வலுக்கும் ஹிஜாப் போராட்டம்: இணையத்தை முடக்கிய ஈரான் – உதவிக்கரம் நீட்டிய எலான் மஸ்க்..!

தெஹ்ரான், ஈரானில் 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி கடந்த 13-ம் தேதி போலீசார் கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார். இச்சம்பவத்தை கண்டித்து ஈரானில் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். மாஷா அமினியின் சொந்த ஊரான சஹிஸ் நகரில் தொடங்கிய போராட்டம் மெல்ல மெல்ல நாட்டின் பிற பகுதிகளிலும் பரவத்தொடங்கியது. ஹிஜாப்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த பெண்கள் தங்கள் ஹிஜாப்பை கழற்றி எறிந்தும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும், தங்கள் தலைமுடியை … Read more

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா, பிரேசில் நாடுகளுக்கு ரஷ்யா ஆதரவு

வாஷிங்டன்: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா, பிரேசில் நாடுகள் நிரந்தர உறுப்பினராக ஆதரவு அளிப்பதாக ரஷ்யா தெரிவித்ததுள்ளது. ஐ.நா. பொதுச் சபையின் 77-வதுஆண்டுக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ் பேசியதாவது: ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மற்றும் பாதுகாப்புக் கவுன்சில் ஆகியவை சமகால உண்மைநிலவரங்களைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதன் … Read more

அதிபர் புடின் அறிவிப்பால் கலக்கம்| Dinamalar

மாஸ்கோ : ரஷ்யாவில் கட்டாயப்படுத்தி ராணுவத்தில் சேர்த்து விடுவர் என்ற பயத்தில், இளைஞர்கள் அண்டை நாடான ஜார்ஜியாவுக்கு தப்பி ஓடுகின்றனர். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது பிப்., 24ல் ரஷ்யா தாக்குதலை துவக்கியது. ஏழு மாதங்கள் ஆகியும் போர் நீடித்து வருகிறது. உக்ரைனும் மேற்கத்திய நாடுகள் உதவியுடன் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. ரஷ்யா கைப்பற்றிய பல பகுதிகளை மீட்டுள்ளது.இதனால், உக்ரைனை முழுமையாக கைப்பற்ற திட்டமிட்ட ரஷ்யாவின் கனவு நனவாவதில் சறுக்கல் ஏற்பட்டுள்ளது. உக்ரைனை கைப்பற்றும் … Read more

தென் கொரியாவில் அமெரிக்க போர் கப்பல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சியோல் : வட கொரியா நேற்று ஏவுகணை சோதனை நடத்தியதால், கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவுகிறது. ஐ.நா., சபையின் தடை மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, வட கொரியா தொடர்ந்து பல்வேறு ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.இதற்கிடையே ராணுவப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பல், சமீபத்தில் தென் கொரியாவை வந்தடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த வட கொரியா, நேற்று ஏவுகணை சோதனையை நடத்தி பதிலடி … Read more

ஸ்பெயின் பிரதமருக்கு கொரோனா| Dinamalar

மாட்ரிட் : ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்ஷே, கடந்த வாரம் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா., பொதுசபை கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பின், அவர் இம்மாதம் 23ம் தேதி நாடு திரும்பினார். இந்நிலையில், நேற்று சோசலிஸ்ட் கட்சி சம்பந்தமான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக இருந்தார். ஆனால், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, அவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ரத்து செய்தார். “தகுந்த முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டு, எனது பணியை தொடருவேன்,” என, அவர் சமூக வலைதளத்தில் நேற்று … Read more

6.4 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ..! – இந்தோனேசியாவில் மக்கள் பீதி..!

இந்தோனேசியா நாட்டின் மேற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டது . இந்தோனேசியா நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கம் அல்லது பூகம்பம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்படும் போது, தளத்தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இதனை டெக்டோனிக் தட்டுகள் என்று கூறலாம். இந்த அதிர்வுகள் ரிக்டர் அளவு நிலநடுக்கமானியினால்அளக்கப்படுகிறது. அந்த வகையில் அதிர்வுகள் 3 ரிக்டருக்கும் குறைவாக … Read more

வங்கதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து..! – 23 பேர் பலியான சோகம்..!

வங்கதேசம் அருகே ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். வங்கதேசத்தின் வடக்கு மாவட்டமான பஞ்சகர் எனும் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த படகு கவிழ்ந்ததில் சுமார் 23 பேர் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. மேலும் பல பலி எண்ணிக்கை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்பகுதியில் ஆயிரக் கணக்கான மக்கள் சூழ்ந்தனர். பிறகு நீச்சல் குழுவினர் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிக சுமை மற்றும் படகில் … Read more

ஜப்பான் பிரதமர் அபேவின் நினைவு நிகழ்ச்சி ..! – பிரதமர் மோடி பங்கேற்பு ..!

ஷின்ஜோ அபே நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் 27-ம் தேதி பிரதமர் மோடி ஜப்பான் செல்கிறார். ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே கடந்த ஜூலை 8ம் தேதி அன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது டெட்சுய யமகாமி என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார் . இச்சம்பாவம் ஜப்பான் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஜப்பான் நாட்டில் நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர் ஷின்ஜோ அபே என்பது குறிப்பிடத்தக்கது. ஷின்ஜோ அபேயின் இறுதிச்சடங்கு 12-ந் தேதி டோக்கியோவில் நடந்தது. … Read more

கணவனை கவனித்துக் கொள்ள பெண்கள் தேவை… அதிசய மனைவியின் அசத்தல் விளம்பரம்!

இரண்டு மனைவி கான்செப்ட்… மனைவியே தமது கணவனுக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைப்பது… இதுவெல்லாம் சினிமாவில் தான் நடக்கும்…. நிஜவாழ்வில் நிகழ சாத்தியமில்லை என்ற உலகளாவிய கூற்றை தகர்த்தெறிந்துள்ளார் தாய்லாந்தை சேர்ந்த பதீமா சாம்னன் என்ற பெண்மணி. 44 வயதாகும் இந்த பெண் அண்மையில் விளம்பர வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். உலக அளவில் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தி உள்ள அந்த விளம்பரத்தில், ‘என்னுடைய கணவரை சிறப்பாக கவனித்து கொள்ள மூன்று பெண்கள் தேவை. … Read more

குப்பையாய் செவ்வாய்| Dinamalar

செவ்வாய் கோள் ஏற்கனவே விண்வெளி குப்பையாகி விட்டது என அமெரிக்க ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. சூரிய குடும்பத்தில் ஒன்றான செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் பணி 1960ல் இருந்து துவங்கியது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி மையம், இந்தியா, யு.ஏ.இ., சீனா ஆகிய நாடுகள் விண்கலத்தை செலுத்தியுள்ளன. இதுவரை செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட ரோவர், ஆர்பிட்டர்களின் எடை, தற்போது அங்கு செயல்படும் ரோவர், ஆர்பிட்டர்களின் எடையுடன் ஒப்பிடப்பட்டது. இதில் இதுவரை 7118 கிலோ விண்வெளி குப்பை செவ்வாயில் விடப்பட்டுள்ளன என … Read more