22 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி| Dinamalar

பாங்காக்: தாய்லாந்தில் குழந்தைகள் நல மையத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 22 குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்தது அந்நாட்டில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் முன்னாள் போலீஸ்காரர் என தெரியவந்துள்ளது. அவர் கடந்தாண்டு தான் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர், துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த குழந்தைகளில் சிலருக்கு 2 வயதுக்கு குறைவே உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூடு நடக்கும் … Read more

Nobel Prize Literature 2022: இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெுறும் பிரான்ஸ் எழுத்தாளர்!

உலக அளவில் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச அளவில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு துறைவாரியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் 3 ஆம் தேதி மருத்துவத்துக்கான பரிசு அறிவிக்கப்பட்டது. அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக, சுவீடன் நாட்டைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளரான ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்துக்கான நோபல் … Read more

உலகின் மிக வயதான நாய் மரணம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 2000-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி பிறந்த நாயை, பாபி – ஜூலி என்ற தம்பதி பெப்பிள்ஸ் என பெயரிட்டு வளர்க்கத் தொடங்கினர்.  உலகிலேயே மிக அதிக வயதுடைய நாயாக 21 வயதான டோபி கெய்த் என்ற நாய் அறிவிக்கப்பட்டபோது, பாபி – ஜூலி தம்பதி தங்களது நாய் அதை விட அதிக வயதுடையது என்பதால், கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்தனர். மேலும் படிக்க | Video: அமெரிக்காவில் 4 இந்தியர்கள் கடத்தல்… 2 … Read more

தாய்லாந்தில் நடந்த துப்பாக்கிச் சூடு: குழந்தைகள் உட்பட 31 பேர் பலி!

தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பகல் நேர பராமரிப்பு மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சுமார் 31 பேர் கொல்லப்பட்டனர். இதில் குழந்தைகளும் பெரியவர்களும் அடங்குவர் என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் முன்னாள் காவல்துறை அதிகாரி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த நபரை கைது செய்வதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் … Read more

Video: அமெரிக்காவில் 4 இந்தியர்கள் கடத்தல்… 2 நாள்களுக்கு பின் உடல்கள் கண்டெடுப்பு!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், மெர்சிட் கவுண்டி என்ற இடத்தில், இந்திய வம்சாவளி குடும்பம் ஒன்று வசித்து வந்தது. அந்த குடும்பத்தைச் சேர்ந்த அரூஹி தேரி என்ற 8 மாத குழந்தை, அதன் தாயார் ஜஸ்லீன் காவ் (27), தந்தை ஜஸ்தீப் சிங் (36), உறவினர் அமந்தீப் சிங் (39)ஆகியோர் கடந்த திங்கட்கிழமை அன்று (அக். 3) ஒருவரால் கடத்தப்பட்டுள்ளனர்.  அவர்களை துப்பாக்கி முனையில் வீட்டிலிருந்து ஒருவர், கடத்திச்செல்லும் சிசிடிவி காணொலி போலீசாரால் வெளியிடப்பட்டது. இந்த காணொலி வெளியாக … Read more

அடுத்தாண்டு ஜூன் 3ம் தேதி பிரிட்டன் மன்னர் முடிசூட்டு விழா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத், 96, முதுமை காரணமாக சமீபத்தில் மரணமடைந்தார்.இதையடுத்து, பிரிட்டன் அரச குடும்பத்து வழக்கப்படி, மூன்றாம் சார்லஸ் மன்னரானார்.கடந்த மாதம்,செப்., 10ம் தேதி பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற விழாவில், மன்னராக பிரகடனப்படுத்தப்படுவதற்கான ஆவணத்தில் மூன்றாம் சார்லஸ் கையெழுத்திட்டார். பின்னர் அவர் … Read more

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா..? புதிய ஆதாரம் வெளியீடு

லண்டன், செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் தென் துருவத்தில் திரவ நீர் இருப்பதற்கான ஆதாரங்களை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்து இருக்கிறது. இதுபற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2018-ம் ஆண்டு, மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற ஆர்பிட்டர், செவ்வாய் கிரகத்தின் தென்துருவத்தில் பனிக்கட்டியின் (மூடுபனி) மேற்பரப்பு தாழ்வதையும், உயர்வதையும் கண்டறிந்து, அதன் அடியில் திரவ வடிவில் தண்ணீர் இருக்கலாம் … Read more

உக்ரைனில் இருந்து சிறுத்தைகளை மீட்டு தர மத்திய அரசுக்கு ஆந்திர டாக்டர் கோரிக்கை

லண்டன், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த எலும்பியல் மருத்துவரான கிரிகுமார் பாட்டீல் உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியில் டான்பாஸ் மாகாணத்தில் உள்ள செவரோடோனெட்ஸ்க்கி நகரில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தையை விலைக்கு வாங்கி வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்தார். இந்த சூழலில்தான் கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கியது. போர் காரணமாக உக்ரைனில் வசித்து … Read more

17 வயது ரசிகை பாலியல் வன்கொடுமை புகார்: விசாரணைக்காக இன்று நேபாளம் திரும்புகிறார் கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சானே

காத்மாண்டு, நேபாள கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர் சந்தீப் லமிச்சனே. இவர் இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றார். கடைசியாக ஜமைக்கா தாளாவாஸ் அணிக்காக கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் சந்தீப் விளையாடினார். இந்த நிலையில் தான் சந்தீப் லாமிச்சானே மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், நண்பர் … Read more

தென்கொரியாவை நோக்கி கிழக்கு கடற்பகுதியில் வடகொரியா இன்று அதிகாலை மீண்டும் ஏவுகணை வீச்சு!

சியோல், வட கொரியா கடந்த 5 ஆண்டுகளில் முதல் முறையாக ஜப்பான் மீது கடந்த செவ்வாய்க்கிழமை ஏவுகணையை ஏவியது.வடகொரியா பரிசோதித்த ஏவுகணை பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு ஜப்பான் எல்லைக்கு மேலே பறந்து சென்றது. இதை தொடர்ந்து ஜப்பான் அரசு நாட்டுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரித்தது. 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பானுக்கு மேல் பறந்த முதல் வட கொரிய ஏவுகணை இதுவாகும். இதற்கு பதிலடியாக அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா இன்று ஏவுகணை சோதனை நடத்தியது. வடகொரியாவுக்கு … Read more