அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தல் முடிவு : எதிர்க்கட்சி பெண் தலைவர் சாராபாலின் தோல்வி

வாஷிங்டன், அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபையில் அலாஸ்கா மாகாணத்தில் இருந்து எம்.பி.யாக இருந்து வந்த டான் யெங் கடந்த மார்ச் மாதம் மரணம் அடைந்தார். இதனால் அங்கு கடந்த 16-ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது. அதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் மேரி பெல்டோலாவும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான பெண் தலைவர் சாரா பாலினும் போட்டியிட்டார். இவர் அலாஸ்கா மாகாணத்தின் கவர்னராக இருந்தவர். 2008-ம் ஆண்டு துணை ஜனாதிபதி பதவிக்கு ஜான் … Read more

விண்வெளியில் அரிசி சாகுபடிசீன விஞ்ஞானிகள் சாதனை| Dinamalar

பீஜிங்:விண்வெளி நிலைய ஆய்வகத்தில் நெற்பயிரை வளர்த்து, சீனா சாதனை படைத்துள்ளது. விண்வெளியின் சுற்று வட்ட பாதையில் நிரந்தர விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்கும் திட்டத்துடன் சீனா பணியாற்றி வருகிறது. இந்நிலையில், சீன விண்வெளி நிலையத்தின், ஆய்வகத்தில் விதைகளை கொண்டு நெற்பயிர்களை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். கடந்த ஜூலையில் தொடங்கிய இதற்கான பணிகளில், இரு வகை நெற்பயிர் விதைகளை அவர்கள் பயன்படுத்தினர். இதில், நெற்பயிர் 30 செ.மீ., உயரத்திற்கு வளர்ந்து விஞ்ஞானிகளை ஆச்சரியமடைய செய்து உள்ளது. விண்வெளியில் … Read more

அமெரிக்காவில் 2-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.6% சரிவு

வாஷிங்டன், அமெரிக்காவின் வணிக அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2022-ம் ஆண்டின் ஜூன் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி 0.6 சதவீதம் என்ற அளவில் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்த தனியார் பங்கு முதலீடு, பலவீனமான குடியிருப்பு அல்லாத நிலையான முதலீடு மற்றும் மத்திய அரசு மற்றும் உள்ளூர் மற்றும் மாநில அரசாங்கங்களின் குறைந்த செலவினம் ஆகியவையே இந்த சரிவுக்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. அதே சமயம் அங்கு நுகர்வு செலவுகள் … Read more

அபிதாபியில் ஹிந்து கோவில் அமைச்சர் ஜெய்சங்கர் புகழாரம்| Dinamalar

அபுதாபி: ”ஐக்கிய அரபு எமிரேட்சில் கட்டப்பட்டு வரும் ஹிந்து கோவில், அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான சின்னம்,” என, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் புகழ்ந்துள்ளார். மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில், முதல் ஹிந்து கோவில் கட்டுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஏராளமான இந்தியர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், அங்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், அந்த கோவில் கட்டுமானத்தை பார்வையிட்டார். இது குறித்து அவர் … Read more

கடல் வளத்தை பாதுகாக்க நடவடிக்கை – உலக வர்த்தக அமைப்பு உறுதி

ஜெனீவா, சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனீவாவில் உலக வர்த்தக அமைப்பின் 12-வது மந்திரிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கடலில் மீன்வளத்தை பெருக்கும் வகையில் மீன்பிடித்தலை கட்டுப்படுத்தி கடல் வளத்தை உறுதி செய்வது தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டது. நீடித்த வளர்ச்சி இலக்கிற்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உடன்பாடாக கருதப்படுகிறது. மீன்பிடித்தல் சலுகை தொடர்பான பேச்சுவார்த்தைகள் நீண்ட காலத்திற்கு மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் குறித்து உலக வர்த்தக அமைப்பின் துணை பொதுச்செயலாளர் ஷியாங்சென் சாங் விளக்கினார். மீன்பிடித்தல் … Read more

இன்று உலக தேங்காய் தினம்| Dinamalar

தாயைப் போல தாராள குணம் கொண்டது தென்னை. அடி முதல் நுனி வரை அத்தனை உறுப்பும் மனிதனுக்கு தேவைப்படுகிறது. இந்தத் தென்னை குறித்த விழிப்புணர்வுக்காக செப்.2 ல் ‘உலக தேங்காய் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. ஆசியா முழுவதும் தென்னை பரவலாக இருந்தாலும், இலங்கை, இந்தியாவில் குறிப்பாக தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளாவில் அதிகம் சாகுபடியாகிறது. பாதாம், முந்திரி, பிஸ்தாவுக்கு இணையான ஊட்டச்சத்து தேங்காயில் உள்ளது. ஐந்து ஆண்டுகளில் மகசூல் தரக்கூடியது. அறுபது ஆண்டுகள் வாழும். தேங்காய் விளைச்சலில் உலகில் … Read more

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் பிரதமரின் மனைவிக்கு பத்தாண்டு சிறை

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் முதல் பெண்மணிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அவரது மனைவி ரோஸ்மா மன்சோருக்கு பத்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  தம்பதியருக்கு சொந்தமான சொத்துகளில் 12,000 தனிப்பட்ட நகைகள், 567 ஆடம்பர கைப்பைகள், 423 கைக்கடிகாரங்கள் மற்றும் 26 மில்லியன் டாலர் ரொக்கம் ஆகியவற்றை … Read more

பிரதமர் மோடிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் மனு| Dinamalar

வாஷிங்டன்:பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தொழிலதிபர் கவுதம் அதானி ஆகியோர் மீது, இந்திய வம்சாவளி டாக்டர் ஒருவர் அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு தொடுத்துள்ளார். பணப்பரிமாற்றம் அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ரிச்மாண்ட் நகரில் வசித்து வரும் இந்திய வம்சாவளி டாக்டர் லோகேஷ் வய்யுரு. இவர் இரைப்பை குடல் நிபுணராக பணியாற்றி வருகிறார். அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் இவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதன் விபரம்: இந்திய பிரதமர் மோடி, … Read more

அமெரிக்காவில் ஹிந்துவை அவமதித்த இந்தியர் கைது| Dinamalar

நியூயார்க்:அமெரிக்காவில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த ஹிந்துவை, அவமதிக்கும் வகையில் நடந்த மற்றொரு இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பெர்மான்ட் பகுதியில் வசிக்கும், இந்திய வம்சாவளியான கிருஷ்ணன் ஜெயராமன், சமீபத்தில் அங்குள்ள உணவகத்துக்கு சென்றுள்ளார்.அப்போது, அங்கிருந்த இந்தியரான தெஜிந்தர் சிங் என்பவர், கிருஷ்ணன் ஜெயராமனை அசைவ உணவு சாப்பிடும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு, கிருஷ்ணன் ஜெயராமன் மறுத்துள்ளார். இதைத் தொடர்ந்து, தெஜிந்தர் சிங் அவரை தாறுமாறாக திட்டியுள்ளார். ஹிந்து மதம் குறித்தும் அவதுாறாக பேசிய அவர், கிருஷ்ணன் ஜெயராமன் … Read more

உய்கர் முஸ்லிம்கள் சித்ரவதை சீனா மீது ஐ.நா., குற்றச்சாட்டு| Dinamalar

ஜெனீவா:’சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில், உய்கர் முஸ்லிம்கள் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்துள்ளது, மனித குலத்துக்கு எதிரான குற்றம்’ என, ஐ.நா.,வின் மனித உரிமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.நம் அண்டை நாடான சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில், உய்கர் முஸ்லிம் பழங்குடியின மக்கள், முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகின. இதற்கு, அமெரிக்கா உட்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன.ஆனால், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே, ஐ.நா.,வின் மனித உரிமை … Read more