ஆப்கானிஸ்தானில் ரஷ்ய தூதரகத்திற்கு அருகே குண்டுவெடிப்பு.. அதிகாரிகள் உட்பட 20 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு அருகே நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் தூதரக அதிகாரிகள் இருவர் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர். Darulaman சாலையில் உள்ள தூதரகத்திற்கு வெளியே விசா பெற பலர் காத்திருந்த நிலையில், தூதரக அதிகாரி ஒருவர் விண்ணப்பதாரர்களின் பெயர்களை கூற வெளியே வந்த போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தூதரகத்தின் நுழைவாயில் அருகே தற்கொலைப்படை தாக்குதல் நடத்த வந்த பயங்கரவாதி குண்டுகளை வெடிக்கச் செய்ததாவும், அந்த நபர் நுழைவாயிலை நெருங்கிய போது ஆயுதமேந்திய காவலர்களால் … Read more

குரல் பதிவு மூலம் கொரோனாவை துல்லியமாக கண்டறியும் செல்போன் செயலி; விஞ்ஞானிகள் சாதனை

செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் இந்த செயலி நோயாளிகளின் குரல் பதிவு மூலம் தொற்றை உறுதி செய்யும். அதாவது குறிப்பிட்ட நபரின் மருத்துவ வரலாறு, புகைபிடிக்கும் நிலை போன்ற சில அடிப்படை தகவல்களை பதிவு செய்து, பின்னர் அவர்களின் சில சுவாச ஒலிகளையும் பதிவு செய்ய வேண்டும். அதன்படி மூன்று முறை இருமல், மூன்று முதல் ஐந்து முறை வாய் வழியாக ஆழமாக சுவாசித்தல் மற்றும் திரையில் ஒரு சிறிய வாக்கியத்தை மூன்று முறை வாசிப்பது ஆகியவை … Read more

பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை, வெள்ளம்; பலி எண்ணிக்கை 1,325 ஆக உயர்வு

லாகூர், பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூலை தொடங்கிய பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதேபோல், இமயமலையில் பனிப்பாறை உருகி வருகிறது. இதன் காரணமாக நாட்டில் பல்வேறு நகரங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 3-ல் 1 பங்கு தண்ணீரில் மூழ்கியுள்ளதாக பாகிஸ்தான் பருவநிலைமாற்ற மந்திரி தெரிவித்துள்ளார். இந்நிலையில், பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,325 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளம், கனமழை காரணமாக … Read more

கொளுந்து விட்டு எரிந்த உணவகத்தில் சிக்கிக்கொண்ட பூனைக்குட்டியை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்!

ரஷ்ய வான் தாக்குதலால் கொளுந்து விட்டு எரிந்த உணவகத்தில் சிக்கிக்கொண்ட பூனைக்குட்டியை உக்ரைன் நாட்டு தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ரஷ்ய படைகள் ராக்கெட் ஏவுகணை வீசி தாக்கியதில் கார்கீவ் நகரில் சுமார் 24,000 சதுரடி பரப்பளவிலான கட்டிடங்கள் தீக்கிரையாகின. அங்குள்ள உணவகத்தில், நெருப்புக்கு அஞ்சி இரும்பு சேர்களுக்கு அடியில் பதுங்கி கொண்ட பூனை குட்டியை தீயணைப்புத்துறையினர் மீட்டு தண்ணீரில் குளிப்பாட்டினர். Source link

பிரிட்டன் உள்துறை செயலர் ப்ரீத்தி பட்டேல் விலகல்| Dinamalar

லண்டன்: பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு பெற்றதையடுத்து அந்நாட்டு உள்துறை செயலர் ப்ரீத்தி பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், பல்வேறு புகார்களுக்கு பின் பதவி விலகினார். அந்நாட்டு பிரதமராக வருபவர் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். இதற்காக நடந்த தேர்தலில் இந்திய வம்சாவளியின் ரிஷி சுனாக்கும், லிஸ் டிரஸ்சும் போட்டியிட்டனர்.இதில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்று பிரிட்டன் பிரதமராக தேர்வு பெற்றார். … Read more

பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு: உள்துறை அமைச்சர் பிரித்தி படேல் பதவி விலகினார்

லண்டன்: பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வாகி உள்ளார். இந்நிலையில், உள்துறை அமைச்சர் பிரித்தி படேல் பதவி விலகி உள்ளார். அதோடு லிஸ் டிரஸ் அமைச்சரவையில் தான் பங்கேற்க போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பிரித்தி படேல் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். பிரிட்டன் அமைச்சரவையின் மூத்த அமைச்சர்களில் அவர் ஒருவராக இருந்தார். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். போரிஸ் ஜான்சனின் நெருங்கிய வட்டாரத்தில் பிரித்தியும் ஒருவர். “நாட்டுக்காக மக்கள் … Read more

அமெரிக்காவில் மிதவை விமானம் விழுந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு.. காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்!

அமெரிக்காவின் வடக்கு சியாட்டல் பகுதியில் மிதவை விமானம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், காணாமல் போன குழந்தை உள்பட 9 பேரை ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் தேடும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். வாஷிங்டன் துறைமுகத்தில் இருந்து சியாட்டல் டகோமா சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று மாலை புறப்பட்ட மிதவை விமானம் Mutiny என்ற இடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.  Source link

இந்திய ராணுவ தளபதிக்கு நேபாளத்தில் கவுரவம்| Dinamalar

காத்மாண்டு இந்திய ராணுவ தளபதிக்கு, நேபாள நாட்டின் கவுரவ ராணுவ தளபதி பட்டம் வழங்கப்பட்டது. நம் ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக நம் அண்டை நாடான நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு வந்தார். இங்கு, இரு நாடுகளுக்கும் இடையேயான ராணுவ ஒத்துழைப்பு குறித்து நேபாள ராணுவ உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்துகிறார். இதையடுத்து, அந்நாட்டின் பிரதமர் பித்யா தேவி பண்டாரியாவை அவரது மாளிகையில் சந்தித்தார். அப்போது, மனோஜ் பாண்டேவுக்கு, நேபாள … Read more

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 46 பேர் பலி| Dinamalar

பீய்ஜிங்: சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 46 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் தென்மேற்கே சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சி பகுதி உள்ளது. இங்கு லூடிங் கவுன்டி பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தையடுத்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. நில சரிவுகள் ஏற்பட்டு. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு … Read more

பிரிட்டனின் அடுத்த பிரதமர் லிஸ் டிரஸ்; வீழ்த்தப்பட்டார் ரிஷி சுனக்

லண்டன்: பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை வீழ்த்திய லிஸ் டிரஸ், அந்நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரிட்டன் பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பதவி வகிக்கிறார். இவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் மற்றும் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்று வந்தன. பிரிட்டன் பிரதமருக்கான … Read more