சீனாவில் ஒரே நாளில் 31000 பேருக்கு கரோனா: கெடுபிடிகளால் மக்கள் அதிருப்தி

பீஜிங்: சீனாவில் ஒரே நாளில் 31 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில் கரோனா பாதித்த பகுதிகளில் சீன அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அதனை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் இறங்கினர். சீனாவில் நேற்று ஒரே நாளில் 31 ஆயிரத்து 454 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது இதில் 25,517 பேருக்கு அறிகுறி இல்லாமல் தொற்று உறுதியானது. கடந்த 2019 டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. உலகம் முழுவதும் கரோனா … Read more

சீனாவில் ஐபோன் தயாரிப்பு ஆலையில் வன்முறை: பின்புலம் என்ன?

சீனாவில் ஐபோன்களை தயாரிக்கும் உலகின் மிகப்பெரிய பாக்ஸ்கான் ஆலையில் நேற்று திடீரென வன்முறை மூண்டது. ஐபோன் ஆலை பணியாளர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து பாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: ஊதியம் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது தொடர்பாக செங்சோவ் ஆலை பணியாளர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுபோன்ற சூழ்நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க பணியாளர்களுடனும், அரசுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் … Read more

ஒரே போன்.. ஒட்டுமொத்த வீடும் க்ளோஸ்.. நள்ளிரவில் பற்றி எரிந்த வீடு! ஆவேசமாக சிரித்த காதலி!

அமெரிக்காவில் காதலனின் வீட்டிற்கு தீ வைத்த காதலியை போலீசார் கைது செய்த நிலையில், அதற்கு அவர் கூறிய காரணம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

அமெரிக்காவின் விர்ஜினியாவில் வால்மார்ட் அங்காடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழப்பு

செசபீக்: அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ளது செசபீக் நகரம். இங்குள்ள சாம்ஸ் சர்க்கிள் என்ற பகுதியில் அமெரிக்காவின் மிகப்பெரிய சில்லரை வர்த்தக நிறுவனம் வால்மார்ட் அங்காடி உள்ளது. இங்கு கடந்த செவ்வாய்க் கிழமை இரவு 10 மணிக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்திருந்தனர். வரும் சனிக்கிழமை அமெரிக்காவில் ‘தேங்க்ஸ்கிவிங்’ என்றழைக்கப் படும் நன்றியளித்தல் விடுமுறை கொண்டாடப்படுகிறது. அதற்கான பொருட்களை வாங்குவதற்கு அங்காடிக்கு வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். அப்போது திடீரென ஒருவர், வாடிக்கையாளர்கள் மீது சர மாரியாக துப்பாக்கிச் சூடு … Read more

பாக்., ராணுவ தளபதி மாறுகிறார் போட்டியில் 6 மூத்த அதிகாரிகள்| Dinamalar

இஸ்லாமாபாத்,பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதி ஜெனரல் குமர் ஜாவத் பஜ்வா, ௬௧, ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிய தளபதி பதவிக்கு, ஆறு மூத்த அதிகாரிகளின் பெயர் பரிசீலனையில் உள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்திருந்தாலும், ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே அரசு இருந்து வருகிறது. இந்நிலையில், பாக்., ராணுவத்தின் தளபதியாக உள்ள ஜெனரல் பஜ்வாவின் பதவிக் காலம், வரும் ௨௯ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதையடுத்து, ராணுவ தளபதி மற்றும் கூட்டுப் படைகளின் தலைவர் பதவிக்கு … Read more

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு அமெரிக்காவில் 6 பேர் பலி| Dinamalar

வாஷிங்டன் அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்திலிருக்கும் செசாபீக் நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஆறு பேர் கொல்லப்பட்டனர்; தாக்குதல் நடத்தியவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்தார். அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்துள்ளது குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்தாண்டில் மட்டும் இதுவரை, ௬௦௦க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் கொலராடோ வில், ஓரினச் சேர்க்கையாளர் கிளப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஐந்து பேர் கொல்லப்பட்டனர்; … Read more

 ஸ்காட்லாந்து தனி நாடு கோரிய வழக்கு: பிரிட்டன் உச்சநீதிமன்றம் தள்ளுபடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: ஸ்காட்லாந்தை பிரிப்பது தொடர்பாக, கருத்து வாக்கெடுப்பு நடத்த கோரி தொடரப் பட்ட வழக்கை லண்டன் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில், வேல்ஸ், ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய பகுதிகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் வடக்கு பகுதியில் உள்ள ஸ்காட்லாந்து 1653ல், இங்கிலாந்துடன் இணைந்து. 1707ல், இப்போதைய, ‘கிரேட் பிரிட்டன்’ எனப்படும் பிரிட்டன் நாடு உருவானது. இதற்கிடையே, ‘பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்தை பிரிக்க வேண்டும்’ என, பல நுாறு … Read more

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ரஷ்யா: ஐரோப்பிய பாராளுமன்றம் தீர்மானம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: உக்ரைன் மீது போர் நடத்தி வரும் ரஷ்யா, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என ஐரோப்பிய பாராளுமன்றம் பிரகடனப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர் போர் தொடுத்துள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போரில் உக்ரைனின் சில மாகாணங்களை ரஷ்யா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. போரை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து … Read more

6 ஊழியர்களை சுட்டுக்கொன்று சூப்பர் மார்க்கெட் மேலாளர் தற்கொலை

வாஷிங்டன், அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணம் செசப்ஹு நகரில் வால்மார்ட் நிறுவனத்தின் சூப்பர் மார்க்கெட் உள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் நேற்று இரவு (இந்திய நேரப்படி இன்று காலை) ஊழியர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த சூப்பர் மார்க்கெட் மேலாளர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். மேலாளர் துப்பாக்கிச்சூடு நடத்தியதை கண்டு அதிர்ச்சியடைந்த சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள தலை தெறிக்க ஓடினர். … Read more

சிரியா: வெடிகுண்டு விபத்தில் ஈரான் ராணுவ அதிகாரி பலி

தெஹ்ரான், சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2011-முதல் நடைபெற்று வரும் இந்த போரால் பெண்கள், குழந்தைகள் உள்பட அந்நாட்டின் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும், போர் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது. இதில் சிரியா அதிபர் பஷர் அல்-ஆசாத்திற்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. மேலும், சிரிய ராணுவத்திற்கு ஆதரவாக தனது படைகளையும் அனுப்பி வைத்துள்ளது. இந்த நிலையில், சிரியாவில் வெடிகுண்டு விபத்தில் ஈரான் ராணுவ அதிகாரி ஒருவர் … Read more