இந்திய மாணவர் பலி| Dinamalar

டொரான்டோ : கனடாவில் இந்திய மாணவர் ஒருவர், டிரக் மோதி பலியானார். வட அமெரிக்க நாடான கனடாவின் டொரன்டோ நகரில் உள்ள கல்லுாரியில், நம் நாட்டின் ஹரியானாவைச் சேர்ந்த கார்த்திக் சைனி, 20, என்ற மாணவர் படித்து வந்தார். சமீபத்தில் கல்லுாரிக்கு சைக்கிளில் சென்ற அவர், சாலையைக் கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த டிரக் அவர் மீது மோதியது. சிறிது துாரம் இழுத்துச் செல்லப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். கார்த்திக்கின் உடலை இந்தியாவுக்கு கொண்டு … Read more

சீன கரோனா கலவரம் | செய்தியாளர் மீது தாக்குதல்; மன்னிப்பு கோரும் செய்தி நிறுவனம்

ஷாங்காய்: சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கரோனா தொற்று காரணமாக அங்கு கடுமையான ஊரடங்கு உத்தரவுகள் அமலாக்கப்பட்டு வருகிறது. கட்டுப்பாடுகளை எதிர்த்து ஷாங்காய் நகரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் பற்றி களத்தில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிபிசி செய்தியாளர் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்காக சீன அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த செய்தி நிறுவனம் கோரியுள்ளது. இது தொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில் செய்தியாளரை சில காவலர்கள் சுற்றி … Read more

ஊரடங்குக்கு எதிராக சீனாவில் போராட்டம் அதிபர் ஜிங்பிங் பதவி விலக வலியுறுத்தல்| Dinamalar

பீஜிங் : நம் அண்டை நாடான சீனாவில் கொரோனா தொற்று பரவல் ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில், அரசின் கடுமையான தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு விதிகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. அதிபர் ஜிங்பிங் பதவி விலக வலியுறுத்தி, மக்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். சீனாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 40 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியானது. நாடு முழுதும் கடும் ஊரடங்கு … Read more

ஃபிஃபா கால்பந்து: மொராக்கோ வெற்றியால் ஆத்திரம்; பெல்ஜியத்தில் கலவரம்

ப்ரூசல்ஸ்: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மொரோக்கோ அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது பெல்ஜியம் அணி. இதனையடுத்து பெல்ஜிய தலைநகர் ப்ரூசல்ஸில் நடந்த கலவரத்தில் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் பெல்ஜியத்தை வென்று அதிர்ச்சி கொடுத்துள்ளது மொராக்கோ அணி. குரூப் சுற்றுப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல் பெல்ஜியம் தலைநகர் ப்ருசல்ஸில் சிலர் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது கார், … Read more

விஞ்ஞானிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற வட கொரிய அதிபர் கிம் மகள்| Dinamalar

சியோல் : வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், மீண்டும் தன் மகளுடன் பொது இடத்தில் தோன்றியது உலக அளவில் பெரும் ஆச்சர்யத்தையும், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. கிழக்காசிய நாடான வட கொரியாவைப் பற்றி வெளி உலகிற்கு எந்தத் தகவலுமே கசியாது. இங்கு சர்வாதிகார ஆட்சி நடத்தும் கிம் ஜோங் உன், தன் நாட்டை ஒரு மர்மப் பிரதேசமாக வைத்துள்ளார். நாட்டை மட்டுமின்றி தன் குடும்பத்தைப் பற்றியும் கூட எந்தத் தகவலையும் வெளியிட்டது இல்லை. ஆனாலும், அவருக்கு … Read more

7 மாதம் வீட்டை விட்டு வெளியேறிய நபர்! திரும்பி எப்படி வந்தார் என்று பாருங்கள்!

பலரும் உடல் பருமன் குறித்து மிகவும் கவலையடைந்திருப்பீர்கள். உடல் பருமனை குறைக்க உணவு கட்டுப்பாட்டு, உடற்பயிற்சி என பலவற்றையும் நீங்கள் முயற்சித்திருப்பீர்கள். ஆனால், அவை எதுவும் உங்களுக்கு கைக்கொடுத்திருக்காது. எனவே, நீங்கள் மீண்டும் சோர்வடைந்து, உடல்நலத்தை பேண தவறிவிடுவீர்கள்.  அதேபோன்றுதான் அயர்லாந்தை சேர்ந்த ஒருவருக்கும் உடல் பருமனை குறைப்பதில் மோசமான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால், கடும் பின்னடைவுகளுக்கு பின்னரும் துவண்டு விடாமல் அவர் எடுத்த மாற்று முயற்சி அவரின் உடல் எடையை குறைப்பதில் எவ்வாறு பலனளித்தது என்று … Read more