தென் கொரிய எல்லையில் சுற்றியவட கொரிய போர் விமானங்கள்| Dinamalar

சியோல், தொடர்ந்து இரண்டு ஏவுகணை சோதனைகளை நடத்திய நிலையில், தென் கொரியாவுடனான எல்லை அருகே ஒரே நேரத்தில் 12 போர் விமானங்களை வட கொரியா அனுப்பியது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.கிழக்காசிய நாடுகளான வட கொரியா மற்றும் தென் கொரியாவுக்கு இடையே கடும் மோதல் உள்ளது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு உள்ளது. இதற்கிடையே, அணு ஆயுதங்களை வட கொரியா குவித்து வருவதற்கு தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.ஆனால், இதற்கெல்லாம் கவலைப்படாமல், … Read more

காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலி: இந்திய நிறுவனத்திடம் விசாரிக்க உலக சுகாதார அமைப்பு உத்தரவு

ஜெனீவா: ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலியான நிலையில் இந்திய மருந்து நிறுவனத் தயாரிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மெய்டன் ஃபார்மாசுட்டிகல்ஸ் என்ற இந்திய நிறுவனத்தின் தயாரிப்புகள் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கெட்டுபோன மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவைத் தவிர வேறு சில நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகியிருக்கலாம் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து … Read more

மெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு: 18 பேர் பலி| Dinamalar

மெக்சிகோ சிட்டி-வட அமெரிக்க நாடான மெக்சிகோவில், மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மேயர் உட்பட, 18 பேர் பலியாகினர். மெக்சிகோ நாட்டின் தென் மேற்கு பகுதியில் சான் மிகுவல் டோடோலபன் நகரம் உள்ளது. இங்கு போதை பொருள் கடத்தல் கும்பலின் ஆதிக்கம் நிலவுகிறது. இந்நிலையில், இங்குள்ள சிட்டி ஹால் என்ற கட்டடத்தின் மீது மர்ம நபர்கள் நேற்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அங்கு கூடியிருந்த மக்கள் சிதறி ஓடினர். இதில், 18 பேர் பலியானதாக போலீஸ் … Read more

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு

கலிஃபோர்னியா: அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் ஒன்று கலிஃபோர்னியாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அங்கு வாழும் இந்தியர்கள் அச்சம் மற்றும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் 8 மாதக் குழந்தை அரூஹி தேரி, அவரது பெற்றோர் ஜஸ்லீன் கவ்வுர் (27) அவரது கணவர் ஜஸ்தீப் சிங் (36), இவர்களது உறவினர் அமன்தீப் சிங் (39) ஆகியோர் வடக்கு கரோலினாவின் மெர்சட் கவுன்டியில் இருந்து கடத்தப்பட்டனர். இதனையடுத்து மெர்சட் கவுன்டி ஷெரீஃப் வெர்ன் வார்ன்கே உத்தரவின் … Read more

ஈரானை உலுக்கிய மற்றொரு இளம்பெண்ணின் மரணம்: அதிர்ச்சிப் பின்னணி

தெஹ்ரான்: ஈரான் பாதுகாப்புப் படையால் கொல்லப்பட்ட நிகா ஷாகாராமி எனும் இளம்பெண்ணின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஈரானில் கடந்த 20-ஆம் தேதி ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொள்ள சென்றிருந்தார் 16 வயதான இளம் ராப் பாடகரான நிகா ஷாகாராமி. இந்த நிலையில், நிகா ஈரான் பாதுகாப்புப் படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இதுகுறித்த தகவல் நிகாவின் குடும்பத்திற்கு தெரிவிக்கப்படவில்லை. கடைசி போன் அழைப்பில் நிகா தனது தோழியிடம் ”ஈரான் பாதுகாப்புப் படையினர் … Read more

ஈரான் பெண்கள் போராட்டம்… எம்பி செய்த செயலை பாருங்க!

இஸ்லாமிய மத கோட்பாடுகளை கடுமையாகப் பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் சிறுமிகள் ஹிஜாப் உடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் தாக்குதலில் சுயநினைவை இழந்த மாஷா என்ற இளம்பெண் கடந்த மாதம் உயிரிழந்தார். தெஹ்ரானில் நிகழ்ந்த இச்சம்பவம் உலகெங்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது, இக்கௌடூர சம்பவத்தை கண்டித்துஈரான் முழுவதும் பெண்கள் போராட்டம் வெடித்தது. ஹிஜாப்பை கழற்றி எறிந்தும், அதனை தீயிட்டு எரித்தும் பெண்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் பல்வேறு … Read more

நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம் | தாய்லாந்து துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் உள்பட 34 பேர் பலி

பேங்க்காக்: தாய்லாந்தில் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் உள்பட 34 பேர் உயிரிழந்தனர். நெஞ்சை உலுக்கும் இந்த துயரச் சம்பவம், தாய்லாந்தின் வட கிழக்கு மாகாணமான நாங் புவா லாம்புவின் தலைநகரில் நிகழ்ந்துள்ளது. காவல்துறையைச் சேர்ந்த முன்னாள் காவலரான பன்யா கம்ராப் என்பவர், குழந்தைகள் காப்பகத்திற்குள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதில், 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பெரியவர்கள் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இறுதியில், தாக்குதலில் … Read more

இலக்கிய நோபல் பரிசுக்கு பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் தேர்வு

ஸ்டாக்ஹோம்: இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தளரான ஆனி எர்னாக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும். ஒரு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.7.33 கோடி ரொக்கம் ஆகியவை நோபல் பரிசாக வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மருத்துவம், … Read more

இந்திய வம்சாவளி வாலிபர் குடும்பத்தோடு படுகொலை…அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!

இந்திய வம்சாவளியை சேர்ந்த வாலிபர் ஜஸ்தீப் சிங். 36 வயதான இவர் அமெரிககாவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த திங்கள்கிழமை இவர் தமது குடும்பத்துடன் மெர்சிட் கவுன்டி பகுதியில் உள்ள வணிக வளாகத்துக்கு சென்றிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அங்கு வந்த மர்ம நபர்கள் ஜஸ்தீப் சிங்கை குடும்பத்துடன் கடத்தினர். அமெரிக்கா முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். … Read more

பிரான்ஸ் எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஸ்டாக்ஹோம்: பிரான்சை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்சுக்கு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்த சேவையாற்றியோருக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது. உலகின் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசை, இந்தாண்டு பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில், இலக்கியத்திற்கான நோபல் பரிசு, பிரான்சை … Read more