31,000 ஆண்டுகளுக்கு முன்பு கால் நீக்கம் அறுவை சிகிச்சை? – ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் கால்கள் வெட்டப்பட்ட நிலையில் 31,000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக்கூடு ஒன்று கண்டுடெடுக்கப்பட்டுள்ளது. இந்த எலும்புக்கூடு ஆராய்ச்சியாளர்களுக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தோனேசியாவின் லியாங் டெபோ என்ற குகையில் இருந்து இந்த எலும்புக்கூட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த எலும்புக்கூடு இந்தோனேசியாவின் போர்னியோ தீவைச் சேர்ந்த இளைஞருடையது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதில் சுவாரசியம் என்னவென்றால், இந்த எலும்புக்கூட்டின் கால்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றபட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கால் நீக்கம் அறுவை சிகிச்சை என்பது இந்த … Read more