உலக அளவில் வீழ்ச்சியடையும் வனவிலங்குகளின் எண்ணிக்கை: ஆய்வில் அதிர்ச்சி

லண்டன்: 1970-ஆம் ஆண்டு முதல் உலக அளவில் வனவிலங்குகளின் எண்ணிக்கை மூன்றில் இரண்டு பங்கு குறைந்துள்ளது என்று உலக வன உயிரின நிதியம் (WWF) தெரிவித்துள்ளது. உலகில் 56,441 வனவிலங்குகள் அழிவின் விளிம்பில் உள்ளதாக ஐ.நா. சபையின் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன்னர் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உலக வன உயிரின நிதியம் வெளியிட்ட அறிக்கையில், “2018-ஆம் ஆண்டின் தரவுகளின் … Read more

கொரோனா பேரிடர் காரணமாக கடந்த 2020-ல் இந்தியாவில் 5.6 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர் – உலக வங்கி அறிக்கை

ஜெனீவா, உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- சர்வதேச அளவில் கரோனா பாதிப்பால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தொழிலக நடவடிக்கைகள் ஸ்தம்பித்து உலக பொருளாதாரம் மந்த நிலையை சந்தித்தது. கரோனா தாக்கத்தின் காரணமாக கடந்த 2020-ல் மட்டும் உலகளவில் 7.1 கோடி பேர் மிக வறுமையான நிலைக்கு தள்ளப்பட்டனர். இதில், 79 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக, கரோனா பேரிடரால் மட்டும் இந்தியாவில் 5.6 கோடி பேர் கடுமையான வறுமை நிலைக்கு ஆளாகினர். சர்வதேச தீவிர வறுமை … Read more

சொந்தக்கட்சி எம்.பி.க்களிடம் இருந்து இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரசுக்கு நெருக்கடி வரிகுறைப்பு திட்டங்கள் மறுபரிசீலனையா?

லண்டன், இங்கிலாந்தின் புதிய பிரதமராகி உள்ள பெண் தலைவர் லிஸ் டிரஸ், கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் தகவல்களை வெளியிட்டார். கடந்த 23-ந்தேதி வெளியான மினி பட்ஜெட்டில் 45 பில்லியன் பவுண்டு (சுமார் ரூ.4.5 லட்சம் கோடி) வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன்வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது நிதிச்சந்தைகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிரதமர் லிஸ் டிரஸ், இந்த வரிகுறைப்பு திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவரது … Read more

அதிகரிக்கும் கொரோனா பரவல் – ஷாங்காயில் மீண்டும் முழு ஊரடங்கு?

சீனாவின் ஷாங்காய் நகரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், பொழுதுபோக்கு அரங்குகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், நகருக்குள் வருபவர்களுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருவது மக்களை அச்சமடையச் செய்துள்ளது.  Source link

ரஷியா-உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் சமநிலையானது – கசகஸ்தான் வெளியுறவு மந்திரி

அஸ்டானா(கசகஸ்தான்), ரஷியா – உக்ரைன் இடையே நடந்து வரும் போருக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பெரிய நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தாலும், உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில், கசகஸ்தான் துணை வெளியுறவு மந்திரி ரோமன் வாசிலென்கோ, ரஷியா-உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் சமநிலையானது என்று கூறினார். கசகஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான இருதரப்பு உறவு குறித்தும் அவர் பாராட்டினார். அவர் கூறியதாவது, “இந்த … Read more

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

வாஷிங்டன், அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர், அமெரிக்காவின் தெற்கு மாகாணமான வடக்கு கரோலினாவில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். வடக்கு கரோலினாவில் உள்ள ராலே நகரத்தில் நேற்று மாலை 5 மணியளவில் பொதுமக்களை நோக்கி ஒரு மர்மநபர் திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். பின் அங்கிருந்து அவர் தப்பிவிட்டார். எனினும் போலீசாரின் தீவிர நடவடிகையால், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் … Read more

பெல்கொரோட் பிராந்தியத்தில் உள்ள ரஷிய வெடிமருந்து கிடங்கை குண்டுவீசி தகர்த்தது உக்ரைன் ஆயுதப்படை!

கீவ், உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கிய நிலையில் 8 மாதங்கள் ஆகியும் போர் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. 40-க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது நேற்று ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் உக்ரைன் விமானப்படை 25 ரஷிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், கருங்கடலுக்கு அருகே கப்பல் கட்டும் மையம் மற்றும் துறைமுகம் மீதும் ரஷியா தாக்குதல் நடத்தியதாகவும், மைகோலாயின் தெற்கு நகரம் கடுமையான குண்டு வீச்சு … Read more

76,000 டாலர்களுக்கு விற்பனையாகி கவனத்தை ஈர்த்த ஜீன்ஸ் பேண்ட்

மெக்சிகோவில் 1880-களில் தயாரிக்கப்பட்ட பழமையான ஜீன்ஸ் பேண்ட் ஏலத்தில் 76 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அமெரிக்காவின் மேற்கு பகுதியில் பாழடைந்த சுரங்கத்தில் ஜீன்ஸ் பேண்ட் ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடித்திருக்கின்றனர். அதனை Levi’s நிறுவனம் துவங்கப்பட்ட சில ஆண்டுகளில் தயாரித்திருக்கிறது. இந்த பேண்ட் மக்களிடையே பிரபலமான நிலையில், அது ஏலத்திற்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த பேண்டை பழங்கால ஆடை சேகரிப்பு ஆர்வலரான Kyle Haupert வாங்கியுள்ளார். Source link

ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வந்த மறுநாளே உக்ரைனின் 40 நகரங்கள் மீது தாக்குதல் – ரஷ்ய படைகள் ஏவுகணைகள் வீச்சு

கீவ்/பிரஸெல்ஸ்: ரஷ்யா மீது ஐ.நா.வில் கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட மறுநாளே உக்ரைனின் 40 நகரங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது. இதில், பல குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்தன. இதுகுறித்து ரஷ்ய ஊடக தகவல்கள் தெரிவிப்பதாவது: குறிப்பாக, துறைமுக நகரமான மைகோலைவ் மீது ரஷ்யா ஏராளமான குண்டுகளை வீசியது. இதில், ஐந்து மாடி கட்டிடமொன்று சேதமடைந்தது. இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். தலைநகரான கீவிலும் வெடிபொருள் ட்ரோன் மூலம் ரஷ்யா தாக்குதலில் ஈடுபட்டது. … Read more

சீனாவில் ஜி ஜிங்க்பிங்குக்கு வலுக்கும் எதிர்ப்பு! 14 லட்சம் பேர் கைது!

பெய்ஜிங்: சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங்கின் மூன்றாவது முறையாக பதவியேற்பதற்கு எதிர்ப்புகள் வலுக்கின்றன. ‘சர்வாதிகாரியை அகற்று’ என்ற கோஷங்கள் விண்ணை முட்டும் நிலையில் இதுவரை 14 லட்சம் கைது செய்யப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே அவருக்கு எதிராக அசாதாரண ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியுள்ளன. தலைநகர் பெய்ஜிங்கில் பல இடங்களில் ஜின்பிங்கிற்கு எதிராக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அடுத்த அதிபர் தேர்வுக்கான CPC பொதுக்கூட்டம் பெய்ஜிங்கில் அக்டோபர் 16ஆம் தேதி நடைபெற … Read more