பாதுகாப்புக்கு வந்த போர் விமானங்கள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிங்கப்பூர்: அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் நடுவானில் பயணி ஒருவர், தனது பையில் வெடிகுண்டு உள்ளதாக கூறியது, விமான ஊழியர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலியாக மிரட்டல் விடுத்த அந்த நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து போர் விமானங்கள் பாதுகாப்புடன் உரிய நேரத்தில் பாதுகாப்பாக சிங்கப்பூரில் விமானம் தரையிறக்கப்பட்டது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, அமெரிக்காவின் சான் … Read more

அமெரிக்க தேர்தலை குறிவைத்த ரஷ்யாவில் இருந்து இயங்கிய நெட்வர்க்குகளை நீக்கியது மெட்டா

அமெரிக்க இடைத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பான விவகாரத்தினால் அதிக எச்சரிக்கையுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மெட்டா பகிரங்கமாக தெரிவித்துள்ளது. இந்த செய்தியை மெட்டா செய்தித் தொடர்பாளர் CNN இடம் கூறினார். நெட்வொர்க் சிறியதாக இருந்தது என்றும், அது எந்த கவனத்தையும் பெறவில்லை என்றும் கூறப்பட்டாலும், அரசியல் ஸ்பெக்ட்ரமின் இருபுறமும் அமெரிக்கர்களுக்காக காட்டப்படும் சில கணக்குகள் இதில் அடங்கும் என்று மெட்டா தெரிவித்துள்ளது.  “அவர்கள் அமெரிக்கர்கள் போல் நடிக்கும் போலி கணக்குகளை நடத்தி, அமெரிக்கர்களைப் போல பேச … Read more

ஈரானில் தொடரும் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம்: தலைமுடியை வெட்டி ஆதரவளித்த துருக்கி பாடகி

அன்காரா: ஹிஜாப்புக்கு எதிராக போராடும் ஈரான் பெண்களுக்கு ஆதரவாக துருக்கி பாடகி மெலக் மோஸ்சோ மேடை நிகழ்ச்சியின் போது தனது முடியை வெட்டிக் கொண்டார். ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்பு பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர்.கடந்த 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி … Read more

ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்..!! – பொது வாக்கெடுப்பில் முடிவு

ஹவானா, கம்யூனிஸ்டு நாடான கியூபாவில் பல ஆண்டுகளாகவே ஓரின சேர்க்கையாளர்கள் வெளிப்பாடையான பாகுபாட்டை எதிர்கொண்டு வந்தனர். 1960களின் முற்பகுதியில் ஓரின சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களும், பெண்களும் துன்புறுத்தப்பட்டு அரசு எதிர்பார்ப்பாளர்களுடன் வேலை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அதன் பின்னர் 1979-ம் ஆண்டு கியூபாவில் ஓரின சேர்க்கை சட்டப்பூர்வமாக்கப்பட்டது. இருந்தபோதிலும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு வெளிப்படையாகவே பாகுபாடு காட்டப்பட்டதாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன. கியூபா அரசாங்கத்துக்கு வெளியேயும், உள்ளேயும் ஓரின சேர்க்கையாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டனர். கடந்த 2018-ம் … Read more

விண்கற்களை திசை திருப்பி நாசா விண்கலம் சாதனை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் : பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய விண்கற்களை திசைதிருப்பி விடும், ‘நாசா’ எனப்படும் அமெரிக்க விண்வெளி அமைப்பின் முயற்சி வெற்றிகரமாக நடந்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில், நாசா அமைப்பு பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பூமியை விண்கற்கள் தாக்குவதை தடுப்பது குறித்து நாசா ஆய்வு செய்தது. இதன்படி, ‘டார்ட்’ எனப்படும், விண்கற்களை திசை திருப்பிவிடும் தொழில்நுட்பத்தை உருவாக்கியது. இந்த முறையில், விண்கலத்தை வேகமாக மோதச் செய்து, விண்கல்லை … Read more

ஈகுவடாரில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்தது; 4 பேர் பலி

குயிட்டோ, தென்அமெரிக்க நாடான ஈகுவடாரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கலாபகோஸ் தீவு புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அமெரிக்கா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படகு ஒன்றில் கலாபகோஸ் தீவில் உள்ள கடலில் சென்று கொண்டிருந்தனர். நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது எரிபொருள் தீர்ந்ததால் படகின் 3 என்ஜின்களும் வேலை செய்யாமல் நின்றது. அதை தொடர்ந்து … Read more

ரஷ்யாவுடன் பிராந்தியங்கள் இணைப்பா?உக்ரைனில் ஓட்டெடுப்பு முடிந்தது| Dinamalar

கீவ் : ரஷ்ய ஆதரவு பெற்றுள்ள பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை அந்த நாட்டுடன் இணைப்பதற்காக மக்களிடம் கருத்து கேட்கும் ஓட்டெடுப்பு முடிந்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த, பிப்., 25ல் போர் தொடுத்தது. ஏழு மாதங்களை கடந்து போர் நீடித்து வருகிறது.இந்நிலையில், உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே உள்ள டோனெட்ஸ்க், லுஹான்க்ஸ், கெர்சான் மற்றும் ஜபோரிஸ்சியா ஆகிய நான்கு பிராந்தியங்களை, தன்னுடன் இணைக்க ரஷ்யா திட்டமிட்டு உள்ளது.இதற்காக இந்தப் … Read more

சிறைப்பிடிக்கும் வீரர்களை சித்திரவதை செய்யும் ரஷியா – உக்ரைன் குற்றச்சாட்டு

கீவ், உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ரஷியா போரை தொடங்கியது. போரில் ஆயிரக்கணக்கான உக்ரைனியர்கள் ரஷிய படைகளால் கொல்லப்பட்டுள்ளனர். அதோடு லட்சக்கணக்கான உக்ரைனியர்கள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதனிடையே ரஷியா பல்வேறு போர் குற்றங்களில் ஈடுபடுவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அந்த வகையில் உக்ரைனில் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தற்காலிக சிறைகளில் இருக்கும் கைதிகள் துன்புறுத்தப்படுவதாக உக்ரைன் குற்றம் சாட்டுகிறது. இந்த நிலையில் ரஷியாவால் சிறைப்பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட உக்ரைன் … Read more

ரஷியாவில் கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு..!!

மாஸ்கோ, உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ள போதிலும் ஒரு சில நாடுகளில் வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ரஷியாவில் கொரோனா தொற்று திடீரென அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்த நிலையில் ரஷியாவில் நேற்று ஒரே நாளில் 36 ஆயிரத்து 605 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அங்கு மொத்த … Read more

சீக்கிய ஆசிரியை கட்டாய மதமாற்றம் – பாகிஸ்தானுக்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம்

புதுடெல்லி: பாகிஸ்தானில் சீக்கிய ஆசிரியை ஒருவர் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார். பாகிஸ்தானில் கைபர் பக்துன்கவா மாகாணம் புனெர் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த இளம் ஆசிரியை ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார். பின்னர் அப்பெண் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, கடத்தியவருக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டார். இதையடுத்து சீக்கிய சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்சினை தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் … Read more