டீ குடித்தால் டைப் 2 சர்க்கரை நோயை தவிர்க்கலாம்: 10 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு

வாஷிங்டன்: நாளொன்றுக்கு 4 முறை டீ குடித்தால் டைப் 2 சர்க்கரை நோயை தவிர்க்கலாம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. சர்க்கரை நோய் ஆய்வுக்கான ஐரோப்பிய கூட்டமைப்பின் ஆண்டுக் கூட்டம், ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் கடந்த 19-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெற்றது. இதில், சீனாவின் வூஹான் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 8 நாடுகளைச் சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட 10 லட்சம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில், பிளாக் டீ, … Read more

ஈரானில் ஹிஜாப் எரிப்பு போராட்ட பலி எண்ணிக்கை உயர்வு..! – தொடரும் பதற்றம்..!

ஈரானில் பூதாகரமாக வெடித்துள்ள 22 வயது மஹ்சா அமினியின் மரணத்தை எதிர்த்து, 30க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டம் வெடித்துள்ளது. ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஹிஜாப் என்பது பாரம்பரியமாக முஸ்லிம் பெண்கள் தங்கள் குடும்பத்திற்கு வெளியே ஆண்களின் முன்னிலையில் அணியும் ஒரு முக்காடு ஆகும். 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் அனைத்துப் பெண்களும் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கட்டாய ஆடைக் குறியீட்டை ஈரான் கடுமையாக நடைமுறைப்படுத்தி வருகின்றது. ஈரானில் 9 வயதுக்கு … Read more

மாமிசம் சாப்பிட்டால் நோ செக்ஸ்…ஆண்களுக்கு பாவம் செய்யும் பீட்டா அமைப்பு

விலங்குகள் நலன் சார்ந்து இயங்கும் பீட்டா அமைப்பு தற்போது திடுக்கிடும் போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. பருவநிலை மாற்றத்திற்கு பெண்களை விட ஆண்கள் தான் காரணம் என்றும் அதுவும் இறைச்சியை அதிகம் உண்பதால் என்று பீட்டா அமைப்பின் ஜெர்மன் கிளையை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். அதனால், பெண்கள் இறைச்சி உண்ணும் ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்றும், அவர்களின் ஆணாதிக்க மனோபாவத்திற்கு இறைச்சி உண்பதும் ஒரு காரணம் என்றும் தெரிவித்துள்ளனர்.  உணவு பழக்கத்தின் மூலம் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பெண்களை … Read more

கனடாவை தாக்க காத்திருக்கும் 'பியோனா' புயல்!

கனடாவின் கிழக்கு பகுதிகளை ‘பியோனா’ புயல் தாக்க உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனடாவின் கிழக்கு பகுதிகளை ‘பியோனா’ என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பியோனா புயல் அட்லாண்டிக் கடலில் உள்ள தீவான பெர்முடாவை பலத்த மழை மற்றும் காற்றுடன் நேற்று தாக்கியது. அங்கு மணிக்கு 103 மைல்கள் (166 கிமீ) வேகத்தில் காற்று வீசியது என்று பெர்முடா வானிலை சேவை மையம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து … Read more

Fact Check! சீனாவில் ராணுவப் புரட்சியா… அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் கைதில் இருக்கிறாரா.. உண்மை என்ன!

சமூக ஊடகங்களில் வைரலாக பரவும் ஒரு தகவல் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன ராணுவம் நடத்திய புரட்சியில், சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டு சிறையில் உள்ளதாக ட்விட்டரில் செய்தி பரவி வருகிறது. அதில் சீன ராணுவம் அதிபர் ஜி ஜின்பிங்கை வீட்டில் வைத்து கைது செய்து அவரது அதிகாரத்தை கைப்பற்ற தயாராகி வருகிறது என கூறப்பட்டுள்ளது . சில வருடங்களுக்கு முன்பு மியான்மர் மற்றும் பாகிஸ்தானில் இதுதான் நடந்தது. ட்விட்டரில் #XiJinping என்ற … Read more

போராடும் ஈரான் மக்களுக்கு இணைய சேவையை வழங்கும் எலான் மஸ்க்

தெஹ்ரான்: ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த சமூக வலைதளங்கள் முடக்கப்பட்ட நிலையில், ஈரானில் தனது ஸ்டார்லிங்க் செயற்கைகோள் இணைய சேவையை வழங்கும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஈரானில் கடந்த 8 நாட்களாக ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது. ஈரானில் 80 நகரங்களில் கட்டாய ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் இரவு பகலாக தொடர்கிறது. போராட்டத்தில் இளம் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் பங்கேற்றுள்ளனர். இதுவரை இப்போராட்டத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழலில் … Read more

சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டாரா? உண்மை என்ன?

சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சமூகவலைதளங்களில் வதந்தி ஒன்று வேகமாக பரவி வருகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெய்ஜிங்கில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறவில்லை. இந்த காலகட்டத்தில் அவர் எந்த உலகத் தலைவரையும் சந்திக்கவில்லை, அவர் சார்ந்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களைக் கூட சந்திக்கவில்லை. இருப்பினும், செப்டம்பர் 14 அன்று, அவர் உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்காக சென்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சிறப்பு … Read more

சொந்த நாட்டில் சிறுபான்மையினர் உரிமையை பாதுகாக்காத பாக்.,: இந்தியா பதிலடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, சொந்த நாட்டில் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்காமல், சர்வதேச அரங்கில் அமர்ந்து கொண்டு அதே சிறுபான்மையினர் உரிமையை பேசுவது வேடிக்கையாகும் என தெரிவித்துள்ளது. ஐ.நா., பொது சபை 77வது கூட்டம் நியூயார்க்கில் நடக்கிறது. இதில் கலந்து கொண்டு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியது: கடந்த 1947-ம் ஆண்டு முதல் இந்தியாவுடன் 3 … Read more

ஈரான் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம்: 8 நாட்களில் 50 பேர் பலி; பெண்கள் மீதான வன்முறை அதிகரிப்பு

தெஹ்ரான்: ஈரானில் கட்டாய ஹிஜாபுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து ஊடகங்கள், “ ஈரானில் கடந்த 8 நாட்களாக ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. ஈரானில் 80 நகரங்களில் கட்டாய ஹிஜாப்புக்கு எதிராக போராட்டம் இரவு பகலாக தொடர்கிறது. போராட்டத்தில் இளம் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் பங்கேற்றுள்ளனர். இதுவரை இப்போராட்டத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பாதுகாப்புப் பணியில் உள்ளவர்களும் அடக்கம்.போராட்டத்தை கட்டுப்படுத்த ஈரானில் இணைய சேவைகள் … Read more

கண்ணீருடன் விடை பெற்றார் பெடரர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: லேவர் கோப்பை டென்னிஸ் போட்டியில், தனது கடைசி போட்டியில் விளையாடிய சுவிட்சர்லாந்தின் பெடரர், கண்ணீருடன் விடை பெற்றார். இங்கிலாந்தின் லண்டனில், லேவர் கோப்பை டென்னிஸ் 5வது சீசன் நடக்கிறது. இதில் ஐரோப்பா, உலக அணிகள் மோதுகின்றன. ஐரோப்பா அணி சார்பில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ரபெல் நடால், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் ஆன்டி முர்ரே, கிரீசின் ஸ்டெபானஸ் டிசிட்சிபாஸ், நார்வேயின் காஸ்பர் ரூட் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். … Read more