பாடகர் மைக்கேல் ஜாக்சனை கொன்றது யார்? ஆவணப்படம் வெளிப்படுத்தும் போலி ஐடிக்கள்

வாஷிங்டன்: ‘கிங் ஆஃப் பாப்’ என்று அனைவராலும் கொண்டாடப்பட்ட பாப் இசையில் அரசன் மைக்கேல் ஜாக்சன் தனது வாழ்நாளின் பெரும்பகுதி முழுவதும் ஆபத்தான அளவுகளில் போதைப்பொருட்களை உட்கொண்டதாக புதிதாக வெளியான ஆவணப்படம் தெரிவிக்கிறது. 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் மைக்கேல் ஜாக்சனின் திடீர் மரணம் உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, இப்போது ஒரு புதிய ஆவணப்படம் அவர் போதைப்பொருள் மதிப்பெண் பெற 19 போலி ஐடிகளைப் பயன்படுத்தியதாகக் கூறுகிறது. 50 வயதில் மரணத்தை தழுவிய மைக்கேல் ஜாக்சன், அவரது லாஸ் ஏஞ்சல்ஸ் … Read more

ஊட்டசத்து குறைப்பாட்டால் குழந்தை உயிரிழப்பு: அமெரிக்காவில் ‘வீகன்’ தாய்க்கு ஆயுள் தண்டனை

வாஷிங்டன்: அமெரிக்காவில் ’வீகன்’ உணவு முறையை அதி தீவிரமாக பின்பற்றியதன் விளைவாக, ஊட்டசத்து குறைபாட்டால் குழந்தை மரணித்த வழக்கில் தாய்க்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஷீலா ஓ லெரி, ரைய் இந்த தம்பதிக்கு நான்கு குழந்தைகள். ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கோரலில் வசித்த இந்த தம்பதியினர் கடந்த சில ஆண்டுகளாகவே வீகன் உணவுப் பழக்கத்தை குடும்பத்தில் கடுமையாக நடைமுறைப்படுத்தி வந்துள்ளனர். தங்களுடைய கடைசி குழந்தைக்கு தாய்ப்பாலை ஊட்டினாலும், பச்சைப் பழங்கள், பச்சை காய்கறிகளையே உணவாக அளித்துள்ளனர். … Read more

இந்தியாவில் இருந்து உணவுப் பொருட்களைஇறக்குமதி செய்ய பாகிஸ்தான் முடிவு..! – நெருக்கடிக்கு காரணம் இதுதான்..!

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பினால் அங்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து உணவுப் பொருட்களைஇறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளதாக, பாகிஸ்தான் நாட்டு நிதி அமைச்சர் அறிவித்துள்ளார் பாகிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் காரணமாக அங்கு உற்பத்தியானது பெரும் சேதம் கண்டுள்ளது. ஏற்கனவே அங்கு விலைவாசியானது கடும் உச்சத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது வெள்ளத்தால் இன்னும் கடுமையான சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையில் பாகிஸ்தான் அரசு விலைவாசியினை கட்டுக்குள் கொண்டு வர, தக்காளி மற்றும் … Read more

குட்டிகளை திருட வந்தவரை தாக்கி கொன்ற சிங்கம்: கானா உயிரியல் பூங்காவுக்கு வர மக்களுக்கு தடை

அக்ரா: கானாவில் உயிரியல் பூங்கா ஒன்றில் தனது குட்டிகளை திருட முயன்ற நபரை சிங்கம் ஒன்று கொன்ற நிகழ்வு நடந்துள்ளது. ஆப்பிரிக்க நாடான கானாவில் உள்ளது அக்ரா உயிரியல் பூங்கா. இந்தப் பூங்காவில் திங்கட்கிழமை அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது .அங்குள்ள சிங்கம் ஒன்று கடந்த ஆண்டு இறுதியில் இரண்டு வெள்ளை சிங்கக் குட்டிகளை ஈன்றது. இந்த நிலையில் அந்தக் குட்டிகளை திருடும் முயற்சியில்தான் சிங்கம் தாக்கி ஒருவர் உயிரிழந்திருக்கிறார், இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தரப்பில், “பாதுகாப்புப் பகுதியை … Read more

மகளின் கையால் தாயின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட கொடூரம்!

ஈரானில் நடைபெற்ற ஒரு சம்பவம் உங்களை அதிர்ச்சியின் உறைய வைக்கும். அங்கே ஒரு மகள் தவறாக வழிநடத்தப்பட்டதன் காரணமாக, தன் தாயை தூக்கிலிட்டாள். அப்படிச் செய்வதற்கு, ஈரானின் சட்ட விதிகளின் உதவி நாடப்பட்டது, மேலும் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம். ஈரானில் ஒரு காட்டுமிராண்டித்தனமான சட்டம் உள்ளது. அதில் இறந்தவரின் உறவினருக்கு, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க உரிமை உண்டு. இந்தச் சட்டத்தின் விதிகளை பயன்படுத்தி, மகளின் கையால் தாய்க்கு மரண தண்டனை வழங்க முதல் ஆணை பிறப்பிக்கப்பட்டு. பின்னர் … Read more

அமேசானில் 26 ஆண்டுகளாக தனியாக வசித்த பழங்குடி மனிதன் உயிரிழப்பு

அமேசான்: பிரேசிலின் அமேசான் மழைக்காட்டில் கடந்த 26 ஆண்டுகளாக தனியாக வசித்துவந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஆண் உயிரிழந்திருக்கிறார். 1970கள் – 1980களில் ஏஜென்ட்டுகள், நிலப்பிரபுக்கள் அமேசான் பகுதியிலிருந்த பழங்குடியினரைக் கொன்று குவித்தனர். எஞ்சியவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். அப்படி விரட்டப்பட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டும் உயிருடன் தப்பித்தார். அதனைத் தொடர்ந்து பொலிவியாவின் எல்லையான ரொண்டோனியா மாகாணத்தில் உள்ள தனாரு பூர்வீகப் பகுதியில் இவர் வசித்து வந்தார். அவர் எந்த பழங்குடி இனத்தை சேர்ந்தவர், அவர் … Read more

நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம்: சோதனை முயற்சி ஒத்திவைப்பு| Dinamalar

கேப் கனாவெரல் : நிலவுக்கு மனிதனை அனுப்பும், ‘நாசா’வின் புதிய திட்டமான, ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தின் முதல் சோதனை முயற்சி, இயந்திர கோளாறு காரணமாக நேற்று தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா 1969ல் முதன்முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. இந்நிலையில், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தை நாசா துவங்கியது. அது, 2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல்கட்ட சோதனை முயற்சியாக, ஆர்டெமிஸ் – 1 ராக்கெட்டை … Read more

நடுவானில் கடும் சண்டை: விமானிகள் டிஸ்மிஸ்| Dinamalar

ஜெனீவா : விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானி அறைக்குள் சண்டை போட்ட விமானி மற்றும் துணை விமானி, ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டனர். ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இருந்து, பிரான்ஸின் பாரீஸ் நகருக்கு, ஜூனில் ‘ஏர் – பிரான்ஸ்’ விமானம் சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்தில், விமானிக்கும், துணை விமானிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதமாக ஆரம்பித்த சண்டை, ஒரு கட்டத்தில், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் அளவுக்கு, பெரிய சண்டையாக வளர்ந்தது. ஆனாலும், … Read more

உக்ரைனின் குடியிருப்பு பகுதியில் ரஷ்யப் படைகள் தாக்குதல்: இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு!

உக்ரைனின் மைகோலைவ் நகரில் குடியிருப்பு பகுதியில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில்  இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். அங்குள்ள பள்ளிக்கு அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதியை  குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இரு வீடுகள் இடிந்து தரைமட்டமாகின . இந்த தாக்குதலில் வீடுகள், கல்வி நிறுவனங்கள் இடிந்து சேதமடைந்ததாகவும் 24 பேர் காயமடைந்ததாகவும் மேயர் Oleksandr Senkevych தெரிவித்துள்ளார்.    Source link

அமிதாப்புக்கு அமெரிக்காவில் வீட்டு வாசலில் உருவச்சிலை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் : அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி குடும்பம் ஒன்று, தன் வீட்டு வாசலில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் முழு உருவச் சிலையை நிறுவியுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்சியைச் சேர்ந்தவர் கோபி சேத். குஜராத்தைச் சேர்ந்த இவர், 1990ல் அமெரிக்காவில் குடியேறினார். இன்ஜினியரான சேத், அமிதாப் பச்சனின் தீவிர ரசிகர். அவருக்காக, ‘பிக் பி எக்ஸ்டெண்டட் பேமிலி’ என்ற இணையதளத்தை, கடந்த 30 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். … Read more