8K அல்ட்ரா ஹெச்டியில் காட்சியளிக்கும் டைட்டானிக் கப்பலின் எச்சங்கள்

110 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் எச்சங்கள் 8 கே அல்ட்ரா ஹெச் டி தரத்தில் அதன் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. 1912-ஆம் ஆண்டு ஏப்ரல் 14 மற்றும் 15ந் தேதிக்கு இடைப்பட்ட இரவில் டைட்டானிக் கப்பல் புறப்பட்ட மூன்றே மணிநேரத்தில் பனிப்பாறை மீது மோதி கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் சுமார் 1500 பேர் உயிரிழந்தனர். 110 ஆண்டுகள் கடந்த பின்னரும் இது மிகப்பெரிய கடல் விபத்தாக கருதப்படுகிறது. … Read more

வீட்டில் தனியாக இருந்த பெண்னை கழுத்தை நெரித்து கொலை செய்து நகைகளை கொள்ளை அடித்து சென்ற இளைஞர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து நகைகளை கொள்ளை அடித்த இளைஞர் கைது செய்யப்பட்டார். கோனாப்பட்டு கிராமம்  புதுமனை ஆரோக்கியபுரத்தை சேர்ந்த வசந்தா என்ற பெண் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் கடந்த 17ம் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு சிவக்குமார் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் 6 மாதத்திற்கு முன்பு … Read more

தேனீக்களால் 20,000 முறை கொட்டப்பட்ட அமெரிக்க இளைஞர் கோமாவில் இருந்து மீண்டார்

வாஷிங்டன்: அமெரிக்காவில் தேனீக்களால் 20,000 முறை கொட்டப்பட்ட இளைஞர் கோமா நிலைக்கு சென்றார். ஒரு வாரத்துக்குப் பிறகு கோமாவில் இருந்து அவர் மீண்டுள்ளார். அமெரிக்காவின் ஒகையோ மாகாணம், ரிப்ளி பகுதியை சேர்ந்தவர் ஆஸ்டின் (20). கடந்த வாரம் இவர் தனது வீட்டு தோட்டத்தில் எலுமிச்சை மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது அந்த மரத்தில் இருந்த மிகப்பெரிய தேனீ கூடு கலைந்தது. ஆயிரக்கணக்கான தேனீக்கள் ஆஸ்டினை சூழ்ந்து கொட்டின. சுமார் 20,000 முறை தேனீக்களால் கொட்டப்பட்டதால் மயங்கி … Read more

இந்திய கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவம் எதிரொலி – போர்ச்சுகல் அமைச்சர் ராஜினாமா

லிஸ்பன்: போர்சுக்கல் நாட்டுக்கு சுற்றுலா சென்ற இந்திய கர்ப்பிணிப் பெண் மருத்துவ வசதி குறைபாடுகளால் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் மார்த்தா டெமிடோ செவ்வாய்க்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து ஊடகங்கள் தெரிவிப்பதாவது: போர்ச்சுகலுக்கு சுற்றுலா வந்த இந்திய கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தலைநகர் லிஸ்பனில் உள்ள சாண்டா மரியா மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அந்த மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்கான போதிய … Read more

மிகப்பெரிய எண்ணெய் நிறுவனத்தின் உரிமையாளர் மர்மமான முறையில் உயிரிழப்பு..!

ரஷ்ய எண்ணெய் நிறுவன உரிமையாளர் ரவில் மகனோவ் மருத்துவமனையின் ஆறாவது மாடி ஜன்னலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை அவருடைய நிறுவனம் எதிர்ப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 67 வயதான இவர் மாஸ்கோவின் மத்திய மருத்துவ மருத்துவமனையில் ஆறாவது மாடியின் ஜன்னலில் இருந்து திடீரென கீழே விழுந்து இறந்து கிடந்தார். கிரெம்ளின் கிளினிக்’ என்று அழைக்கப்படும் மருத்துவமனையில், இதய நோய்க்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும், மன உளைச்சலில் இருந்ததாகவும் … Read more

ஐ.நா. தீர்மானத்தை புறக்கணிக்கும் துருக்கிக்கு இந்தியா கண்டனம்

புதுடெல்லி: லிபியா தொடர்பான ஐ.நா. தீர்மானத்தை புறக்கணித்து வரும் துருக்கிக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ருஷிரா காம்போஜ் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியதைத் தொடர்ந்து அந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வருகிறது. இது, இருநாட்டு உறவில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. லிபியா தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கொண்டு வரும் தீர்மானங்களில் துருக்கி காட்டி வரும் அப்பட்டமான அலட்சியம் மிகவும் கண்டிக்கத்தக்கது. … Read more

சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கு: இலங்கையை சேர்ந்தவரின் தமிழக சொத்துகள் முடக்கம்

புதுடெல்லி, இலங்கையை சேர்ந்தவர் குணசேகரன் என்ற பெரமா குமார். போதைப்பொருள் கடத்திய வழக்கில் கடந்த 2011-ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஒரு தனி கோர்ட்டு, குணசேகரனுக்கும், வேறு சிலருக்கும் சிறைத்தண்டனை விதித்தது. தண்டனை காலம் முடிந்தவுடன், அவர்கள் தங்களது அடையாளத்தை மாற்றிக்கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர். குணசேகரனும், அவருடைய மகன் திலீப்பும் போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்தனர். தமிழ்நாட்டில் சொத்துகளும் வாங்கினர். இந்தநிலையில், அவர்கள் மீது அமலாக்கத்துறை, சட்டவிரோத பண … Read more

உய்குர் முஸ்லிம்களை சித்ரவதை செய்யும் சீனா – ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் குற்றச்சாட்டு

ஜெனீவா: உய்குர் முஸ்லிம்களை சீன அரசு சித்ரவதை செய்வதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. சீனாவின் வடமேற்கில் ஜின்ஜியாங் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உய்குர் இனத்தை சேர்ந்த சுமார் 1.2 கோடி முஸ்லிம்கள் வசிக்கின்றனர். கடந்த 20-ம் நூற்றாண்டில் ஜின் ஜியாங் பகுதி சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 1949-ம் ஆண்டில் சீன ராணுவம் ஜின்ஜியாங்கை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அப்போது முதலே சீன ராணுவத்தை எதிர்த்து உய்குர் முஸ்லிம்கள் … Read more

சீனாவில் புதிதாக 2,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 1,818 பேருக்கு … Read more

இந்தியாவில் இருந்து உணவுப் பொருள் இறக்குமதி – பாகிஸ்தான் அரசு திட்டம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் முன்னெப் போதும் இல்லாத வகையில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழையால் அந்நாட்டின் மூன்றில் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் 3 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்துக்கு இதுவரை 1,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. விளைநிலங்களில் பயிர்கள் அழிந்ததால் தானியங்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பற்றாக்குறையும் அதனால் … Read more