உலக செய்திகள்
இம்ரான் கானுக்கு கைது வாரண்ட்| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: நீதிபதியை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்தது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் உதவியாளர் ஷாபாஸ் கில், தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமாபாத்தில் கடந்த ஆக. 20-ல் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான்கான், காவல்துறை அதிகாரிகள், தேர்தல் ஆணைய அதிகாரிகள், தனது அரசியல் எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யப் போவதாகவும், … Read more
ஈரானில் ஹிஜாப் அணியாமல் உணவகத்தில் சாப்பிட்ட இரு பெண்கள் கைது
தெஹ்ரான்: ஈரானில் உள்ள ஓர் உணவகத்தில் ஹிஜாப் அணியாமல் உணவு சாப்பிட்ட இரு இளம்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டோன்யாவும் அவரது நண்பரும் ஹிஜாப் அணியாமல் உணவகத்தில் உணவு சாப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களது செயலுக்கு விளக்கத்தையும் பாதுகாப்புப் படையினர் கேட்டுள்ளனர். இரு பெண்களும் எவின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் தலைநகர் தெஹ்ரானின் எவின் சிறைச்சாலை என்பது ஒரு மோசமான சிறையாக கருதப்படுகிறது. … Read more
“கல்வியைக் கொல்லாதீர்கள்” – ஆப்கன் தாக்குதலைக் குறிப்பிட்டு ரஷீத் கான் ட்வீட
காபூல்: ஆப்கனில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலைக் குறிப்பிட்டு “கல்வியைக் கொல்லாதீர்கள்” என்று கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் பதிவிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் காஜ் கல்வி நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.40-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். மேலும், உண்மையான பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. பலியானவர்களில் பெரும்பாலனவர்கள் தேர்வு எழுத காத்திருந்த மாணவிகள் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதல் குறித்து மாணவர் கூறும்போது, “எங்களுக்கு காலை … Read more
90s கிட்ஸ் தவிர்க்கவும் : 67 வயது ரோமியோவுக்கு 5ஆவது திருமணம் – 10 குழந்தைகள், 40 பேரக்குழந்தைகள்!
வாழ்க்கையில் பலருக்கும் ஒரு வாழ்க்கை துணையை தேர்வுசெய்வது என்பதே மிகவும் கடினமாக இருக்கிறது. அதுவும் தனக்கு ஏற்றவரை தேர்வுசெய்ய பலரும் தனது வாழ்க்கை முழுவதும் தேடி வருகின்றனர். ஆனால், பாகிஸ்தானைச் சேர்ந்த சௌகத் தனது 67 வயதில் ஐந்தாவது முறையாக திருமணம் செய்தது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது, அவருக்கு 10 குழந்தைகள், 40 பேரக்குழந்தைகள் என அவரது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 62 ஆக உள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதத்தில் பாகிஸ்தான் பெண் யூ-ட்யூபர் ஒருவர், … Read more
ஈரானில் வலுக்கும் போராட்டம்: காவல் நிலையம் மீது பயங்கர தாக்குதல்
ஈரான் சமீபத்திய செய்திகள்: ஹிஜாபிற்கு எதிராக நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், ஈரான் அரசு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் வெள்ளிக்கிழமை ஈரானில் ஒரு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்த வன்முறை சம்பவத்தில் இஸ்லாமிய புரட்சிக் காவலர் படையின் புலனாய்வுப் பிரிவின் தளபதி அலி மௌசவி உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தீவிரவாத தாக்குதல் என ஈரான் அரசு அறிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மாகாண ஆளுநர் ஹொசைன் மொடரேஸ் கியாபானி தெரிவித்துள்ளார். காவல் … Read more
ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தும் வடகொரியா: ஜப்பான் கடற்பகுதியில் இன்று 2 பாலிஸ்டிக் ஏவுகணைகள் சோதனை!
சியோல், வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராகும் வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தொடர்ந்து, பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா சோதித்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியது. வடகொரியா சனிக்கிழமை அன்று, இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்தது. என்று ஜப்பானின் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.அந்த இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலங்களுக்கு வெளியே … Read more
உக்ரைன் பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைப்பு – ஐ.நா. பொதுச் செயலாளர் கண்டனம்
நியூயார்க், உக்ரைனுடன் 7 மாதங்களுக்கு மேலாக போர் நீடித்துவரும் நிலையில் கைப்பற்றப்பட்ட 4 பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக மாஸ்கோவின் க்ரெம்லின் மாளிகையின் புனித ஜார்ஜ் அரங்கில் அதிபர் புதின் அறிவித்துள்ளார். உக்ரைனில் உள்ள டானட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய பகுதிகளை இணைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுளளது. இந்த பகுதிகளில் இதற்கு முன்பாக பொது வாக்கெடுப்பை ரஷியா நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உக்ரைனின் பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைக்கும் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். … Read more
சட்டவிரோத இணைப்பு விவகாரம் | ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா. வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா
நியூயார்க்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சட்டவிரோத இணைப்பு விவகாரம் குறித்து நடந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கைப்பற்றப்பட்ட லுஹான்ஸ்க் உள்ளிட்ட 4 நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று வாக்கெடுப்பு நடந்தது. இதனை இந்தியா புறக்கணித்துள்ளது. 15 உறுப்பு நாடுகள் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா மற்றும் அல்பேனியா நாடுகள் ரஷ்யாவுக்கு … Read more
மீண்டும் மிரட்ட வரும் புதிய வைரஸ் கோஸ்டா-2
ஜெனீவா, கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று, கிட்டத்தட்ட உலகளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் ஜிப்ரியேசிஸ் நேற்று முன்தினம் இதை மகிழ்ச்சியுடன் அறிவித்தார். ஆனால், கொரோனாவை போன்றே மனிதர்களை அச்சுறுத்தக் கூடிய புதிய வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு ‘கோஸ்டா-2’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. ரஷ்ய வவ்வால்களில் காணப்படும் இந்த வைரஸ், தற்போதுள்ள எந்த தடுப்பூசிக்கும் கட்டுப்படாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். இதனால், புதிய … Read more