டெயில் விளக்குகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் அமெரிக்காவில் 3.21 லட்சம் கார்களை திரும்பப் பெறுகிறது டெஸ்லா..!

டெயில் விளக்குகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் அமெரிக்காவில் 3 லட்சத்து 21 ஆயிரம் மின்சாரக் கார்களை திரும்பப்பெறுகிறது. 2020 முதல் 2023 வரையிலான மாடல் 3 மற்றும் ஒய் மாடல் வாகனங்களில் டெயில் விளக்குகள் ஒளிரவில்லை என வாடிக்கையாளர்கள் அளித்த புகாரை அடுத்து டெஸ்லா நிறுவனம் நடத்திய ஆய்வில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தொழில்நுட்பக்கோளாறு காரணாக கடந்த செப்டம்பரில் 11 லட்சம் கார்களை டெஸ்லா திரும்பப்பெற்றது. Source link

அபுதாபி சால்ட் பே ரெஸ்டாரன்டில் தங்க முலாம் பூசிய இறைச்சி விலை ரூ.1.3 கோடி

அபுதாபி: துருக்கியைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞர் நுஸ்ரத் கோக்சி. இவர் சால்ட் பே என்று பரவலாக அழைக்கப்படுகிறார். உலகின் முக்கிய நகரங்களில் இவருடைய ரெஸ்டாரன்ட்கள் நுஸ்ரத் என்ற பெயரில் இயங்கி வருகின்றன. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் தயாரித்த 24 கேரட் தங்க முலாம் பூசிய இஸ்தான்புல் இறைச்சி புகைப்படத்தையும், வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இதன் விலை ரூ.1.3 கோடி. அதில் 14 பேர் கொண்ட குழுவினர் இந்த சால்ட் பே 24 கேரட் தங்க … Read more

ரூ.12,700 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்த பாக். ராணுவத் தளபதி குடும்பம் – வெளியான அறிக்கை

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளில் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் பன்மடங்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான டேமேஜிங் அறிக்கையில், 6 ஆண்டுகளில் பஜ்வாவின் மனைவி ஆயிஷா அம்ஜத், மருமகள் சபீர் மற்றும் பிற நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் கோடீஸ்வரர்களாகி, சர்வதேச வணிகத்தைத் தொடங்கி இஸ்லாமாபாத் மற்றும் கராச்சியில் பண்ணை வீடுகள், ரியல் எஸ்டேட், வெளிநாட்டு சொத்துக்களை வாங்கி அதிக பணம் … Read more

சாலமன் தீவுகளில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது

சாலமன் தீவுகளில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதை அடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருப்பதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் உடனடியாக உயரமான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை சாலமன் தீவுகளின் தென்மேற்கில் உள்ள மலாங்கோவில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பசிபிக் எச்சரிக்கை மையத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. … Read more

இந்தோனேசியா நிலநடுக்கம்: பலி 162 ஆக அதிகரிப்பு; நிவாரண முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் தஞ்சம்

ஜகார்டா: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் பலியானோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை ஜாவா தீவுகள் ஆளுநர் ரித்வான் காமில் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் நேற்று (நவ.22) காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு ஜாவாவில் உள்ள சியாஞ்சூரில் 10 கி.மீ. (6.21 மைல்) ஆழத்தில் இதன் மையப்பகுதி காணப்பட்டது. 5.6 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால், பல இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்தன. நிலச்சரிவுகளும் … Read more

மந்த நிலையால் பாதிக்கப்பட்ட பிரிட்டனுக்கு அதிக புலம்பெயர்ந்தவர்கள் தேவை – வணிக அமைப்பு அறிவிப்பு

பொருளாதார மந்த நிலையால் பாதிக்கப்பட்ட பிரிட்டனுக்கு அதிக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தேவை என அந்நாட்டு வணிக அமைப்பு தெரிவித்துள்ளது. பர்மிங்காமில் நடைபெற்ற பிரிட்டன் தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் பேசிய அதன் இயக்குனர் டோனி டேங்கர், பிரிட்டன் தேக்கநிலையின் மையத்தில் உள்ளதாக தெரிவித்தனர். பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதும், மந்த நிலையை எதிர்த்துப் போராடுவதும் தங்களுக்குத் தெரியும் என்று தெரிவித்த அவர், இரண்டையும் ஒன்றாக எதிர்த்துப் போராடுவது தங்களுக்குத் தெரியாது என தெரிவித்தார். தற்போது பிரிட்டனில் 41 ஆண்டுகளில் இல்லாத … Read more

சீனாவின் அன்யாங் நகர் தொழிற்சாலை தீ விபத்தில் 36 பேர் பலி

அன்யாங்: சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள அன்யாங் நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சீனா தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில், உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள அன்யாங் நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. … Read more

ரஷ்யா நடத்திய தாக்குதலால் குளிர்காலத்திற்கு முன்னதாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை வேறு பகுதிகளுக்கு மாற்ற திட்டம்

உக்ரைனின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா நடத்திய தாக்குதலால் குளிர்காலத்திற்கு முன்னதாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்ற அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. கெர்சன் மற்றும் மைகோலைவ் நகரில் இருந்து இது தொடங்கலாம் என்றும், அவர்கள் உக்ரைனின் மத்திய மற்றும் மேற்கு பகுதிக்கு மாற்றப்படுவார்கள் என்றும்  துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் தெரிவித்தார். இந்த குளிர்காலம் உக்ரைனில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என ஐரோப்பாவிற்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளூஜ் … Read more

கடந்த 6 ஆண்டுகளில் கோடிக்கணக்கில் சொத்துகளை குவித்த பாக். ராணுவ தளபதி குடும்பம்

இஸ்லாமாபாத்: கடந்த 6 ஆண்டு காலத்தில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி கமர் ஜாவித் பாஜ்வாவின் குடும்பத்தார் கோடிக்கணக்கில் சொத்துகளைக் குவித்திருப்பது தெரிய வந்துள்ளது. ஃபேக்ட் போக்கஸ் என்ற இதழில் பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் அகமது நூரானி இதுதொடர்பாக ஆய்வு செய்து தகவல்கள், ஆதாரங்களுடன் கட்டுரையாக வெளியிட்டுள்ளார். ராணுவ தளபதி கமர் ஜாவித் பாஜ்வாவும், அவரது குடும்பத் தாரும் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் வாங்கிய பண்ணை வீடுகள், வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள், கோடிக்கணக்கான சொத்து விவரங்கள் போன்றவற்றை ஃபேக்ட் … Read more

ஃப்ளோரிடா மாகாணத்தில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்து.. 5 பேர் பலி!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஃப்ளோரிடாவின் லிட்டில் டார்ச் கீ கடற்கரையிலிருந்து 50 மைல் தொலைவில் அகதிகளுடன் சென்று கொண்டிருந்த படகு, பலத்த காற்றினால் திடீரென கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். தகவலறிந்து வந்த அமெரிக்க கடலோர காவல் படையினர், நீரில் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 9 பேரை பத்திரமாக மீட்டனர். கடலில் மூழ்கி மாயமான … Read more