மரண தண்டனையை ஒழித்தது மலேசியா; மாற்று தண்டனைக்கு ஆலோசனை

கோலா லம்பூர்: மரண தண்டனைகள் ரத்து செய்யப்படுவதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது. இனி மரண தண்டனைகளுக்கு பதிலாக மாற்று தண்டனைகள் வழங்கப்படும் என்றும் மலேசிய அரசின் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மலேசிய சட்டத் துறை அமைச்சர் வான் ஜுனைதி ஜாஃபர் கூறும்போது, ”தூக்குத் தண்டனைக்கு எதிரான மசோதாவை அமைச்சரவை ஒப்புக்கொண்டது. மரண தண்டனைக்கு பதிலாக என்னென்ன தண்டனைகளை வழங்கலாம் என்பது குறித்து மேலும் ஆய்வு நடத்தப்படும். மரண தண்டனை விவகாரத்தில் எடுக்கப்பட்ட முடிவு, அனைத்துத் தரப்பினரின் … Read more

அமெரிக்காவில் மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை| Dinamalar

ஸ்மித்ஸ்பர்க்: அமெரிக்காவில், மூவரை சுட்டுக் கொன்று தப்ப முயன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் மேரிலாண்டு மாகாணத்திலிருக்கும் ஸ்மத்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு தொழில் நிறுவனத்தில் புகுந்த ஒருவர், அங்கிருந்தோரை சரமாரியாக சுட்டுள்ளார். அதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.இதையடுத்து வெளியே வந்த கொலையாளி ஒரு வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது அவ்வழியே வந்த போலீஸ்காரர், தப்பிச் செல்ல முயன்றவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். கொலையாளியும் திருப்பி சுட்டுள்ளனர். இதில், இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்து … Read more

அமெரிக்கா வரும் சர்வதேசப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை என அறிவிப்பு

அமெரிக்கா வரும் சர்வதேச பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை என அந்நாடு அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தும் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. சர்வதேச பயணிகளுக்கான கொரோனா பரிசோதனை கட்டுப்பாடு வாரயிறுதியுடன் நிறைவுக்கு வருவதாக வெள்ளை மாளிகை துணை செய்தி தொடர்பாளர் கெவின் முனோஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதேநேரம் பயணத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் அல்லது 90 நாட்களில் கொரோனாவில் இருந்து குணமடைந்ததற்கான சான்றிதழை பயணத்திற்கு முன் காண்பிக்க வேண்டி வரும் என தெரிவித்துள்ளார். … Read more

அமெரிக்காவில் மூவர் சுட்டுக் கொலை| Dinamalar

ஸ்மித்ஸ்பர்க்: அமெரிக்காவில், மூவரை சுட்டுக் கொன்று தப்ப முயன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் மேரிலாண்டு மாகாணத்திலிருக்கும் ஸ்மத்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு தொழில் நிறுவனத்தில் புகுந்த ஒருவர், அங்கிருந்தோரை சரமாரியாக சுட்டுள்ளார். அதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.இதையடுத்து வெளியே வந்த கொலையாளி ஒரு வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது அவ்வழியே வந்த போலீஸ்காரர், தப்பிச் செல்ல முயன்றவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். கொலையாளியும் திருப்பி சுட்டுள்ளார். இதில், இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்து … Read more

பாக் அரசு பட்ஜெட் மக்கள் விரோதமானது, தொழில் விரோதமானது.. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடும் விமர்சனம்..!

பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட் மக்கள் விரோதமானது தொழில் விரோதமானது என்று நிராகரித்தார் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். பட்ஜெட்டில் பணவீக்கம் 11 புள்ளி 5 சதவீதம் என்றும் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் என்றும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான டிவிட்டர் பதிவில் யதார்த்தத்திற்குப் புறம்பான கணிப்புகள் வெளியிடப்பட்டிருப்பதாக இம்ரான் கான் விமர்சனம் செய்தார். பணவீக்கம் 25 முதல் 30 சதவீதம் இருக்கும் என்ற SPI கணிப்பை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். Source link

சீனா – ரஷ்யா இடையிலான முதல் சாலைப் பாலம் திறப்பு

 ரஷ்யா-சீனாவுக்கு இடையிலான முதல் சாலைப் பாலம் திறக்கப்பட்டுள்ளது. அமுர் ஆற்றின் குறுக்கே, 19 பில்லியன் ரூபிள் செலவில் கட்டப்பட்ட இந்த பாலம் சுமார் 1கி.மீ. நீளத்தில் கிழக்கு ரஷ்ய நகரமான பிளாகோவெஷ்சென்ஸ்க்கை  வடக்கு சீனாவின் ஹெய்ஹேவுடன் இணைக்கிறது. இரு நாடுகளின் வண்ண கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த பாலத்தில் வாணவேடிக்கை காட்சிக்கு நடுவில், இரு முனைகளிலில் இருந்தும் சரக்கு வாகனங்கள் பாலத்தை கடந்து சென்றன. Source link

ஒரே விரலால் 129 கி. எடையை தூக்கி கின்னஸ் சாதனை

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 48 வயதான ஸ்டீவ் கீலர் என்ற நபர், ஒற்றை விரலால் 129 கிலோ எடையை தூக்கி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் அவர் 10 ஆண்டுகால உலக சாதனையை முறியடித்துள்ளார். Source link

War For Taiwan: தைவானுக்காக போரும் நடக்கலாம்: அமெரிக்காவுக்கு சீனாவின் சூசக எச்சரிக்கை

தைவானுக்காகப் போரைத் தொடங்க தயக்கம் இல்லை என்றும் தாய்நாட்டின் ஒருங்கிணைப்பை நிலைநிறுத்துவது கட்டாயம் என்று சீன பாதுகாப்பு அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது. “தைவான் சுதந்திரம்” என்ற சதித்திட்டத்தை முறியடித்து, தாய்நாட்டின் ஒருங்கிணைப்பை உறுதியுடன் நிலைநிறுத்துவதே சீனாவின் முடிவு என்று சீன அமைச்சர் உறுதிபட தெரிவித்தார். தைவான் சுதந்திரத்தை அறிவிக்கும் பட்சத்தில், பெய்ஜிங் “போரைத் தொடங்கத் தயங்காது” என்று சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கே வெள்ளிக்கிழமையன்று அமெரிக்காவை எச்சரித்தார். அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டினுடன் தனது … Read more

ரூ.1.5 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கிய சான் ஜோஸ் கப்பல் அருகே மேலும் 2 கப்பல்கள் கண்டுபிடிப்பு

போகோட்டோ: 300 ஆண்டுகளுக்கு முன்பு சான் ஜோஸ் என்ற கப்பல் கொலம்பிய தலைநகர் போகோட்டோ அருகே 600 பேருடன் கடலில் மூழ்கியது. அண்மையில்தான் இந்தக் கப்பல் மூழ்கிய இடம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்தக் கப்பல் யாருக்குச் சொந்தம் என்பதில் பலர் சண்டையிட்டு வருகின்றனர். அந்தக் கப்பலில் உள்ள ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான தங்கத்துக்காக சண்டை நடக்கிறது. சரியாக 1708-ம் ஆண்டு ஜூன் மாதம் 8 தேதி கொலம்பியா நாட்டுக்கு அருகே கரீபியன் கடல் பகுதியில் … Read more

பேருந்தும்-லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 15 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!

தென் ஆப்பிரிக்காவில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். ஷ்வானின் வடக்கே உள்ள பாட்ரிஷோக் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் முன்பகுதியும்-பேருந்தின் முன்பகுதியும் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், 15 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும், விபத்தில் சிக்கிய 37 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். Source link