மெக்சிகோவில் துப்பாக்கி சூடு: 12 பேர் பலி| Dinamalar

மெக்சிகோசிட்டி: வட அமெரிக்கா மெக்சிகோ நாட்டின் குவானாஜுவாட்டோ மாகாணத்தில் உள்ள பார் ஒன்றிற்கு வந்த மர்ம நபர்கள் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் 6 பேர் ஆண்கள் மற்றும் 6 பேர் பெண்கள் ஆவர். 3 பேர் காயமடைந்து உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். மெக்சிகோசிட்டி: வட அமெரிக்கா மெக்சிகோ நாட்டின் … Read more

வீரர்களுக்கு 'வயக்ரா'… பாலியல் வன்முறையை தூண்டிய ரஷ்யா – அதிர்ச்சி ரிபோர்ட்

ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில், ரஷ்யா, உக்ரைன் என இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான மக்களும், போர் வீரர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  வீடுகளை இழந்து அண்டை நாடுகளுக்கு உக்ரைனிய மக்கள் பலரும் அகதிகளாக குடிபெயர்ந்து வருகின்றனர். மேலும், ரஷ்யா இதில் போர் நெறிமுறைகளை மீறி செயல்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்தன. பெண்களின் கை, கால்கள் கட்டப்பட்டு அவர்கள் வீதிகளில் சடலங்களாக கிடக்கும் புகைப்படங்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.  … Read more

அமெரிக்க பொருளாதாரம் வலுவாக உள்ளது: ஜோ பைடன்

நியூயார்க்: அமெரிக்காவின் பொருளாதாரம் வலுவாக உள்ளது. பணவீக்கப் பிரச்சினை உலகம் முழுவதும் உள்ளது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கரோனாவுக்குப் பிறகு உலக நாடுகளில் பணவீக்கம் அதிகரித்து உள்ளது. நாளும் விலைவாசி அதிகரித்து வருகிறது. அமெரிக்காவிலும் விலைவாசியினால் நாளும் விமர்சனங்களை பைடன் அரசு சந்தித்து வருகின்றது . விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அரசு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளில் … Read more

சீன அதிபர் பேச்சுக்கு தைவான் எதிர்ப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: தைவான் மீது தேவைப்பட்டால் பலத்தை பயன்படுத்துவோம் என சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறியுள்ளார். இதற்கு தைவான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் பேசியதாவது: ஹாங்காங்கில் நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. வெறும் குழப்பத்தில் இருந்த ஹாங்காங் பெரிய மாறுதலை சந்தித்துள்ளது. இப்போது அது சீன அரசின் ஒரு பகுதியாக உள்ளது. அதேபோல், தைவான் பிரச்னையில் பிரிவினைவாதிகளை … Read more

'பின் வாங்க மாட்டோம்…' – சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆவேச பேச்சுக்கு தைவான் பதிலடி; பரபரப்பாகும் போர்க்களம்

சீனாவில் பல ஆண்டுகளாக ஒற்றை கட்சியின் ஆட்சி முறையே நடந்துவருகிறது. கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், அதிபர் பதவியை ஏற்று ஆட்சி நடத்தி வருவது வழக்கம். அந்த முறையில், ஒருவர் சீன அதிபராக 10 ஆண்டுகாலம் மட்டுமே பதவிவகிக்க முடியும் என்ற விதியிருந்தது. சர்வாதிகாரத்தை தவிர்க்க இருந்த இந்த விதியினை தற்போதைய அதிபர் ஜி ஜின்பிங் 2018ஆம் ஆண்டே நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது.  2012ஆம் ஆண்டு அதிபராக பதவியேற்ற ஜி ஜின்பிங்கின் ஆட்சிக்காலம் இந்தாண்டோடு நிறைவடைய இருக்கிறது. இந்த … Read more

ரூபாய் மதிப்பு குறையவில்லை; டாலர் மதிப்பு தான் உயர்ந்திருக்கிறது: நிர்மலா சீதாராமன்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், இது தொடர்பாக மத்திய நிர்மலா சீதாராமன் கூறுகையில், இந்திய ரூபாயின் மதிப்பு வீழவில்லை. அமெரிக்க டாலரின் மதிப்பு வலுப்பெறுகிறது எனக்கூறியுள்ளார்.அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ரூ.82.69 என்றளவிற்கு குறைந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா சென்றுள்ள நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி: இந்திய ரூபாயின் மதிப்பு குறையவில்லை. அமெரிக்க டாலரின் மதிப்பு வலுப்பெற்றுள்ளது என்றே நான் கூறுவேன். ரிசர்வ் … Read more

ரஷ்ய ராணுவ தளத்தில் பயங்கரவாத தாக்குதல்: 11 பேர் உயிரிழப்பு!

ரஷ்ய ராணுவ தளத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 15 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். உக்ரைன் எல்லையை ஒட்டிய தென் மேற்கு ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் உள்ள ரஷ்ய ராணுவ தளத்தில் சோவியத் ரஷ்ய ஆதரவாளர்கள் 2 பேர் பயிற்சியின் போது மற்ற வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதில் 11 பேர் கொல்லப்பட்டதாகவும், 15 பேர் காயம் அடைந்ததாகவும் ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. காயம் அடைந்தவர்கள், … Read more

20 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம்!

சென்னை: நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி மற்றும் வேலூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று(அக்.,16) கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.இது, குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா – வட தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, வேலூர், … Read more

ஆசிய சாம்பியனை உலக கோப்பை தகுதிச்சுற்றில் வீழ்த்திய நமீபியா| Dinamalar

தெற்கு ஜீலோங்: ஆஸ்திரேலியாவில் டுவென்டி – 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. குரூப் ஏ பிரிவில் தகுதி சுற்றில், ஆசிய சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணியும், நமீபியா அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 19 ஓவரில் 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த போட்டியில், பேட்டிங், பவுலிங் மற்றும் … Read more

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு | தைவான் முதல் பொருளாதாரம் வரை ஜி ஜின்பிங் உரையின் முக்கிய அம்சங்கள்

பீஜிங்: சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு தொடங்கியது. ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு பீஜிங் கிரேட் ஹாலில் நடந்தது. 2300 உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் பலத்த கரகோஷங்களுக்கு இடையே ஜி ஜின்பிங் வருகை தந்தார். இந்த மாநாட்டில் கட்சியின் புதிய பொதுச் செயலரை தேர்ந்தெடுப்பது வழக்கம். சீனாவில் ‘ஒரு கட்சி ஆட்சி’ நடைபெறுகிறது. அந்தவகையில், சீனாவில் அதிபர் பொறுப்பை விடவும் கட்சியின் பொதுச் செயலர் பொறுப்பு … Read more