பாகிஸ்தான் பெருவெள்ளம்: நாட்டின் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளது- மந்திரி தகவல்

லாகூர், பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழையையொட்டி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. இதனால், நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர். பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து, மீட்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி … Read more

உயிரியல் பூங்காவில் பாதுகாப்பு வேலியை தாண்டி குதித்த நபரை கொன்ற சிங்கம்

கானா நாட்டின் அக்ரா நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் பாதுகாப்பு வேலியை தாண்டி குதித்த ஒரு நபரை சிங்கம் கொன்றது. அந்த உயிரியல் பூங்காவில் இரண்டு குட்டிகளுடன் சிங்க ஜோடி ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. நேற்று உயிரியல் பூங்காவை காண வந்த ஒரு நபர் திடீரென சிங்கங்கள் இருந்த பகுதிக்குள் பாதுகாப்பு வேலியை தாண்டி குதித்தார். உள்ளே குதித்த அந்த நபரை சிங்கம் ஒன்று கடித்துக்குதறி கொன்றது. தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் அந்த நபர் நுழைந்தது எப்படி என்பது … Read more

அமேசான் காடுகளில் வாழ்ந்த பழங்குடியினத்தின் கடைசி நபர் மரணம்!

அமேசானில் உள்ள ஒரு பழங்குடியின குழுவின் கடைசி நபராக கருதப்பட்ட அடையாளம் தெரியாத பழங்குடி மனிதர் காலமானார். அவரது மரணம் ஆர்வலர்களிடையே பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. கலைகள் மற்றும் மொழிகளின் பாதுகாப்பிற்காக உழைக்கும் பலர், பிரேசிலிய அமேசான் பழங்குடியினர் அனைவரையும் இழந்துவிட்டதாக வருத்தம் தெரிவித்தனர். இந்த இழப்பு ஒட்டுமொத்த கலாச்சாரத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை என அச்சம் வெளியிட்டனர். மரணித்த பழங்குடி மனிதர், Índio do Buraco அல்லது “பதுங்குகுழியின் பழங்குடி மனிதர்” என்று அறியப்பட்டார் என தி … Read more

ஆரோக்கியமாக இருக்க உண்ணாவிரதம்; நண்பரின் அறிவுறையை பின்பற்றும் Elon Musk!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். அவர் தனது வாழ்க்கை முறை பற்றிய தகவல்களை அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார். தற்போது எலான் மஸ்க் தனது உணவுப் பழக்கம் குறித்து கூறியுள்ளார். அவ்வப்போது உண்ணாவிரதம் இருந்து வருவதால் ஆரோக்கியமாக உணர்கிறேன் என பதிவிட்டுள்ளார். உண்ணாவிரதம் இருக்குமாறு ஒரு நல்ல நண்பர் தனக்கு அறிவுறுத்தியதாக அவர் கூறினார்.  ஜாக் டோர்சி எலோன் மஸ்க்கிற்கு அறிவுரை வழங்கினாரா? எலோன் மஸ்க்கின் இந்த ட்வீட்டை கண்ட … Read more

நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்ப முடியாதா? ஆர்டெமிஸ் 1 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு

ஆர்டெமிஸ்-1 ராக்கெட் மாலை 6 மணிக்கு செலுத்தப்பட இருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 40வது கவுன்டவுனில், ராக்கெட் ஏவுவது நிறுத்தப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்ட பிறகு, ராக்கெட் ஏவப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என நாசா அறிவித்துள்ளது. நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்புவதற்காக நாசா ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கியிருந்தது. 2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப வேண்டும் என்பது நாசாவின் திட்டம். இன்று மாலை 6 மணிக்கு திட்டமிடப்பட்ட புறப்பாட்டுக்கு 40 நிமிடங்களுக்கு முன்பு, திரவ ஹைட்ரஜன் கசிவு … Read more

கழுத்தளவு பாய்ந்த வெள்ள நீரில் நின்று ரிப்போர்ட் செய்த பாகிஸ்தான் செய்தியாளர் | வைரல் வீடியோ

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கழுத்தளவு பாய்ந்து செல்லும் வெள்ள நீரில் தனது உயிரை பணயம் வைத்து செய்தி வழங்கியுள்ளார் செய்தியாளர் ஒருவர். அவரது இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பதிவாகி உள்ளது. சுமார் 9 லட்சம் வீடுகள் மழை மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. 1000 பேர் உயிரிழந்துள்ளனர். காய்கறி மற்றும் பழங்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்தச் … Read more

artemis 1 moon mission: நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் நாசாவுக்கு பின்னடைவு!

50 ஆண்டுகளுக்கு முன்பே நீல் ஆம்ஸ்ராங்கை நிலவுக்கு அனுப்பி ஒட்டுமொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த அமெரிக்கா, தற்போது மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் நிலவில் மனிதர்களை இறக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக, ஆர்ட்டெமிஸ் -1 ராக்கெட்டை இன்று விண்ணில் ஏவ நாசா திட்டமிடப்பட்டிருந்தது. புளோரிடா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஆர்டெமிஸ் -1 நிலவுக்கு செலுத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கான கவுன்ட் டவுனும் சனிக்கிழமை தொடங்கி … Read more

நாசாவின் ஆர்டிமிஸ் 1 ராக்கெட்டின் விண்வெளி ஏவுதல் அமைப்பில் உள்ள ஒரு எஞ்சின் செயலிழந்ததால் ஏவுதலின் கவுண்டவுன் நிறுத்தி வைப்பு

நாசாவின் ஆர்டிமிஸ் 1 ராக்கெட்டின் விண்வெளி ஏவுதல் அமைப்பில் உள்ள ஒரு எஞ்சின் செயலிழந்ததால் ஏவுதலின் கவுண்டவுன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புளோரிடவின் கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து, நாசாவின் அடுத்த தலைமுறை சக்திவாய்ந்த ராக்கெட்டான ஆர்டிமிஸ் 1, ஓரியன் விண்கலத்தை சுமந்து 42 நாட்களில் 65 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து நிலவுக்கு சென்று திரும்பும் வகையில் திட்டமிடப்பட்டது. இந்திய நேரப்படி மாலை சுமார் 6 மணிக்கு ஏவ கவுண்டவுன் துவங்கிய நிலையில், திரவ எரிபொருளை பயன்படுத்தி செயல்படும் … Read more

ஆர்டிமிஸ் 1 ராக்கெட் ஏவும் திட்டம் நிறுத்தி வைப்பு:நாசா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புளோரிடா: நிலவுக்கு மனிதனை மீண்டும் அனுப்பும் திட்டமான ஆர்டிமிஸ்-1 திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது. நிலவில் மனிதனை அனுப்பி ஆராயச்சி செய்ய ஆர்டிமிஸ் 1 எனப்படும் ராக்கெட் நாசா வடிவமைத்துள்ளது. இந்த ராக்கெட்டை ஏவுததற்காக புளோரிடா கென்னடி விண்வெளி மைய ஏவு தளத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை ஒத்திகை பார்க்கப்பட்டு கவுன்ட்டவுன் துவங்கவிருந்த நிலையில் என்ஜின் 3ல் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக … Read more

ஆப்கனில் திரையரங்குகளின் கதவுகளைத் திறந்த தலிபான்கள்… ஆனால், முழுக்க ‘ஆண்கள்’ சினிமா!

காபூல்: ஆப்கனிஸ்தானில் ஓர் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படவுள்ளன. இந்த அறிவிப்பு ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சியிலிருக்கும் தலிபான்களிடமிருந்துதான் வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்தனர். குறிப்பாக, பெண்கள் பர்தா அணிய வேண்டும், பணிக்கு வரக் கூடாது போன்ற தீவிர கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்தனர். தாங்கள் பழைய பாணியில் ஆட்சி செய்ய மாட்டோம் என தலிபான்கள் கூறினாலும், பெண்கள் மீதான அவர்களது ஆதிக்க … Read more