உலகின் மிக ஆபத்தான நாடு பாக்., அமெரிக்க அதிபர் பைடன் ஆவேசம்| Dinamalar

வாஷிங்டன், :”உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்று பாகிஸ்தான். அந்த நாடு, எந்தவிதமான ஒருங்கிணைப்பும் இல்லாமல் அணு ஆயுதங்களை வைத்துள்ளது,” என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடந்த ஜனநாயக கட்சியின் எம்.பி.,க்கள் பிரசார குழுவின் வரவேற்பு நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியதாவது: சீன அதிபர் ஜிங்பிங், தான் விரும்புவதை செய்ய வேண்டும் என நினைக்கிறார். ஆனால், அதில் மிகப் பெரிய பிரச்னைகள் உள்ளன. இந்த நேரத்தில் … Read more

இன்று உலக உணவு தினம்| Dinamalar

ராமநாதபுரம் :”அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்பெற்றான் பொருள்வைப் புழி”அதாவது ‘வறியவரின் கடும்பசியை தீர்க்க வேண்டும்,அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப்பொருளை தனக்கு பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்’, என திருவள்ளுவர்கூறியுள்ளார். இதன்படி, பட்டினியில்லா சமுதாயம் உருவாக, வீணாக்கும் உணவை சேமித்து, ஏழைகளுக்கு வழங்கி சேவை செய்ய அனைவரும் முன்வர வேண்டும். இன்று உலக உணவு தினம் 1945ம் ஆண்டு அக்.16ல் ஐக்கிய நாடுகள்சபைகளின் துணை அமைப்பான உணவு, வேளாண் நிறுவனம் துவங்கப்பட்டது. இந்நாளில் 1979 முதல் … Read more

ஆற்றில் படகு கவிழ்ந்து 10 மாணவர்கள் பலி| Dinamalar

கோ சம்ரோயன்:கம்போடியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில், ௧௦ மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில், புனோம் பென் நகரின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மெகாங் ஆற்றை, ஒரு படகு இருதினங்களுக்கு முன் இரவு கடந்தது. இந்த படகில், ௧௨ – ௧௪ வயது வரையிலான மாணவர்களும் பயணித்தனர். இவர்கள் வகுப்பை முடித்துவிட்டு தங்களது கிராமத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அளவுக்கு அதிகமான பயணியரை ஏற்றிச் சென்றதால், படகு பாரம் தாளாமல் கவிழ்ந்தது. அந்த படகில் … Read more

இன்று முதலாளிகள் தினம் ஆய்வு சொல்லும் அடடே தகவல்கள்| Dinamalar

புதுடில்லி :’உலக முதலாளிகள் தினம்’ இன்று கொண்டாடப்படுவதை அடுத்து, வேலைவாய்ப்புகளுக்கான ‘நவுக்ரி டாட் காம்’ நிறுவனம், முதலாளிகளுக்கும், ஊழியர்களுக்குமான உறவு குறித்து அறிந்து கொள்ள, ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: ஒரு நிறுவனத்துக்குள், மேற்கொண்டு வளர்ச்சியை எட்ட வாய்ப்பிருக்கும்பட்சத்தில், ஊழியர்கள், அந்த நிறுவனத்திலேயே தொடர விரும்புகின்றனர். ஆய்வில் பங்கேற்றவர்களில் 41 சதவீதம் பேர், வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாததால், இதற்கு முன் பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து வெளியேறியதாக கூறியுள்ளனர்.மேலும், நிறுவன கொள்கைகள், மோசமான பணி கலாசாரம் ஆகியவையும் முந்தைய நிறுவனத்தை … Read more

உலக பசி குறியீடு தரவரிசை.. நாட்டின் இமேஜை கெடுக்க முயற்சி – இந்தியா சாடல்!

உலக பசி குறியீட்டு தரவரிசையை இந்தியா ஏற்க மறுத்துள்ளதோடு, நாட்டின் இமேஜை கெடுக்கும் தொடர்ச்சியான முயற்சி என குற்றம் சாட்டி உள்ளது. சர்வதேச அளவில் உணவு பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆண்டுதோறும் உலக பசிக் குறியீடு (Global Hunger Index – GHI) வெளியிடப்பட்டு வருகிறது. அயர்லாந்தை சேர்ந்த கன்சரன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியை சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்பே என்ற நிறுவனமும் இந்த பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், … Read more

அழகியுடன் உல்லாசம்… தனது 'ஆபாச' வீடியோவை தானே வெளியிட்ட அரசியல்வாதி!

அமெரிக்கா நியூயார்க் நகரின் 12ஆவது காங்கிரஸ் மேன் பதவிக்கு சுயேச்சை வேட்பாளராக மைக் இட்கிஸ் போட்டியிடுகிறார். இவர், தான் ஆபாச நடிகையுடன் தனிமையில் இருந்த அந்தரங்க வீடியோவை, ஆபாச இணையதளம் ஒன்றில் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 53 வயதான மைக், பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக வேண்டும் என்றும் பாலியல் உறவை இயல்பானதாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனும்  இந்த ஆபாச வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார். அடுத்த மாதம் அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல் நடைபெற இருக்கிறது. … Read more

இந்தியை திணிப்பது இந்தி பேசாத மக்கள் மீதான போர்: புதுவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேச்சு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில திமுக இளைஞர் மற்றும் மாணவர் அணி சார்பில் இந்தி திணிப்பை கண்டித்து போராட்டம் இன்று நடைபெற்றது. சுதேசி பஞ்சாலை அருகே நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும், மாநில திமுக அழைப்பாளருமான சிவா தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் மற்றும் திமுகவினர் பலர் கலந்து கொண்டனர். இதில் அமைப்பாளர் சிவா பேசியதாவது:‘‘மாநில மொழிகளை அழித்து இந்தி மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பது நாட்டுக்கு மிகப்பெரிய கேடாக முடியும். … Read more

துருக்கி நிலக்கரி சுரங்க விபத்து | 40 தொழிலாளர்கள் பரிதாப பலி; பலர் படுகாயம்

அன்காரா: துருக்கியில் நிலக்கரி சுரங்கத்தில் நடந்த தீ விபத்தில் 40 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர். பலர் காயமடைந்தனர். இதுகுறித்து துருக்கி எரிபொருள் அமைச்சர் ஃபாத்தியா டான்மெஸ் கூறும்போது, “வடக்கில் ஒரு சுரங்கத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 350 மீட்டர் தூரத்திற்கு பெரு வெடிப்பு கிளம்பியது. தீ விபத்து தொடர்ந்து தொழிலாளர்கள் திரளாக ஓடிச் சென்றனர். இந்த தீ விபத்தில் 40 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர். தொடர்ந்து தொழிலாளர்களை மீட்கும் பணி நடந்து … Read more

உலகின் மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான்: ஜோ பைடன் சாடல்| Dinamalar

வாஷிங்டன்: உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் உள்ளது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜனநாயக கட்சியின் பிரசார குழு கூட்டத்தில் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை குறித்து ஜோ பைடன் பேசியதாக, வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்: சீன அதிபர் ஷி ஜின்பிங், தான் விரும்புவதை புரிந்து கொண்டவர். ஆனால், மிகப்பெரிய பிரச்னைகள் உள்ளன. அதை எப்படி கையாள்வது.ரஷ்யாவில் என்ன நடக்கிறது என்பதை ஒப்பிடும் போது, அதை … Read more

மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான் – அமெரிக்க அதிபர் பைடன் பகீர்!

உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம் சாட்டி உள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் ஜனநாயக கட்சியின் எம்.பிக்கள் பிரசார குழுவின் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அமெரிக்காவுக்கு கடும் சவால் அளித்து வரும் சீனாவையும், ரஷ்யாவையும் திட்டித் தீர்த்த ஜோ பைடன், பாகிஸ்தான் குறித்தும் பேசினார். அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை குறித்து அதிபர் … Read more