Indonesia Earthquake : இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 46 பேர் பலி
இந்தோனேஷியா நாட்டின் முக்கிய தீவான ஜாவாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 46 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 5.4 ரிக்டர் அளவு கோளில் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாகவும் வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. தற்போது, 46 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும் உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தலைநகர் ஜகார்தாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டாலும், சேதமா உயிரிழப்போ ஏதும் ஏற்படவில்லை என தெரிகிறது. … Read more