பசில் ராஜபக்சே வெளிநாடு செல்ல இலங்கை உச்சநீதிமன்றம் அனுமதி..

இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி வரை வெளிநாடு செல்ல அந்நாட்டு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே உள்ளிட்ட 3 பேர், நாட்டை விட்டு வெளியேற விதிக்கப்பட்ட தடை செப்டம்பர் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காக வெளிநாடு செல்ல பசில் ராஜபக்சே தரப்பில் அனுமதி கோரப்பட்ட நிலையில், நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  Source … Read more

செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜனை உருவாக்கிக் காட்டிய MOXIE! செவ்வாயில் மனிதர்கள்?

செவ்வாய் கிரகத்தில் நிச்சயமாக ஒரு வளிமண்டலம் இருந்தாலும், அது மிகவும் மெல்லியதாக இருக்கிறது. பூமியின் வளிமண்டலத்தை விட 100 மடங்கு மெல்லியதான வளிமண்டலத்தைக் கொண்டது செவ்வாய் கிரகம். அதிலும், அங்குள்ள வாயுக்களில் கார்பன் டை ஆக்சைடு அதிகமாக உள்ளது. எனவே செவ்வாய் கிரகத்திற்கு சென்றால், இயற்கையாக காற்றை சுவாசிக்க முயன்றால், விரைவில் மரணம் நேரிடும். பூமியின் அண்டை நாடாகவும், பூமிக்கு அப்பாற்பட்ட உயிரினங்களைத் தேடும் விஞ்ஞானிகளின் விருப்பமான கிரகமாகவும் செவ்வாய் கோள் உள்ளது. செவ்வாய் கிரகம் தோராயமாக … Read more

வெள்ளம் சூழ்ந்த பாகிஸ்தான் – நாசா வெளியிட்ட புகைப்படமும் பின்னணியும்

இஸ்லமாபாத்: கனமழை – வெள்ளப் பெருக்கு காரணமாக வரலாறு காணாத இயற்கைப் பேரிடர் துயரத்தை பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ளது. பாகிஸ்தான் வெள்ளப் பெருக்கில் இதுவரை 1200 பேர் பலியாகியுள்ளனர். 3,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 3 கோடிக்கு அதிகமான மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இத்துடன் வீடு இழப்பு, நோய்த் தொற்றை பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த வெள்ளத்தினால் சுமார் 10 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. மேலும், பொருளாதார … Read more

அர்ஜென்டினா துணை அதிபரை துப்பாக்கியால் சுட முயற்சி: நூழிலையில் தப்பினார்!

அர்ஜென்டினா நாட்டின் துணை அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டாஸ் கிர்ச்னரை கொல்ல முயற்சி நடந்ததாக அந்நாட்டு அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார். ஒரு நபர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட வந்தாகவும், ஆனால் திடீரென துப்பாக்கி பழுதானதால் கிறிஸ்டினா உயிர் பிழைத்தார் என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது வெளிப்படையான படுகொலை முயற்சி என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. உள்ளூர் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சியில், கிறிஸ்டினா பெர்னாண்டாஸ் கிர்ச்னர் தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த … Read more

தேர்தல் முறைகேடு வழக்கு: ஆங் சான் சூகிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை!

தேர்தல் முறைகேடு வழக்கில் ஆங் சான் சூகிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. எனினும், தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாட்டு ராணுவம், … Read more

தேர்தல் முறைகேடு : மியான்மர் முன்னாள் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகிக்கு 3 ஆண்டுகள் சிறை..

தேர்தலில் முறைகேடு என இராணுவம் குற்றம்சாட்டும் வழக்கில் மியான்மர் முன்னாள் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடித்தது. அரசின் ஆலோசகராக ஆங் சான் சூகி பதவி வகித்தார். தேர்தலில் மோசடி நடைபெற்றதாகக் கூறி 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆட்சியை கவிழ்த்து ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. 4 வழக்குகளில் … Read more

பிரிட்டன் பிரதமர் ஆகிறார் லிஸ் டிரஸ் – வரும் 5ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக, லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டன் நாட்டின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தனது பதவியை ராஜினாமா செய்தார். இதை அடுத்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், ஏராளமானோர் போட்டியிட்ட நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக், வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் டிரஸ் ஆகியோர் இறுதி கட்டத்திற்கு சென்றனர். இதை அடுத்து, … Read more

பிரிட்டன் பிரதமர் தேர்தல் | இறுதிக்கட்டத்தை எட்டியது வாக்குப்பதிவு: வெற்றி யாருக்கு?

லண்டன்: பிரிட்டன் பிரதமருக்கான தேர்தல் பிரச்சாரம் 6 வாரங்களாக நடந்த நிலையில் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. பிரிட்டன் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019-ஆம் ஆண்டு பதவியேற்றார். அவருக்கு சொந்தக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். பிரிட்டன் அரசியலமைப்பு சட்டப்படி, ஆளும் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் பதவியேற்பார். அந்த வகையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் பிரச்சாரம் கடந்த … Read more

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த HIP 65426இன் புதிய படங்களை வெளியிட்ட நாசா!

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே ஒரு கிரகத்தின் முதல் நேரடி படத்தை படம் பிடித்துள்ளது. இது வியாழனை விட 6 முதல் 12 மடங்கு நிறை கொண்டது என்று தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகம் நாசா தெரிவித்துள்ளது. ஜேம்ஸ் வெப் எடுத்துள்ள இந்த புகைப்படங்கள், வேறும் பல உண்மைகளை வெளிகொண்டு வரும் என்பதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாகவும், இன்னும் சக மதிப்பாய்வு செயல்முறை மூலம் வரவில்லை என்றும் அமெரிக்க விண்வெளி … Read more

மோடிக்கு எதிரா கேஸ் போட்ட அமெரிக்க டாக்டர்… கடைசியில இப்படி ஆகிடுச்சே!

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ரிச்மண்ட் நகரைச் சேர்ந்த லோகேஷ் வய்யுரு, இந்திய வம்சாவளி டாக்டர். குறிப்பாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இரைப்பை குடல் சிகிச்சை பிரிவில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரம் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்ன வழக்கு, அதிரவைக்கும் அளவிற்கு என்னென்ன குற்றச்சாட்டுகள் போன்ற விஷயங்கள் பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதாவது, பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தொழிலதிபர் அதானி, … Read more