Investment: இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பமா? NRIகளுக்கான இந்திய சட்டங்கள் இவை

புதுடெல்லி: இந்தியாவில் ஒரு சொத்தை வாங்க ஆர்வமுள்ள, ஆனால், இந்திய குடியுரிமை இல்லாத இந்தியர் (NRI), தங்களுக்கான வரி விதிப்பு நடைமுறைகளை அறிந்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு இந்தியாவில் சொத்து வாங்கத் தடை இல்லை என்றாலும், அவரது சொத்து முதலீடு அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் (FEMA) விதிகளின்படி செய்யப்பட வேண்டும். இந்த  ஃபெமா விதிகள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் (PIOs) செய்யும் சொத்துகள் மீதான முதலீடுகளுக்கு பொருந்துபவை ஆகும். இந்திய ரிசர்வ் வங்கி, NRI … Read more

கரோனா காலத்தில் நாம் கற்றுக் கொண்ட முக்கிய பாடம்: சவுமியா சுவாமிநாதன்

புதுடெல்லி:காலநிலை மாற்றம், சுற்றுசூழலுடன் நம் வாழ்வு எவ்வளவு பிணைந்துள்ளது என்ற புரிதல்தான் பெருந்தொற்று காலத்தில் நாம் கற்றுகொண்ட முக்கிய பாடம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைகாட்சிக்கு சவுமியா சுவாமிநாதன் அளித்த பேட்டியில், “ இந்த கரோனா தொற்று காலத்தில் நாம் கற்று கொண்ட பாடம் காலநிலை மாற்றம். நாம் சுற்றுசூழலுக்கு என்ன செய்தோமோ அதற்கான விளைவை தற்போது எதிர் கொண்டுள்ளோம். நமது வாழ்வு சுற்றுசூழலுடன் இணைந்துள்ளது. … Read more

$475 மில்லியன் நஷ்ட ஈடு கேட்டு CNN மீது டிரம்ப் அவதூறு வழக்கு!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று CNN மீது 475 மில்லியன் டாலர் நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தார். டிரம்பில் அரசியல் எதிர்காலத்தை பாழாக்கும் முயற்சியில் CNN நெட்வொர்க் தொலைகாட்சி, தனக்கு எதிரான அவதூறு செய்திகளை பரப்பியதாக குற்றம் சாட்டியுள்ளார். புளோரிடாவின் ஃபோர்ட் லாடர்டேலில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், 2020 ஆம் ஆண்டு அதிபர்த் தேர்தலில் தன்னைப் பற்றி பரப்பட்ட அவதூறு செய்திகள் காரணமாக தான் அதிபர் தேர்தலில் … Read more

இந்தோனேசியா | கால்பந்து போட்டி கலவரத்தில் 187 பேர் உயிரிழப்பு: நெரிசலில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

மலாங்: இந்தோனேசிய நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணம் மலாங் நகரில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் கலவரம் ஏற்பட்டது. போலீஸாருக்கும், தோல்வியடைந்த அணியின் ரசிகர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி 187 பேர் உயிரிழந்தனர். மேலும், 300-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பான ஃபிஃபாவின் தரவரிசைப் பட்டியலில், கிழக்காசிய நாடான இந்தோனேசியா 155-வது இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் அதிகம் விரும்பப்படும் விளையாட்டுகளில் கால்பந்து முதலிடத்தில் உள்ளது. தேசிய … Read more

அமெரிக்காவில் குழந்தை உட்பட இந்திய வம்சாவளியினர் கடத்தல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 8 மாத குழந்தை உட்பட 4 இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் கடத்தி செல்லப்பட்டனர். அவர்களை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா நகரை சேர்ந்த ஜஸ்தீப் சிங்(36), மனைவி ஜஸ்லீன் கவுர்(27), இவர்களின் 8 மாத குழந்தை அரூஹி தேரி மற்றும் அமன்தீப் சிங்(39) என்பவர்கள் கடத்தி செல்லப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலையில், அவர்கள் பணிபுரியும் இடத்திற்கு அருகே, அவர்களை கடத்தல்காரர்கள் வலுக்கட்டாயமாக கடத்தி சென்றுள்ளனர். அவர்களிடம் … Read more

காந்தியின் அகிம்சை கொள்கையை பரப்ப வேண்டும்: முஸ்லிம் உலக லீக்

ரியாத்: இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கையை பரப்ப வேண்டும் என்று முஸ்லிம் உலக லீக் அழைப்பு விடுத்துள்ளது. சவுதி அரேபியாவின் மெக்கா நகரை தலைமையிடமாகக் கொண்டு முஸ்லிம் உலக லீக் அமைப்பு செயல் படுகிறது. உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய அமைப்பான இதில், 139 நாடுகளைச் சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். முதல் முறையாக இந்த அமைப்பு மகாத்மா காந்தியின் பிறந்த நாளை கொண்டாடி உள்ளது. மேலும், இதுதொடர்பாக முஸ்லிம் உலக … Read more

போரை நிறுத்த எலான் மஸ்க் நடத்திய கருத்துக்கணிப்பு: உக்ரைன் கோபம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமைதி ஏற்படுத்துவது குறித்தும், 4 பிராந்தியங்களில் ஐ.நா., மேற்பார்வையில் ஓட்டெடுப்பு நடத்துவது குறித்து, டெஸ்லோ நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் நடத்திய கருத்துக்கணிப்பு நடத்தினார். இதனால், கோபமடைந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பதிலடி கொடுத்துள்ளார். உக்ரைன் மீது கடந்த எட்டு மாதங்களாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உலகளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால், உலக நாடுகள் … Read more

உக்ரைனில் உள்ள கருஞ்சிறுத்தை, ஜாகுவாரை மீட்கும் போராட்டத்தில் இந்திய மருத்துவர்

கீவ்: உக்ரைனில் பதற்றமிகு போர்ச் சூழலில் குண்டுவெடிப்புச் சத்தங்களுக்கு இடையே தனது செல்லப் பிராணிகளான கருஞ்சிறுத்தையையும், ஜாகுவாரையும் பாரமரித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் கிரிகுமார் பாட்டீல் தற்போது அவைகளை கனத்த மனத்துடன் பிரிந்து வந்திருக்கிறார். உக்ரைனில் தான் அன்புடன் வளர்த்து வந்த கருஞ்சிறுத்தை, ஜாகுவார் இல்லாமல் நாடு திரும்பப் போவதில்லை என்று தீர்க்கமாக இருந்தவர்தான் ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவரான கிரிகுமார் பாட்டீல். மேற்கு உக்ரைனில் உள்ள டான்மாஸ் மாகாணத்தில் உள்ள சிறு நகரமான செவரோடோனெட்ஸ்க்கி ஆறு … Read more

போரை நிறுத்துங்கள்: புதினுக்கு போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

வாடிகன்: உக்ரைன் போரை நிறுத்துமாறு ரஷ்ய அதிபர் புதினுக்கு போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கைப்பற்றப்பட்ட லுஹான்ஸ்க் உள்ளிட்ட 4 நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டதாக ரஷ்ய அதிபர் புதின் கடந்த வாரம் அறிவித்தார். இதற்கிடையில், ரஷ்யப் படைகளால் ஒவ்வொரு நாளும் உக்ரைனியர்கள் கொல்லப்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக குற்றம் சுமத்தினார். இந்தச் சூழலில் போரை நிறுத்துமாறு போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.37 கோடியாக உயர்வு

ஜெனீவா, சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.51 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,551,600 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் … Read more